பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

30 நிமிடங்களில் பணம்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் புதிய வசதி..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.ஐ.எஃப்.எல் குவான்ட் ஃபண்ட் (IIFL Quant Fund)

குவான்ட் என்பது பிரத்யேக கணினி மயமாக்கப்பட்ட சூத்திரத்தைக் கொண்டு நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுக்கும் முறையாகும். அந்த முறையைப் பின்பற்றி பங்குகளை சரியான நேரத்தில் வாங்கி விற்பது இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். ஐ.ஐ.எஃப்.எல் குவான்ட் ஃபண்ட் திட்டத்தில் நவம்பர் 22-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.

குரோத் மற்றும் டிவிடெண்ட் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை இந்தத் திட்டத்தில் மேற்கொள்ள முடியும். எஸ்.ஐ.பி முறையிலும் முதலீடு செய்யும் வசதி உள்ளது. முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

30 நிமிடங்களில் பணம்... மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் புதிய வசதி..!

ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட்: இ-ஏ.டி.எம் வசதி...

ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் யூனிட்டுகளை விற்று எளிதாகப் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுவாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்திலிருந்து பணத்தை எடுக்கும்போது விற்ற யூனிட்டுகளின் பணம் கிடைப்பதற்கு இரண்டு முதல் நான்கு நாள்கள் வரை ஆகும். ஆனால், ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்ட் நிறுவனம் 50% - 70% அளவு பணத்தை யூனிட்டுகளை விற்ற 30 நிமிடங்களில் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் வகையில் இந்தத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மீதி உள்ள 30% - 50% பணம் நான்கு நாள்களுக்குள் வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த வசதி மூலம் அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை ஒரு நாளில் வாடிக்கையாளர் திரும்பப் பெற முடியும். வாடிக்கையாளர் விரைவாகப் பணத்தைப் பெறுவது நிச்சயம் பயனுள்ள விஷயமாக இருக்கும்.

போன்பே யு.பி.ஐ மூலம் இன்ஷூரன்ஸ் பாலிசிகள் விற்பனை...

காப்பீட்டுத் துறையில் முன்னணியில் உள்ள லிபர்ட்டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் தனது மோட்டார் பாலிசிகளை போன்பே யு.பி.ஐ மூலம் விற்பனை செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. போன்பே யு.பி.ஐ கடந்த ஐந்து மாதங்களில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஐந்து லட்சம் மோட்டார் பாலிசிகளை விற்பனை செய்துள்ளது.

தற்போது அறிமுகம் செய்துள்ள இந்த வசதியின் மூலம் லிபர்ட்டி ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பாலிசிகளை டிஜிட்டல் முறையில் எளிமையாக போன்பே யு.பி.ஐ மூலம் வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் புக் நௌ பே லேட்டர் சலுகை (Book Now Pay Later Scheme)

குறைந்த கட்டண விமானச் சேவைகள் வழங்குவதில் முன்னணியில் உள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனம், தன் வாடிக்கை யாளர்களுக்குப் பயன்படும் வகையில் இந்தப் புதிய சலுகையை அறிமுகம் செய்துள்ளது.

இந்தச் சலுகையைத் தற்போது ஹெச்.எஸ்.பி.சி, ஆக்ஸிஸ், கோட்டக் வங்கி, எஸ்.பி.ஐ மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டட் வங்கிக் கடன் அட்டை வைத்துள்ள வாடிக்கை யாளருக்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்தக் கடன் அட்டைகளைப் பயன்படுத்தி விமான டிக்கெட் புக் செய்யும்போது மாதாந்தர இ.எம்.ஐ தவணைகளில் சுலபமாக டிக்கெட்டுக்கான பணத்தைச் செலுத்த முடியும். கடனுக்கான வட்டி விகிதங்களில் 70% வரை சேமிக்கும் வசதியும் உள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள வங்கிகளின் கடன் அட்டை வைத்துள்ள வாடிக்கையாளர்கள் இந்த வசதியைத் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ளலாம்.