நடப்பு
பங்குச் சந்தை
தொடர்கள்
Published:Updated:

கோடிகளைக் குவிக்க உதவும் கூட்டு வட்டி அதிசயம்!

கூட்டு வட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
கூட்டு வட்டி

கூட்டு வட்டி

ஜி.சோலை, நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

நோபல் பரிசு பெற்ற அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் எட்டாவது அதிசயம் எனக் கூட்டு வட்டியை (Compound Interest) குறிப்பிடுகிறார். கூட்டு வட்டி என்றால் என்ன? முதலீட்டின் மூலம் ஆண்டுதோறும் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் முதலீடு செய்து கிடைக்கும் வருமானம்தான் கூட்டு வட்டி வருமானம். ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

ஜி.சோலை 
நிறுவனர், 
பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.
ஜி.சோலை நிறுவனர், பசிபிக் வேலி ஃபைனான்ஷியல் சர்வீஸ், கோயம்புத்தூர்.

1 லட்சம் ரூபாய்... 17 லட்சமான அதிசயம்..!

ஒருவர் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறார். இதற்கு 10% வட்டி அல்லது வருமானம் கிடைக் கிறது என வைத்துக்கொள் வோம். ஆண்டு இறுதியில் ரூ.1 லட்சம் முதலீட்டின் மதிப்பு 1,10,000 ரூபாயாக அதிகரித்திருக்கும். அதாவது, முதலீடு ரூ.1,00,000, வட்டி வருமானம் ரூ.10,000 சேர்ந்து ரூ.1,10,000 ஆகியுள்ளது. இந்த முதலீட்டுத் தொகைக்கு இரண்டாம் ஆண்டு வட்டி ரூ.11,000 கிடைக்கும்.

இப்படியே பத்து ஆண்டு களுக்குத் தொடர்ந்தால், பத்தாவது ஆண்டில் முதலீட் டின் மூலமாகக் கிடைக்கும் வட்டி மட்டும் ரூ.23,580; இருபதாவது ஆண்டில் வட்டி ரூ.61,160; முப்பாதாவது ஆண்டில் கிடைக்கும் வட்டி ரூ.1,58,630 ஆகும். ரூ.1 லட்சம் முதலீடு, ஆண்டுக்கு 10% வளர்ச்சியில் 30-வது ஆண்டில் ரூ.17.45 லட்சமாக பெருகியிருக்கும்.

கோடிகளைக் குவிக்க உதவும் கூட்டு வட்டி அதிசயம்!

அதிக பணம் சேர்க்க ஆசையா?

ஒருவர் எவ்வளவு சீக்கிரம் முதலீட்டை ஆரம்பித்து, அதை எவ்வளவு காலத்துக்குத் தொடர்ந்து வைத்திருக்கிறாரோ அந்தளவுக்கு அவரிடம் அதிக மான பணம் இருக்கும். இதை ஓர் உதாரணம் மூலம் பார்ப்போம்.

முருகன், தியாகு, ஹரி மூவரும் 22 வயதில் வேலைக் குச் சேர்கிறார்கள். மூவருக்கும் ஆரம்பச் சம்பளம் மாதம் ரூ.30,000. முருகன் தன் 22-வது வயதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என 28-வது வயது வரை ஏழு ஆண்டுகளில் ரூ.7 லட்சம் முதலீடு செய்கிறார். அதன் பிறகு அந்தப் பணத்தை எடுக்காமல் அவரது 64 வயது வரை தொடர்கிறார். தியாகு தனது 29-வது வயதில் முதலீட்டை ஆரம்பிக்கிறார். இவரும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் என 36 ஆண்டுகளுக்கு அதாவது, 64 வயது வரை தொடர்கிறார். ரூ.36 லட்சம் முதலீடு செய்கிறார். ஹரி தன் 22-வது வயதில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீட்டை ஆரம்பித்து, 64 வயது வரைக்கும் ரூ.43 லட்சம் வரை முதலீடு செய்கிறார்.

கோடிகளைக் குவிக்க உதவும் கூட்டு வட்டி அதிசயம்!

தொகுப்பு நிதி எவ்வளவு?

இவர்கள் மூவரும் மியூச்சுவல் ஃபண்டில் அதிக ரிஸ்க் இல்லாத பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்டில் முதலீடு செய்திருக்கிறார்கள் எனவும், அது ஆண்டுக்கு சராசரியாக 10% வருமானம் கொடுத்திருப்பதாகவும் வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், யாருடைய தொகுப்பு நிதி மிக அதிகமாக இருக்கும். ரூ.7 லட்சம் முதலீடு செய்தவருக்கா, ரூ.36 லட்சம் முதலீடு செய்தவருக்கா, அல்லது ரூ.43 லட்சம் முதலீடு செய்தவருக்கா?

முருகனின் கணக்கில் 65-வது வயதில் ரூ.3.54 கோடி இருக்கும். தியாகுவின் தொகுப்பு நிதி ரூ.3.29 கோடி யாகவும், ஹரியின் தொகுப்பு நிதி ரூ.6.52 கோடியாகவும் இருக்கும். ஹரியின் தொகுப்பு நிதி மிக அதிகமாக இருக்கக் காரணம், அவர் முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பித்ததுடன், தொடர்ந்து அதிக காலத்துக்கு அதிக முதலீட்டை செய்ததுதான்.

முருகன் முதலீட்டை சீக்கிரமாக ஆரம்பித்ததால் அவருக்கும் அதிக தொகுப்பு நிதி சேர்ந்திருக்கிறது. தியாகு செய்த முதலீட்டுத் தொகை, முருகன் செய்த முதலீட்டுத் தொகையைவிட சுமார் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தும், அவருக்குக் குறைவான தொகுப்பு நிதியே சேர்ந்துள்ளது. இதற்குக் காரணம், முருகனின் ரூ.7 லட்சம் முதலீடானது ரூ.10.2 லட்சமாக பெருகிய நிலையில்தான், தியாகு முதலீட்டை ஆரம்பித்துள்ளார். ஆக, சீக்கிரமாக முதலீட்டை ஆரம்பிப்பதுடன், அந்த முதலீட்டை நீண்ட காலம் தொடர்வதன் மூலமும், அந்த முதலீட்டை எடுக்காமல் கடைசி வரை வைத்திருப்பதன் மூலமும் பெரும் பணம் சம்பாதிக்க முடியும்!