தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

நிதிப் பாதுகாப்பை விரும்பும் சென்னைவாசிகள்!

சந்திரமோகன் மெஹ்ரா
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரமோகன் மெஹ்ரா

தென் இந்திய அளவில் 52% பேர் தங்கள் லட்சியங்களை அடைவதில் நம்பிக்கையாக இருக்கின்றனர்!

பஜாஜ் அலையன்ஸ் (Bajaj Allianz) நிறுவனம் 2018-ம் ஆண்டு முதல் வாழ்க்கை இலக்குக்கான தயார்நிலை (Life Goal Preparedness Survey) சர்வேயை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த சர்வே, தென் இந்திய மக்கள் தங்களின் வாழ்க்கை இலக்குகளை அடைய எவ்வாறு தயாராக இருக் கிறார்கள் என்பதைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறது.

இந்த சர்வே முடிவுகளை வெளியிட்ட பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்தின் சீஃப் மார்க்கெட்டிங் ஆபிஸர் சந்திரமோகன் மெஹ்ரா பேசியதாவது... ‘‘இந்த சர்வேயானது மெட்ரோ, டயர் 1, டயர் 2 நகரங்களைச் சேர்ந்த 1,936 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. இந்த சர்வேயின்படி, இந்தியா முழுவதும் 74% மக்கள் குறிப்பாக, சென்னையில் 76% மக்கள் குடும்பத்தின் நிதிப் பாதுகாப்பையே முதன்மையாகக் கருதுகின்றனர். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சமூகத் தொண்டு, ஓய்வுத் திட்டம் ஆகியவற்றுக்கு அடுத்தடுத்து முன்னுரிமை தருகின்றனர்.

சந்திரமோகன் மெஹ்ரா
சந்திரமோகன் மெஹ்ரா

இந்த சர்வேயின்படி, சுமார் 30% தென் இந்தியர்களும், 43% சென்னைவாசிகளும் போதிய பணவசதியுடன் ஓய்வு பெற விரும்பு கிறார்கள். 73% தென் இந்தியர்கள் ஆரோக்கிய மாக இருப்பதை வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளனர். இரண்டில் ஒரு தென் இந்தியர் உடலளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாக சொல்லியிருக்கின்றனர். சுற்றுலாப் பயணம் மேற்கொள்வதை தங்கள் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டிருப்ப தாக சென்னையில் 55% பேரும், பெங்களூருவில் 59% பேரும் சொல்லியிருக்கின்றனர்.

தென் இந்திய அளவில் 52% பேர் தங்களின் லட்சியங்களை அடைவதில் நம்பிக்கையாக இருப்பதாகவும், 65% பேர் தங்கள் லட்சியங் களை அடைய தங்களிடம் போதுமான நிதி இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்’’ என்றார் அவர். இந்த சர்வேயைப் படிக்கும் நீங்கள், உங்கள் லட்சியம் என்ன என்பது குறித்து எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா..?