நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

வருமான வரி கணக்குத் தாக்கல்... கவனிக்க வேண்டிய புதிய விதிமுறைகள்!

வருமான வரி
பிரீமியம் ஸ்டோரி
News
வருமான வரி

வருமான வரி

டாக்டர் அபிஷேக் முரளி, ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

வருமான வரி கணக்குத் தாக்கல் (Income Tax Return Filing) செய்வதற்கான விதி முறைகளை மத்திய அரசு அண்மையில் மாற்றி அமைத்திருக்கிறது. ஒரு வருமான வரிதாரராக (Taxpayer or Assessee) நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்து விவரங்களையும் விரிவாகப் பார்ப்போம்.

டாக்டர் அபிஷேக் முரளி 
ஆடிட்டர் & பிரசிடென்ட், 
அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்
டாக்டர் அபிஷேக் முரளி ஆடிட்டர் & பிரசிடென்ட், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கம்

வருமானத்தின் அடிப்படையில் வருமானவரி கணக்குத் தாக்கல்...

மத்திய அரசின் சமீபத்திய மாற்றங்களுக்கு முன், ஒருவரின் வருமானத்தின் அடிப்படையில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

தனிநபர்களைப் பொறுத்தவரை, அவர் களின் நிகர மொத்த வருமானம் (Gross Total Income) ரூ.2.5 லட்சத்துக்குமேல் இருந்தால், அவர்கள் வருமானவரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல், மூத்த குடிமகன் (60 – 80 வயது) ஒருவரின் நிகர மொத்த வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

மிகவும் மூத்த குடிமகனின் (80 வயது மற்றும் அதற்கு மேல்) வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி கணக்குத் தாக்கல்...
கவனிக்க வேண்டிய புதிய விதிமுறைகள்!

புதிய கூடுதல் விதிமுறைகள்...

மேற்கண்ட வருமான வரம்பு தவிர வரி கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியவர்களுக் கான புதிய கூடுதல் விதிமுறைகள் இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நிதி ஆண்டு முழுவதும் (ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை) ஒருவருக்கு வருமானம் எதுவும் இல்லை என்றாலும், பின்வரும் நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று பொருந்தினால் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்வது கட்டாயம் ஆகும்; தவறினால், அபராதம் விதிக்கப்படும்.

1. நிதி ஆண்டில் மூலத்தில் கழிக்கப்பட்ட வரி (Tax Deducted at Source - TDS) அல்லது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி (Tax Collected at Source - TCS) ரூ.25,000 அல்லது அதற்கு மேல் இருந்தால்.

2. நிதி ஆண்டில் சேமிப்பு வங்கிக் கணக்கு களில் செய்யப்பட்ட மொத்த வைப்புத்தொகை (Aggregate Deposits) ரூ.50 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் இருந்தால்.

3. வணிகம்: மொத்த ரசீதுகள் / விற்பனைகள் (Gross Receipts/Sales) ரூ.60 லட்சம் அல்லது அதற்கு மேல் (நஷ்டம் ஏற்பட்டாலும்) இருந்தால்.

4. தொழில்முறை வல்லுநர்கள் (மருத்து வர்கள், வழக்கறிஞர்கள், ஆடிட்டர்கள்...) மொத்த ரசீதுகள் ரூ. 10 லட்சம் அல்லது அதற்கு மேல் (நஷ்டம் ஏற்பட்டாலும்) இருந்தால்.

ஏற்கெனவே அறிமுகமான விதிமுறைகள்...

ஏப்ரல், 2020-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வருமானம் அல்லாத விதிமுறைகள் இனி...

5. நிதி ஆண்டில் செலுத்தப்பட்ட மின் கட்டணங்கள் ரூ.1 லட்சம் அல்லது அதற்கு மேல் (சொந்தமான அல்லது வாடகைக்கு உள்ள அனைத்துச் சொத்துகள்) இருந்தால்.

6. நிதி ஆண்டில் சொந்தச் செலவில் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் அல்லது பிறருக்காகச் செய்யும் வெளிநாட்டுப் பயணச் செலவுகள் ரூ.2 லட்சம் அல்லது அதற்குமேல் இருந்தால்.

7. நிதி ஆண்டில் நடப்புக் கணக்கில் ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட் தொகை செய்திருந்தால் கட்டாயம் வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலே உள்ள அனைத்து விதிமுறைகளிலும் வரிதாரருக்கு என்ன வருமானம் / இழப்பு / அதிகமாக கட்டிய வரியைத் திரும்பப் பெற வேண்டும் (Refund) என்பதைப் பொருட்படுத் தாமல், வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வது அவசியமாகும். இது தொடர்பாக ஏதாவது சந்தேகம் இருந்தால், ஆடிட்டரை அணுகுவது பயனுள்ளதாக இருக்கும்!