பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பயன்பாட்டு அடிப்படையில் பிரீமியம்... புதிய மோட்டார் இன்ஷூரன்ஸ் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் அறிமுகமான திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் நிஃப்டி 200 மொமென்டம் 30 இண்டெக்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Nifty 200 Momentum 30 Index Fund)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி 200 மொமென்டம் 30 குறியீட்டில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனுடன் சேர்த்து ஐ.சி.ஐ.சி.ஐ புரூ டென்ஷியல் நிஃப்டி 200 மொமென்டம் 20 இண் டெக்ஸ் ஃபண்ட் என்ற மற்றொரு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் பேசிவ் வகை திட்டங்களாகும்.

இந்தத் திட்டங்களில் ஆகஸ்ட் 2-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். பொது வாக, பேசிவ் வகை திட்டங் களில் செலவு குறைவாக இருக்கும். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. இந்தக் குறியீடு கடந்த காலங்களில் நிஃப்டி குறியீட்டைக் காட்டிலும் கூடுதலான வருமானம் தந்திருக்கிறது. என்றாலும் முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால் ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர் கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

பரோடா பி.என்.பி பரிபாஸ் ஃபிளெக்ஸிகேப் ஃபண்ட் (Baroda BNP Baribas Flexicap Fund)

பேங்க் ஆஃப் பரோடா வங்கி பி.என்.பி பரிபாஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத் துடன் இணைந்து புதிய ஃபிளெக்ஸிகேப் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தில் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்களில் கலந்து முதலீடு மேற்கொள்ளப்படும். இந்தத் திட்டத்தில் ஆகஸ்ட் 5 வரை முதலீடு செய்யலாம். டிவிடெண்ட் மற்றும் குரோத் என்ற இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யப்படும் வசதியும் உள்ளது. இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படுவதால், ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பயன்பாட்டு அடிப்படையில் பிரீமியம்... புதிய மோட்டார் இன்ஷூரன்ஸ் திட்டம்!

பஜாஜ் அலையன்ஸ்: புதிய மோட்டார் காப்பீட்டுத் திட்டம்

பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் வாடிக்கையாளர் களின் உபயோகத்தை அடிப்படையாகக்கொண்டு பிரீமியம் தொகையைக் கணக்கீடு செய்யும் (Pay as you Consume - PAYC) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இந்தத் திட்டத்தில் ஒரு வருட காலத்தில் எவ்வளவு கிலோ மீட்டர் பயணிக் கிறோம் என்று வாடிக்கையாளர்கள் கூறுவதை அடிப்படையாகக் கொண்டு பிரீமியம் தொகை கணக்கீடு செய்யப்படும். மேலும், வண்டி ஓட்டும் டிரைவர்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டும் பிரீமியம் தொகை கணக்கீடு செய்யப் படும். வண்டியில் பிரத்யேக டெலிமேடிக் டிவைஸ் நிறுவப்பட்டு டிரைவரின் செயல்திறன் கணக்கீடு செய்யப்படும். வாடிக்கையாளர்கள் திட்டக் காலத்தில் குறிப்பிட்ட கிலோ மீட்டரைவிட கூடுதலாகப் பயன்படுத்தும்போது கூடுதல் கிலோ மீட்டர்களைக் குறைந்த தொகை செலுத்தி அதிகரித்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.

இந்தத் திட்டத்தில் குறைவான தூரம் வண்டி ஓட்டும் வாடிக்கையாளர்களுக்கு பிரீமியம் தொகை குறைவானதாக இருக்கும். கமர்ஷியல் வாகனங்களுக்கு அதிக கிலோ மீட்டர் ஓடுவதால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுக்க விரும்புபவர்கள் பஜாஜ் அலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய திட்டத்தைப் பரிசீலிக்கலாம்.

இண்டஸ்இண்ட் வங்கி - ஈஸி டின்னர்: புதிய கடன் அட்டை

உணவகங்களில் டேபிள் பதிவு செய்ய பயன் படுத்தப்படும் ஈஸி டின்னர் இணையதளத்துடன் சேர்ந்து இண்டஸ்இண்ட் வங்கி புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி உணவகங்களில் டேபிள் புக் செய்யும்போது 25% வரை தள்ளுபடி கிடைக்கும்.

மேலும், இந்தக் கடன் அட்டையைப் பயன்படுத்தி செலவு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 10 ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும். இந்தச் சலுகைகள் உணவகங்களில் உணவு அருந்தும்போதும், அறைகள் எடுத்து தங்கும்போதும் கிடைக்கும். மேலும், புதிதாக இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது கூடுதலாக 2,000 ஈஸி டின்னர் ரிவார்டு பாயின்டுகள் கிடைக்கும். புதிதாகக் கடன் அட்டை வேண்டும் என நினைக்கும் வாடிக்கையாளர்கள் இண்டஸ்இண்ட் வங்கி அறிமுகம் செய்துள்ள இந்தக் கடன் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.