பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

புதிய செக்டோரல் ஃபண்ட் உங்களுக்கு ஏற்றதா..?

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசிரேகா

அண்மையில் சந்தைக்குப் புதிதாக வந்த திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. நிஃப்டி பேங்க் இண்டெக்ஸ் (ICICI Pru. Nifty Bank Index Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ. மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி பேங்க் குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளது. பிப்ரவரி 24-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். கொரோனா நோய்த் தொற்று காலத்துக்குப் பிறகு வங்கித்துறை சிறப்பாகச் செயல்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனாலும், செக்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை. ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்கள் மட்டும் இதில் சேர்ந்து பயன் பெறலாம்.

யு.டி.ஐ எஸ்&பி பி.எஸ்.இ லோ வாலட்டலிட்டி இண்டெக்ஸ் ஃபண்ட் (UTI S&P BSE Low Volatility Index Fund)

யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பி.எஸ்.இ எஸ் அண்ட் பி குறியீட்டில் உள்ள குறைந்த ஏற்றத்தாழ்வு உள்ள 30 தேர்ந்தெடுக்கப் பட்ட புளூசிப் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. பிப்ரவரி 25 வரை முதலீடு செய்ய முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். குறைந்த ஏற்றத்தாழ்வு உடைய பங்குகள் மிதமான ரிஸ்க் உடையவை. முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் சேர்ந்து பயன் பெறலாம்.

புதிய செக்டோரல் ஃபண்ட் 
உங்களுக்கு ஏற்றதா..?

எஸ்.பி.ஐ மல்ட்டிகேப் (SBI Multicap Fund)

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் மல்ட்டிகேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் பிப்ரவரி 28 வரை முதலீடு செய்ய முடியும். டிவிடெண்ட் மற்றும் குரோத் என இரு வகை களும் உண்டு. முழுக்க பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுப்பவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை மல்ட்டிகேப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பிப்ரவரி 28-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.