பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்கைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்?

 ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
பிரீமியம் ஸ்டோரி
News
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

முதலீடு

மியூச்சுவல் ஃபண்டில் புதிதாக முதலீடு செய்பவர்கள், ‘அது ரிஸ்க்கான முதலீடாச்சே! ரிஸ்க்கை எப்படிக் குறைப்பது என்று கேட்கிறார்கள். இந்தக் கேள்விக்கான பதில், சில நாள்களுக்கு முன்பு, நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு... ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானம்..!’ என்கிற நிகழ்ச்சியில் கிடைத்தது. ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி இந்தக் கேள்விக்கு பதில் சொன்னார்.

 ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி
ஏ.கே.நாராயண், ஜீவன் கோஷி

“ரிஸ்க்கைக் குறைக்க, முதலீட்டைப் பல்வேறு சொத்துகளில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும். முதலீட்டுத் தொகையில் குறிப்பிட்ட சதவிகிதத்தைக் கடன் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும். மொத்த முதலீட்டை மேற் கொள்வதற்குப் பதில், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (எஸ்.டி.பி) முறையில் முதலீடு செய்யலாம். குளோபல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலமும் ரிஸ்க்கைக் குறைக்க முடியும்’’ என்றார் அவர்.

கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கும்போது, முதலீட்டு ஆலோசகர் ஏ.கே.நாராயண் (Aknarayanassociates.com), ‘‘ஒரு காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் திட்டத்துக்கு 12% அளவுக்கு வருமானம் கிடைத்தது. இப்போது இவற்றின் மூலமான வருமானம் சுமார் 5% - 7% அளவுக்குக் குறைந்துவிட்டதால், நவீன முதலீடு களான நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்டுகளில் பலரும் முதலீடு செய்ய ஆரம்பித் திருக்கிறார்கள். ஒருவரின் ஒட்டுமொத்த போர்ட்ஃபோலியோவில் ரிஸ்க்கைக் குறைக்க கடன் ஃபண்டுகள், தங்கம் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும். கடன் ஃபண்டுகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேற்பட்டு முதலீடு செய்யும்போது, நீண்ட கால மூலதன ஆதாயத் துக்குப் பணவீக்க விகித சரிகட்டலுக்குப் பிறகு, 20% வருமான வரி கட்டினால் போதும். கடன் ஃபண்டுகள் வரிக்குப் பிந்தைய நிலையில், ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கொடுப்பவையாக இருக்கின்றன” என்றார்.

இந்த நிகழ்வை வீடியோவில் காண https://bit.ly/3bOUATV