பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பங்கு, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட்... பிரித்து முதலீடு செய்தால் லாபம்..!

விழிப்புணர்வு கூட்டத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு கூட்டத்தில்...

விழிப்புணர்வு

கடந்த ஜுலை 23-ம் தேதி மாலை சென்னையிலும், 24-ம் தேதி காலை காஞ்சிபுரத்திலும் நாணயம் விகடனும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமும் இணைந்து, ‘முதலீட்டைப் பிரித்து முதலீடு செய்வதன் முக்கியத்துவம்’ என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தின.

இந்த நிகழ்ச்சிகளில் முதலில் பேசினார் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இன்வெஸ்டர் எஜுகேஷன் மற்றும் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் டெவெலப்மென்ட் பிரிவின் தலைவர் கே.எஸ்.ராவ்.

விழிப்புணர்வு கூட்டத்தில்...
விழிப்புணர்வு கூட்டத்தில்...

‘‘ஒருவர் காலை உணவாக இட்லியைத் தேர்வு செய் கிறார் எனில், அதற்கு சட்னி, சாம்பார், இட்லிபொடி ஆகியவற்றைத் தேர்வு செய் வார் இல்லையா... காரணம் நன்றாக ருசித்து சாப்பிட முடியும். அதுபோல முதலீட் டாளர்கள் தங்களின் முதலீடுகளை பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் என அனைத் திலும் பிரித்து முதலீடு செய்தால், ரிஸ்க்கைக் குறைத்து கூடுதல் லாபத்தை அனுபவிக்க முடியும்’’ என எளிமையான உதாரணங் களுடன் அவர் விளக்கிப் பேசியதை பார்வையாளர்கள் ரசித்துக் கேட்டனர்.

அடுத்தபடியாக இந்த நிகழ்ச்சியில் பேசினார் ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏ.எம்.சி-யின் பிராந்திய மேலாளர் எஸ்.குருராஜ், ‘‘முதலீட்டில் ரிஸ்க் எடுப்பவர் கள் அதிகம் சம்பாதிக்கிறார் கள். தனது முதலீடு பாது காப்பாக இருந்தால் போதும் ரிஸ்க் எடுக்க மாட்டேன் என்பவர்கள் குறைவான லாபத்தைப் பெறுகிறார்கள். தாங்கள் செய்யும் முதலீட் டின் மூலம் அதிக லாபம் வேண்டுமா, பாதுகாப்புடன் குறைவான லாபம் போதுமா என்பதை முதலீட்டாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எந்தவொரு முதலீட்டை நீங்கள் தேர்வு செய்தாலும், அதுபற்றி முழுமையாக இல்லாவிட் டாலும் ஓரளவுக்கேனும் விவரங்களைத் தெரிந்து கொண்டு முதலீடு செய்யும் போது நஷ்டம் வராமல் பார்த்துக்கொள்ளலாம்” என்றார்.

இவருக்கு அடுத்து பேசிய பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பன், “நாம் எதை நம்ப வேண்டும் என முடிவு செய்கிறோமோ, அதை மட்டுமே நம்பிக்கொண்டிருக்கிறோம். தங்கம் முதலீட்டைப் பெருக்கும் என நம்புவதாலும், ரியல் எஸ்டேட் நல்ல லாபத்தைத் தருகிறது என நம்புவதாலும் மட்டுமே அதில் அதிகம் முதலீடு செய்கிறோம்.

ஆனால், உண்மை வேறாக இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாகத் தங்கத்தையும், ரியல் எஸ்டேட் டையும் முதலீட்டுக்காக அணுகியவர்களுக்கு அவ்வளவாக லாபம் கிடைக்கவில்லை. ஆனால், பங்குச் சந்தையும், மியூச்சுவல் ஃபண்டும் சந்தை பெரும் இறக்கத்தை சந்தித்து மீண்டுவந்து முதலீட்டாளர்களுக்குப் பல மடங்கு லாபத்தைத் தந்துள்ளது.

விழிப்புணர்வு கூட்டத்தில்...
விழிப்புணர்வு கூட்டத்தில்...

இதற்காக எல்லாப் பணத்தையும் பங்குகள் மற்றும் பங்குச் சந்தையில் போடச் சொல்லவில்லை. உங்கள் வயது, ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப எல்லாவற்றிலும் பிரித்து முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். ‘‘இலங்கை மாதிரி இந்தியப் பொருளாதாரம் திவால் ஆகுமா’’ என ஒருவர் கேட்க, ‘‘தற்போது இந்தியாவில் நான்கு மாநிலங்கள்தான் அதிக அளவில் கடன் வாங்கி யுள்ளன. மற்ற மாநிலங்களின் கடன் அளவு கட்டுப் பாட்டிலேயே உள்ளன. எனவே, இலங்கை மாதிரி யான நிலை நம் நாட்டில் இப்போதே ஏற்பட்டுவிடும் என்று சொல்ல முடியாது’’ என்றார் நாகப்பன்.

இன்னொரு வாசகர் ரெய்ட் (REIT) ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் பற்றிக் கேட்க, ‘‘குறைந்த முதலீட்டில் ரியல் எஸ்டேட் திட்டத்தில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு’’ என்று பதில் தரப்பட்டது.

பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னென்ன என்று கேட்க, முக்கியமான புத்தகங்களின் பட்டியலைத் தந்தார் நாகப்பன். மழையையும் பொருட்படுத்தாமல் இந்தக் கூட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் திரண்டு வந்திருந்தது ஆச்சர்யம் தருவதாக இருந்தது.