நடப்பு
Published:Updated:

கவனச் சிதறல்... நம் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை!

நாணயம் புக் செல்ஃப்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் புக் செல்ஃப்

நாணயம் புக் செல்ஃப்

ன்றைக்கு நம்முடைய முன்னேற்றத்துக்குப் பெரும் தடையாக இருப்பது எது என்று கேட்டால், கவனச் சிதறல் என்றே சொல்ல லாம். இந்தக் கவனச் சிதறலை வென்று சரியான விஷயங்களைச் செய்துமுடிப்பது எப்படி என்பதுதான் நம்முடைய வெற்றியின் ரகசியமாக இருக்கிறது. பீட்டர் ப்ரெக்மென் எழுதிய 18 மினிட்ஸ் என்கிற புத்தகம் வெற்றிக்கான அந்த ரகசியத்தை நமக்கு எடுத்துச் சொல்கிறது.

கவனச் சிதறல்... நம் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை!

தொலைக்கக்கூடாத பொக்கிஷம்

‘‘இன்றைய அலுவலகச் சூழலில் காலையில் வேலைக்கு வந்தவுடன் மின்னஞ்சலைத் திறந்துபார்த்தால், எக்கச்சக்கமான மின்னஞ்சல்கள் நம்முடைய கவனத்திற்காகக் காத்திருக்கின்றன. அவற்றில் பலவும் பல மணிநேரம்/நாள்கள் வேலை செய்துமுடிக்க வேண்டிய விஷயங்களை நமக்குச் சொல்வதாக இருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் வேலையை ஆரம்பிக்கும்போது இதையெல்லாம் நம்மால் முடிக்க முடியாது என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொண்டே தொடங்குகிறோம். ஆனாலும், கடந்த காலத்தைப் பின்னோக்கிப் பார்த்து, நம்மால் எதையும் பெரியதாகச் சாதிக்க முடியவில்லை எனப் பெருமூச்சுவிடுகிறோம்.

கவனச் சிதறல்... நம் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை!

பணத்தைத் தொலைத்தால் சம்பாதித்துக்கொள்ளலாம். நண்பர்களைச் சண்டையிட்டு தொலைத்தால், கையில் காலில் விழுந்து சமரசமாகிக்கொள்ளலாம். வேலையைத் தொலைத்தால் வேறு வேலை தேடிக்கொள்ளலாம். ஆனால், நேரத்தை மட்டும் தொலைத்தால் நம்மால் மீண்டும் அதைத் திரும்பப் பெறவே முடியாது. எனவே, இந்த உலகத்தில் தொலைக்கக்கூடாத பொக்கிஷம் என்றால், அது நேரம்தான்’’ என்று ஆரம்பிக்கிறது இந்தப் புத்தகம்.

நேரத் திருட்டு

இந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியரின் நண்பர் ஒருவர் எப்போது மீட்டிங்கிற்குச் சென்றாலும் படிப்பதற்கு ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வாராம். ‘‘மீட்டிங்கிற்குப் போகும்போது புத்தகத்தை ஏன் எடுத்துச் செல்கிறீர்கள்’’ என்று கேட்டால், ‘‘யூதர்களுக்கான சட்டதிட்டங்களைச் சொல்லும் புத்தகத்தில், ஒருவருடைய நேரத்தைத் திருடுவது மிகவும் பாவகரமான செயல். ஏனென்றால், திருடியவரால் அதைத் திருப்பித் தரவே முடியாது. எனவே, யாராவது மீட்டிங்கிற்குத் தாமதமாக வந்து அதற்காக நான் காத்திருக்க நேர்ந்தால், அவர் அந்தப் பாவத்தைச் செய்ய நான் காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதால்தான், புத்தகத்தை எடுத்துச் செல்கிறேன். காத்திருக்கும் வேளையில் அந்தப் புத்தகத்தைப் படித்தால், என்னுடைய நேரத்தை அவர் திருடியதாக ஆகாது. நானும் என்னுடைய நேரத்தை உபயோகமாகச் செலவிட்டேன் என்று இருக்கும்’’ என்பாராம். அடுத்தவர்கள் நம்முடைய நேரத்தைத் திருடாமல் பார்த்துக்கொள்ளும் எண்ணத்தை விடுங்கள். நாம் நம்முடைய நேரத்தை எவ்வளவு திருடுகிறோம் என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறீர்களா’’ என்று கேட்கிறார் ஆசிரியர்.

கவனச் சிதறல்... நம் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை!

திரும்பிப் பார்

‘‘எத்தனை முக்கிய தருணங்களை, நாள்களை, வருடங்களை நாம் வீணடித்திருக்கிறோம் என்று கூட்டிக் கழித்துப் பார்த்தால், நமக்குத் தலைசுற்றவே செய்யும். நியூட்டனின் முதல் விதிப்படி, ஒரு விஷயம் ஏதாவது வெளியிலிருந்து தடை வரும்வரை நிலையான வேகத் திலேயே சென்றுகொண்டிருக்கும். இந்த விதியானது பொருள்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் பொருந்தவே செய்யும். ஏதாவது பெரிய நஷ்டம் வரும் வரை நாம் தவறான பாதையில் போய்க் கொண்டேயிருப்போம். பிறகு நாமே தேர்ந்து தெளிவு பெற்று சரியான பாதையில் போக முற்படுவோம். ஒரு மனிதனாக நாம் செய்யவேண்டியது, நம்முடைய கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்து (கடந்த காலம் என்பது ஒரு வருடம், ஒரு நாள், ஒரு மணி நேரம் என எதுவேண்டுமென்றாலும்), நாம் சரியான பாதையில் செல்கிறோமா அல்லது மாற்றம் தேவையா என்பதைத் தொடர்ந்து பரிசீலித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

நம்முடைய சோம்பேறித்தனத்தையும் கவனச் சிதறலையும் போக்க அன்றாடம் நாம் நம்முடைய செயல்பாடுகளைக் கட்டாயமாகத் திரும்பிப் பார்க்க வேண்டும். இப்படி அவ்வப்போது நாம் திரும்பிப் பார்த்து நம்முடைய போக்கை சரிசெய்து கொள்ளா விட்டால் நம் வாழ்க்கையில் வெறுப்பும் விரக்தியுமே மிஞ்சும்’’ என்கிறார் ஆசிரியர்.

ஓட்டத்தை நிறுத்துங்கள்

நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் முக்கியமானதொரு விஷயத்தைச் சொல்கிறார் ஆசிரியர்.

‘‘முதலில் ஓட்டத்தை நிறுத்துங்கள். அப்படி நிறுத்தினால்தான் எது சரி, எது தவறு என்பது புரியும். ஓடுகிற ஓட்டத்தைக் கொஞ்சம் நிறுத்தினால் மட்டுமே நாம் அடுத்து செய்ய வேண்டிய உருப்படியான விஷயம் என்னவென்று நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் வாழ்க்கை யானது அது போகிறபோக்கில் நம்மை இழுத்துச் சென்றுவிடும். இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலானோர் எதற்காக ஓடுகிறோம் என்பது தெரியாமல் ஓடுவது நிஜம்தானே’’ என்று கிண்டலாகக் கேட்கிறார் ஆசிரியர்.

கவனச் சிதறல்... நம் முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டை!

என்ன செய்தோம் நாம்?

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதியில் ஆசிரியர் சொல்லும் முக்கியமான விஷயம், இந்த வருடத்தில் நாம் என்ன செய்தோம் என்று கேட்பது. “ஒவ்வொரு புத்தாண்டிலும் நாம் என்ன தான் திட்டமும் சபதமும் எடுத்தாலுமே அதிலிருந்து சுலபத்தில் நாம் விலகிவிடுகிறோம். என்ன வேண்டும், எதற்காகச் செயல்படுகிறோம் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டால் மட்டுமே எதைச் செய்தால் முன்னேற்றம் பெறமுடியும் என்பது நமக்குப் புரியும். இதற்காகத்தான் நாம் என்ன செய்தோம் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டி யிருக்கிறது. போகிறபோக்கில் காரியங்களைச் செய்யாமல் கொஞ்சம் நிதானித்து திரும்பிப் பார்த்தால் மட்டுமே எதையாவது புதுமையாகச் செய்ய முடியும். அப்படிச் செய்யும் போது மட்டுமே நாம் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்குவோம்’’ என்கிறார் ஆசிரியர்.

தினமும் ஆராயுங்கள்

“இந்த நாளை நாம் எப்படிச் செலவழித்தோம் என்பதை ஆராய்வதும், ஆண்டுக்கான திட்டத்தினை அன்றாடம் 18 நிமிடங்கள் செலவழித்து எல்லாம் சரியாகத்தான் போகிறதா என்பதைக் கண்டறிவதும் அவசியம். செய்யும் செயலில் வெற்றிபெற எதைச் செய்யவேண்டும் என்பதைவிட, எதையெல்லாம் செய்யக்கூடாது என்பதை முற்றிலுமாகப் புரிந்துகொள்வது மிக முக்கியம்’’ என இந்தப் புத்தகத்தின் மூன்றாம் பகுதியில் விளக்குகிறார் ஆசிரியர்.

இந்த நிமிடம் எப்படி?

நான்காவது பகுதி, இந்த நிமிடம் எப்படிப் பட்டது என்பதைக் கண்டறியச் சொல்லித் தருகிறது. இந்த நிமிடத்தை உபயோகமானதாகச் செயல்படுகிறோமா அல்லது வெட்டியாகச் செலவழிக்கிறோமா என்பதைக் கண்டறிந்து, ஒவ்வொரு நிமிடத்தினையும் உபயோகமாக மாற்றிக்கொள்ள உதவும் பகுதி இதுவாகும்.

நம்முடைய இலக்கை அடையும் பாதை யிலிருந்து நாம் எப்படி யெல்லாம் வெளியேற்றப் படுகிறோம். கவனச் சிதறல் எந்த ரூபத்தில் நம்மை நோக்கி வருகிறது என்பதைப் புரிந்து கொண்டு, நம் இலக்கை அடைவது எப்படி என்பதைச் சொல்கிறது.

‘‘திறமை என்னிடம் குறைவு என்று நினைத்துச் சோம்பலாக இருந்துவிடாமல், நான் எந்த அளவுக்கு என்னிடம் இருக்கும் திறமையை உபயோகிக்கிறேன் என்பதில் கண்ணும் கருத்துமாக இருங்கள். இந்த உலகம் பெர்பக்‌ஷனிஸ்ட்டு களைப் பாராட்டக்கூடிய இடமில்லை. புரடக்டிவிட்டி யைப் பாராட்டும் இடம் என்பதனாலேயே இதை நான் சொல்கிறேன்’’ என்று முடிக்கிறார் ஆசிரியர்.

முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்தப் புத்தகத்தைப் படித்துப் பயன்பெறலாம்!

- நாணயம் விகடன் டீம்