Published:Updated:

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்! #DoubtOfCommonMan

மியூச்சுவல் ஃபண்ட் ( vikatan )

இன்றைய கார்ப்பரேட் உலகில் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வருமானத்தைச் சேமித்து, முறையாக முதலீடு செய்யும் விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு எதிர்கால சேமிப்பு குறித்த கவலை அதிகமாக இருக்கிறது.

Published:Updated:

அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறத்தக்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்! #DoubtOfCommonMan

இன்றைய கார்ப்பரேட் உலகில் சம்பாதிக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அந்த வருமானத்தைச் சேமித்து, முறையாக முதலீடு செய்யும் விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. குறிப்பாக, அரசு ஊழியர்களுக்கு எதிர்கால சேமிப்பு குறித்த கவலை அதிகமாக இருக்கிறது.

மியூச்சுவல் ஃபண்ட் ( vikatan )
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் வாசகி உஷா, எதிர்காலச் சேமிப்பு குறித்த ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். "என் வயது 55. நான் பொதுத்துறை நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். எனக்கு ஓய்வூதிய பலன் எதுவும் கிடையாது. 60 வயதில் ஓய்வுபெறும்போது ஓய்வூதியம் பெறத்தக்க வகையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இருந்தால் பரிந்துரைக்கவும்..." – இதுதான் அவரது கேள்வி.
எஸ்.ராமலிங்கம்
எஸ்.ராமலிங்கம்
vikatan

இந்தக் கேள்வியை நிதி ஆலோசகர் எஸ்.ராமலிங்கத்தின் முன்வைத்தோம். விரிவாகப் பேசினார் அவர்.

"பொதுவாக, வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் காலத்திலேயே முதலீட்டைத் தொடங்குவதுதான் எதிர்காலத்துக்குப் பாதுகாப்பு. முதலீட்டுக்காலம் குறைவாக இருந்தால் வருமானமும் குறைவாகவே இருக்கும். வருமானம் அதிகம் தேவையென்றால், முதலீட்டை அதிகரிக்க வேண்டும். இதுதான் அடிப்படை. நீங்கள் 55 வயதில் ஓய்வு காலத்துக்கான வருமானம் குறித்து கேட்டிருப்பது சற்று காலம்தாழ்த்திய சிந்தனைதான். இருந்தாலும், இப்போதும்கூட எதிர்கால வருமானத்துக்கு வழிகள் உள்ளன.

"'Better late than never' என்ற ஆங்கிலப் பழமொழி உங்களுக்குப் பொருந்தும். நீங்கள் பணியில் சேர்ந்தபோது (30 வயது). மாதந்தோறும் 1000 ரூபாயை எஸ்.ஐ.பி முறையில் ஒரு ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யத் தொடங்கியிருந்தால் இன்று (25 வருடங்கள்) உங்கள் கையில் தோராயமாக ரூ.17 லட்சம் (ஆண்டு வருமானம் 12% சி.ஏ.ஜி.ஆர்) இருந்திருக்க வாய்ப்பு உண்டு. அதையே இன்னும் 5 வருடங்களுக்குத் தொடரும் பட்சத்தில் ரூ.30,80,000 ஆக வளர வாய்ப்புண்டு. இதுதான் 'Power of compounding' எனப்படும் கூட்டுவட்டியின் மகத்துவம்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

இதேபோல் உங்களது 40 வயதில் இன்னொரு மாத எஸ்.ஐ.பியாக ரூ.2000 ஆரம்பித்து இருந்தால் 20 வருடங்களில் தோராயமாக ரூ.18,39,000 (ஆண்டு வருமானம் 12 % சி.ஏ.ஜி.ஆர் கணக்கில்) கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆக, இரண்டும் சேர்த்து 18,90,000 + 30,80,000 = 49,70,000 ரூபாய் கிடைத்திருக்கக்கூடும். இதை மொத்த முதலீடாக வைத்து, மாத ஓய்வூதியமாக எஸ்.டி.பி அல்லது எஸ்.டபுள்யூ.பி (STP/Systematic Withdrawal Plan) மூலமாக மாதம் 33,000 ரூபாயை உங்களுடைய 61வயதிலிருந்து பெற்றிருக்கமுடியும்.

பரவாயில்லை. தற்போது உங்கள் வசம் இருப்பது 5 ஆண்டுகள் மட்டுமே. இந்த இடைப்பட்ட நேரத்தில் அதிக அளவிலான ஓய்வூதியத்தை எதிர்பார்த்தால் உங்களுடைய மாதாந்திர முதலீடும் அதிகமாக இருக்கவேண்டும். ஆனால், உங்களுடைய மாத வருமானம் குறித்து எந்த விவரமும் தரப்படாததால், ஓய்வூதியமாக சுமார் 9,000 ரூபாயை மாதந்தோறும் பெறுவதற்கான மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டத்தை உங்களுக்குப் பரிந்துரைக்கிறேன்.

மியூச்சுவல் ஃபண்ட்
மியூச்சுவல் ஃபண்ட்

நீங்கள் மாதந்தோறும் 12,500 ரூபாயை முதலீடு செய்வதாக இருந்தால் 5 ஆண்டுகளின் முடிவில் தோராயமாக 10.13 லட்சம் ரூபாயை ஈட்ட முடியும். அந்த 12,500 ரூபாயை மூன்றாகப் பிரித்து, தலா 4,000 ரூபாயை ஹெச்.டி.எஃப்.சி ஸ்மால்கேப் ஃபண்டிலும், கனரா ரொபெகோ ஈக்விட்டி டைவர்சிஃபைடு ஃபண்டிலும், 4,500 ரூபாயை எஸ்.பி.ஐ பேங்கிங் அண்ட் ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்டிலும் முதலீடு செய்யுங்கள்.

இதிலிருந்து ஐந்து ஆண்டுகளில் தோராயமாக 12% வருவாய்க்கணக்கில் 10.13 லட்சம் ரூபாய் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

உங்கள்வசம் இதுநாள் வரையிலான சேமிப்பாக 2 லட்சம் ரூபாய் இருக்குமெனில், அதை ஏபிஎஸ்எல் பேங்க்கிங் & ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் மற்றும் இன்வெஸ்கோ இந்தியா ஃபைனான்சியல் சர்வீசஸ் ஃபண்ட் ஆகிய இரண்டிலும் தலா ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்யலாம். 5 ஆண்டுகளில் தோராயமாக 12 சதவிகிதம் வருவாய்க்கணக்கில் 3.5 லட்சம் ரூபாய் வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

ஆக, 10.13 லட்சம் மற்றும் 3.5 லட்சம் சேர்த்துக் கிடைக்கும் 13.63 லட்சத்தில், 13.50 லட்சத்தை தோராயமாக 8 சதவிகிதம் வட்டி கிடைக்கும்படியான, அதிக ரிஸ்க் இல்லாத கனரா ரொபெகோ ஈக்விட்டி ஹைஃபிரிட் ஃபண்டில் முதலீடு செய்தால், ஆண்டுக்கு 1,08,000 ரூபாய் தோராயமாகக் கிடைக்கும்.

இதிலிருந்து ஓய்வூதியமாக, சிஸ்டமேட்டிங் வித்ட்ராயல் ப்ளான் மூலமாக மாதந்தோறும் 9,000 ரூபாய் என்ற விகிதத்தில் எடுக்கலாம்" என்கிறார் அவர்.

இந்த அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்து ஓய்வூதியத்தைப் பெறலாம். முதலீட்டுத்தொகையில் மாற்றம் செய்யவேண்டியிருந்தாலோ, இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தாலோ, நல்லதொரு நிதி ஆலோசகரை அணுகுங்கள்.

Doubt of Common Man
Doubt of Common Man

இது போன்று உங்களுக்கும் ரொம்ப நாள் டவுட் எதுவும் இருக்கா? இந்த லிங்க் க்ளிக் பண்ணுங்க: http://bit.ly/DoubtOfCommonMan