
வருமான வரி
பொதுவாக, வருமான வரித் துறை ரீஃபண்ட் தொகை ரூ.10,000-க்குக் கீழே உள்ள ரீஃபண்ட் பணத்தை உடனடியாகத் திரும்பத் தந்து விடுகிறது. ரூ.10,000-க்கு மேல் உள்ள தொகைதான் தவணை களில் திரும்பத் தரப்படுகிறது.

வழக்கமாக, பெங்களூருவில் உள்ள வருமானவரித் துறை யின் மத்திய பரிசீலனை மையத்தில்தான் (Centralized Processing Centre - CPC) வரிதாரரால் தாக்கல் செய்யப் பட்ட வரிக் கணக்குத் தாக்கல் படிவம் (ITR) பரிசீலிக்கப்படும். வரிக் கணக்கு பரிசீலிக்கப் பட்ட 45 நாள்களுக்குள் கூடுத லாகக் கட்டிய வரிப் பணம் வரிதாரரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். அப்படி வரவில்லை எனில், அதற்கு என்ன காரணம் இருக்கலாம் என்று பார்ப்போம்.
1. வருமான வரி பாக்கி...
வருமானத்தை சரியாகக் கணக்கிடாமல், வரி கட்ட வேண்டிய நிலையில் ரீஃபண்ட் கோரிக்கை வைத் திருந்தால், வரித் துறையில் இருந்து வரிதாரருக்கு இ-மெயில் மூலம் நோட்டீஸ் வரும். இந்த மெயில் வந்தபின் வரிதாரர் அவரின் வருமான விவரங்கள், விடுபட்ட வருமானம் மற்றும் ஆவணங் களை சரிபார்க்க வேண்டும். அவற்றில் வேறுபாடு இருந் தால் வரிப் பிரிவு 139(5)-ன் கீழ் திருத்தப்பட்ட வரிக் கணக்கைத் தாக்கல் (Revised Return) செய்ய வேண்டும். அதற்குமுன் கட்ட வேண்டிய வரி ஏதும் விடுபட்டிருந்தால் அதைக் கட்டிவிட வேண்டும்.
2. வங்கிக் கணக்கு சரிபார்ப்பு...
வரிக் கணக்குப் படிவத்தில் கொடுத்திருக்கும் வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பான் விவரங்களைக் குறிப் பிடுவதில் தவறு இருந்தால், வங்கிக் கணக்கு சரிபார்ப்பு செயல்முறை தோல்வி அடையும். இந்த நிலையில், ரீஃபண்ட் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப் படாது. இதே போல், வங்கிக் கிளை குறித்த விவரம் மாறி யிருந்தாலும் ரீஃபண்ட் கிடைக்காது.
வங்கி இணைப்பின் மூலம் ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு (IFSC code) மாறியிருந்தாலும், ரீஃபண்ட் வராது. மேலும், வருமானவரித் துறையின் இணையதளத்தில் புரொஃ பைல் பகுதியில் வங்கி விவரங் கள் என்பதை க்ளிக் செய்து, அதில் புதிய விவரங்களைப் பதிவிட வேண்டும். அதன் பிறகு, ரீஃபண்ட் கோரிக்கை வைக்க வேண்டும்.

3. வரிக் கணக்குத் தாக்கலை உறுதிப்படுத்துதல்...
வரிக் கணக்குத் தாக்கல் செய்த பின் வரிதாரர், அதை அவரே தாக்கல் செய்ததை உறுதிப்படுத்துவது (Verify) அவசியம். அதன்பிறகே வரிக் கணக்குத் தாக்கல் நடை முறை முழுமை அடையும். அப்படி உறுதிப் படுத்த வில்லை எனில், வரிக் கணக்குத் தாக்கல் செய்ததாக எடுத்துக்கொள்ளப்படாது. அதனால் ரீஃபண்ட் நடைமுறையும் மேற்கொள்ளப் படாது. இ-வெரிஃபி கேஷனை உடனடியாக மேற்கொள்வதன் மூலம் அல்லது பெங்களூருவுக்கு வரிக் கணக்குத் தாக்கல் ஆதாரமான படிவம் V-ஐ அனுப்பி வைத்தால் ரீஃபண்ட் கிடைக்க வாய்ப்பு உண்டு.
4. 26AS படிவ விவரங்கள்...
இவை தவிர, வரிக் கணக்குத் தாக்கலில் குறிப்பிடப் பட்டிருக்கும் விவரங்களும் வரிதாரரின் 26AS படிவத்தில் உள்ள விவரங்களும் ஒன்றுபோல இல்லை எனில், ரீஃபண்ட் நடைமுறை தாமதமாகும். தவிர, வரிதாரர் கோரியிருக்கும் ரீஃபண்ட் தொகையும், வரித்துறை திரும்பத் தர வேண்டிய ரீஃபண்ட் தொகையும் வேறுபட்டால், வருமானவரித் துறை கேள்வி எழுப்பி, வரிதாரரின் விளக்கத்துக்குப் பிறகு ரீஃபண்ட் தரும். மேலும், வரிதாரர் கட்ட வேண்டிய ஏதாவது வரி பாக்கி வைத்திருந்து, அதைக் கட்டச் சொல்லி வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருக்கும் பட்சத்தில் அந்தத் தொகைக்கு ரீஃபண்ட் ஈடு கட்டுவதும் நடக்க வாய்ப்பிருக்கிறது.
5. வருமானவரித் துறையின் ஆய்வு...
அதிகமான தொகை ரீஃபண்டாகக் கோரப்பட் டால், அது வருமானவரித் துறையால் ஆய்வு செய்யப் படலாம். அந்த ஆய்வு முடிந்தபின் வரித் துறை யிலிருந்து மெயில் வரும். ஏன் ரீஃபண்ட் தோல்வி அடைந்தது என்பதற்கான காரணத்தை அறிந்து, அதைச் சரிசெய்து மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
வருமான வரி ரீஃபண்ட் நிலையை எப்படி அறிவது?
வருமான வரி ரீஃபண்ட் ஸ்டேட்டஸை எப்படி அறிவது? இதற்கு வருமானவரித் துறையின் இ-ஃபைலிங் இணையத்துக்குள் யூசர் ஐ.டி, பாஸ் வேர்ட் கொடுத்து நுழைய வேண்டும். My Account என்பதை க்ளிக் செய்தால் ‘Refund/Demand Status’ என வரும், இதை க்ளிக் செய்தால் விவரங்கள் காட்டப் படும். அதில் மதிப்பீட்டு ஆண்டு, காரணம் (ரீஃபண்ட் ஃபெயில் ஆகியிருந்தால்) காட்டப்படும். இதற்கான இந்திய வருமானவரித் துறையின் இணைப்பு: https://www.incometaxindia.gov.in/Pages/tax-services/status-of-tax-refund.aspx