பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

கிரிப்டோகரன்சி... இனி கே.ஒய்.சி கட்டாயம்..!

கிரிப்டோகரன்சி
பிரீமியம் ஸ்டோரி
News
கிரிப்டோகரன்சி

கிரிப்டோகரன்சி முதலீடுகள் தொடர்பான புகார்களை, கறுப்புப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கையாள்வதற்குரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற் கொண்டுள்ளது.

இளைஞர்கள் அதிகம் விரும்பும் கிரிப் டோகரன்சி குறித்து முக்கியமான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் வெளி யிட்டுள்ளது. அதன்படி, கிரிப்டோகரன்சி களில் பணம் போடும் வாடிக்கையாளர்கள் தங்களைப் பற்றிய சுய விவரங்களைக் கட்டா யம் தர வேண்டும் என்பதே அந்த அறிவிப்பு.

கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு ஆதர வாகவும் எதிர்ப்பாகவும் பலரும் தங்கள் கருத்து களைத் தெரிவித்துவரும் நிலையில், கிகிரிப்டோகரன்சி முதலீடுகள் தொடர்பான புகார்களை, கறுப்புப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் கையாள்வதற்குரிய நடவடிக்கையை மத்திய அரசு மேற் கொண்டுள்ளது. கிரிப்டோ வர்த்தகத்தில் கறுப்புப் பணப் பரிமாற்றங்களைத் தடுக்கும் வகையில் அதில் வர்த்தகம் செய்யும் வாடிக்கை யாளர்களின் விவரங்களை கிரிப்டோ வர்த்தக சேவை நிறுவனங்கள் பெற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கிரிப்டோகரன்சி... இனி கே.ஒய்.சி கட்டாயம்..!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘‘கிரிப்டோகரன்சி போன்ற டிஜிட்டல் சொத்துப் பரிவர்த்தனை சேவை களை வழங்கிவரும் நிறுவனங்கள், தரகு அமைப்புகள் இனி கறுப்புப் பண தடுப்புச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பரிமாறும் அமைப்புகளாகச் செயல்பட வேண்டும். அதாவது, கிரிப்டோ பரிவர்த்தனைகளில் சந்தேகத்துக்கு இடமான பரிவர்த்தனைகள் நடந்தால், அதுதொடர்பான விவரங்களை வருமான வரித் துறை உள்ளிட்ட கண்காணிப்பு அமைப்புகளுக்கு வழங்க வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்களின் கே.ஒய்.சி விவரங் களைச் சேகரித்து வைக்க வேண்டும். அனைத்து கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தொடர்பான தகவல்களையும் ஐந்து ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

ஊழல், கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கு வது, தீவிரவாத செயல்களுக்கு உதவுவது போன்ற பல்வேறு சட்ட விரோத செயல்களில் கிரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்படுவ தாகக் கூறப்படுகிறது. எனவே, இவற்றைத் தடுக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது!