நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும் புதிய கிரெடிட் கார்டு..!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகமான புதிய திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

கேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ்: கேர் கிளாசிக்

சிகிச்சை தேவைப்படக்கூடிய நகரத்தை அடிப்படையாகக் கொண்டு பிரீமியம் தொகையைக் கணக்கீடு செய்யும் புதிய வகை மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை கேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாகச் சில நகரங்களில் மருத்துவச் சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாக இருக்கும். மேலும் மருத்துவ பரிசோதனை, முறைகள் வீட்டிலிருந்தே சிகிச்சை பெறும் வசதி போன்ற பல வசதிகளை வாடிக்கை யாளர்களுக்கு இந்தத் திட்டத்தின் மூலம் கேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்குகிறது.

மருத்துவக் காப்பீடு தேவைப்படுபவர்கள் இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

எஸ்.பி.ஐ கார்டு: பல்ஸ் கார்டு

எஸ்.பி.ஐ கார்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய கடன் அட்டையை நமது நாட்டில் உள்ள 4,000 உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் ஃபிட்னஸ் ஸ்டூடியோக்களில் உபயோகப்படுத்தும்போது கூடுதல் சலுகை கிடைக்கும்.

உடற்பயிற்சி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையில் இந்தப் புதிய கடன் அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கடன் அட்டைக்கு வருடாந்தர கட்டணமாக ரூ.1,499 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஃபிட்னஸில் அதிக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ கார்டு நிறுவனத்தின் இந்த புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.

உடற்பயிற்சியை ஊக்கப்படுத்தும்
புதிய கிரெடிட் கார்டு..!

டிஜிட் இன்ஷூரன்ஸ் புதுமையான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

பெரும்பாலான மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களில் காப்பீடு எடுத்த மூன்று ஆண்டு களுக்குப் பிறகுதான் வாடிக்கையாளர் பாலிசி எடுப்பதற்கு முன்பு கொண்டுள்ள சில நோய்களுக்கு க்ளெய்ம் செய்ய முடியும்.

நாட்டிலேயே காப்பீடு எடுத்த ஒரு ஆண்டுக்குள் அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை வழங்கும் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை டிஜிட் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இந்தக் காப்பீட்டை எடுக்கும் முன்பு வாடிக்கையாளர்கள் தமது அனைத்து நோய்கள் பற்றிய விவரத்தைத் தெரிவிப்பது அவசியம் ஆகும்.

கோட்டக் மஹிந்திரா வங்கி, இண்டிகோ ஏர்லைன்ஸ்: புதிய கடன் அட்டை

கட்சிங் என்ற புதிய கடன் அட்டையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கோட்டக் மஹிந்திரா வங்கி அறிமுகம் செய்துள்ளது.

இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது ரூ.3,000 அளவுக்கு இலவச ஏர் லைன் டிக்கெட் கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. மேலும் இந்தக் கடன் அட்டையைப் பயன் படுத்தி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டிக்கெட் புக் பண்ணும்போது கூடுதல் ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும்.

அதிக அளவில் அடிக்கடி விமானப் பயணங் களை மேற்கொள்ளும் நிலையில் இருக்கும் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.