தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

தற்போதைய நிலையில் முதலீடு செய்ய வேண்டிய ஃபண்டுகள்..!

ஸ்வரூப் மொஹந்தி
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்வரூப் மொஹந்தி

சிறப்புப் பேட்டி

மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கால் நூற்றாண்டுக்கும் மேல் அனுபவம் கொண்டவரும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியுமான ஸ்வரூப் மொஹந்தி அண்மையில் சென்னை வந்திருந்தார். அவர் நமக்கு அளித்த சிறப்புப் பேட்டி...

கோவிட் 19 பரவல் மற்றும் பாதிப்புக்குப் பிறகு இந்தியர்களின் முதலீட்டு மனநிலையில் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது?

“கொரோனா பாதிப்பு என்பது உலகம் முழுவதும் நிதி சார்ந்த விஷயங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பெரும்பாலா னோர் தேவைக்கும் விருப்பத் துக்கும் (Need and Want) உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு சிறப்பாகச் செயல்பட ஆரம்பித்திருக் கிறார்கள். தேவைக்கு மட்டுமே செலவு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும், நிதி அறிவு முன்பை விட அதிகரித்துள்ளது.

கோவிட் காலத்தில் ரியல் எஸ்டேட், தங்க நகை போன்ற பிசிக்கல் சொத்துகளை விற்றுப் பணமாக்க முடிய வில்லை. இந்தக் காரணங் களால் இந்தியர்களின் முதலீடு, நிதி சார்ந்த திட்டங் களில் அதிகரித்து உள்ளது. 2020 ஏப்ரல் முதல் 2021 ஜனவரி வரையிலான 10 மாத காலத்தில் மட்டுமே புதிதாக பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய 1.07 கோடி டீமேட் கணக்குகள் ஆரம்பிக் கப்பட்டுள்ளன. முன்பைவிட சிறு முதலீட்டாளர்களின் பங்களிப்பு நிதி சார்ந்த திட்டங்களில் மிகவும் அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம்தோறும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட் மென்ட் பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் ரூ.13,000 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் முக்கிய மான மாற்றங்களாகக் குறிப்பிடலாம்.”

ஸ்வரூப் மொஹந்தி
ஸ்வரூப் மொஹந்தி

எஸ்.ஐ.பி முதலீடு வெகுவாக அதிகரித்திருப்பது பற்றி...

‘‘தற்போது இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டில் எஸ்.ஐ.பி முறையில் மாதம் செய்யப்படும் முதலீடு சராசரியாக ரூ.2,300-ஆக உள்ளது. இது மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்டில் ரூ.6,200-ஆக உள்ளது.

ஒருவருக்கு குழந்தை பிறந்தவுடன் முதல் ஆண்டில் (வயதில்) மாதம்தோறும் ரூ.1,000, இரண்டாம் ஆண்டில் ரூ.2,000, மூன்றாம் ஆண்டில் ரூ.3,000 என ஆண்டுதோறும் 1,000 ரூபாயை அதிகரித்து முதலீடு செய்துவந்தால், குழந்தை வளர்ந்து கல்லூரிக்குச் செல்லும்போது கணிசமான தொகை சேர்ந் திருக்கும். இந்தப் பணத்தை எடுத்து, கல்விச் செலவுக்குத் தாராளமாகச் செலவு செய்யலாம்.’’

பாஸிவ் ஃபண்ட், ஆக்டிவ் ஃபண்ட்... சிறு முதலீட்டாளர்களுக்கு எது ஏற்றதாக இருக்கும்?

“நம் நாட்டில் ஃபண்ட் மேனேஜர்கள் மிகவும் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். அவர்கள் பல ஃபண்டுகளில் பெஞ்ச்மார்க் இண்டெக்ஸைவிட அதிக வருமானத்தைத் தந்து வருகிறார்கள். பாஸிவ் ஃபண்டுகள் அது சார்ந்திருக்கும் குறியீட்டின் வருமானத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. இவற்றில் ரிஸ்க் குறைவு; வருமானமும் குறைவாகக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சிறு முதலீட்டாளர்கள் சராசரியாக நல்ல வருமானம் பெற பாஸிவ் ஃபண்ட் மற்றும் ஆக்டிவ் ஃபண்டுகளில் கலந்து முதலீடு செய்வது நல்லது.

சிறு முதலீட்டாளர்கள் நிஃப்டி 50 பாஸிவ் ஃபண்ட் மற்றும் நெக்ஸ்ட் 50 ஆக்டிவ் ஃபண்டில் கலந்து முதலீடு செய்தால் நல்ல வருமானம் பெற முடியும்.”

அடுத்த 3 - 5 ஆண்டுகளில் எந்த மாதிரியான துறைகள் சிறப்பாகச் செயல்படும்?

“மருத்துவப் பராமரிப்பு, உள்கட்டமைப்பு, தகவல் தொழில் நுட்பம், உற்பத்தி ஆகிய துறைகள் அடுத்து வரும் ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சியைப் பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.”

தற்போதைய நிலையில் சிறு முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தை ஃபண்ட் வகைகளைக் குறிப்பிட முடியுமா?

“இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) என்பது தற்போது 3.4 லட்சம் கோடி டாலராக உள்ளது. இது அடுத்த பத்தாண்டுகளில் 8.5 லட்சம் கோடி டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியில் அனைத்துத் துறைகள் மற்றும் அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களும் பங்கேற்கும் என எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில், இந்திய பங்குச் சந்தையும் சிறப்பான வளர்ச்சியைப் பெறும். அனைத்து பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் ஃபிளெக்ஸி கேப் ஃபண்ட் நல்ல லாபம் தரும் என எதிர்பார்க்கலாம். இந்த ஃபிளெக்ஸிகேப் ஃபண்டில் ஸ்மால்கேப், மிட்கேப் மற்றும் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளில் ஃபண்ட் மேனேஜர் அவரின் எதிர்பார்ப்பு மற்றும் கணிப்புக்கேற்ப முதலீடு செய்ய முடியும் என்பதால், அதிக லாபம் ஈட்ட வாய்ப்புள்ளது. இந்த ஃபண்டில் ரிஸ்க்கைக் குறைக்க எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரலாம்.

கடன் ஃபண்டுகள் என்கிறபோது டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இந்த ஃபண்ட் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யும் மற்றும் எப்போது வேண்டுமானாலும் முதலீட்டை வெளியில் எடுக்கும் ஓப்பன் எண்டெட் வகையைச் சேர்ந்தது. அதே நேரத்தில், இந்த ஃபண்டில் ஆரம்பத்தில் சேர்ந்து அதன் முதிர்வு வரை முதலீட்டைத் தொடர்ந்தால் முழுப் பலனை அடைய முடியும்.

இந்த ஃபண்டில் அதன் முதிர்வுக்காலமும், முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் பணம் முதலீடு செய்யப்படும் கடன் பத்திரங்களின் முதிர்வுக்காலமும் கிட்டத் தட்ட ஒன்றாக இருக்கும். அந்த வகையில் ரிஸ்க் என்பது குறைவாக இருக்கிறது. மூன்றாண்டுகள் மற்றும் அதற்கு மேற்பட்டு பணம் தேவைப்படும் சிறு முதலீட் டாளர்கள் இந்த டார்கெட் மெச்சூரிட்டி கடன் ஃபண்டில் முதலீடு செய்வது லாபகரமாக இருக்கும். மூன்றாண்டுகள் கழித்த நிலையில், நீண்ட கால மூலதன ஆதாயத்துக்கு பணவீக்க சரிக்கட்டலுக்குப் பிறகு, 20% வருமான வரி கட்டினால் போதும்.”

உங்களின் சொந்தப் பணத்தை எப்படி முதலீடு செய்திருக்கிறீர்கள்?

‘‘என் மொத்த முதலீட்டுத் தொகையில் 70 சதவிகிதத்தை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் 30% தொகையைக் கடன் ஃபண்டுகளிலும் முதலீடு செய்திருக்கிறேன்.”

உங்களுக்குப் பிடித்த முதலீட்டு மந்திரம் எது?

“ ‘முதலீட்டில் தொடர்ந்து இருங்கள்’ (Stay Inveset) என்பது எனக்கு மிகவும் பிடித்த மந்திரம் ஆகும். இதன் அர்த்தம் முதலீடு செய்வதற்கு நேரம் பார்ப்பதற்கு பதில் முதலீட்டை நீண்ட காலத் துக்குத் தொடருங்கள் என்பதே. முதலீட்டை நீண்ட காலத்துக்குத் தொடர்ந்தால் மட்டுமே கூட்டு வளர்ச்சி என்கிற ‘பவர் ஆஃப் காம்பவுண்டிங்’ தரும் முழுப் பலன் கிடைக்கும்.’’