பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

மாறும் தொழில் சூழல்... அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு..!

முதலீடு
பிரீமியம் ஸ்டோரி
News
முதலீடு

முதலீடு

கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா - உக்ரைன் போர் எனப் பல்வேறு காரணங் களால் இந்தியாவில் வெளியேறிய அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியப் பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டு முதலீடு செய்யத் தொடங்கியிருக்கின்றனர். அந்நிய நேரடி முதலீடு மூலமாக, தனியார் பங்கு மூலதனமாகவும், வென்சர் கேப்பிடல்கள் மூலமாகவும் 27.6 பில்லியன் டாலரைத் தற்போது முதலீடு செய்துள்ளனர்.

பல்வேறு குறுகிய கால நெருக்கடிகள் வந்தாலும் நீண்டகால அடிப்படையில் இந்தியா வளர்ச்சியின் பாதையில் இருக்கும் என அந்நிய நேரடி முதலீட்டாளர்கள் கருது கிறார்கள். அந்நிய நேரடி முதலீடு இந்தியாவுக் குள் அதிகமாகக் குவிந்துகொண்டிருக்கிறது. இந்த முதலீடு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் 15.5% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 526 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 713 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மாறும் தொழில் சூழல்... அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு..!

இந்தியாவில் செய்யப்பட்டுள்ள முதலீடு களில் அதிக முதலீடுகளை ஈர்த்த நிறுவனமாக ரிலையன்ஸ் குழுமத்தின் வயாகாம் உள்ளது. இந்த நிறுவனம் 1.8 பில்லியன் டாலர் முதலீட் டைப் பெற்றுள்ளது.

புதிய பிசினஸ் மாடல்களும், தொழில்நுட்பம் சார்ந்த பிசினஸ்களும் அதிக அளவில் தனியார் பங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளன. ஆசியாவின் பிற நாடுகளுக்குச் சென்றுகொண்டிருந்த முதலீடுகள் இப்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளன. ஆசியாவிலேயே அதிகமான முதலீடுகளை ஈர்க்கும் நாடாகவும் இந்தியா திகழ்கிறது.

இந்த முதலீடுகள் அனைத்தும் இந்தியாவின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்குக் கொண்டு செல்வதற்கான அடித்தளமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியா முழுக்க தொழில் சூழல் சிறப்பாக மாறிவருகிறது. அந்நிய நேரடி முதலீடு இனிவரும் காலத்தின் இன்னும் அதிகரிக்கவே செய்யும்!