நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

8% வரை வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தைக் குப் புதிதாக வந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஜே.எம் மிட்கேப் ஃபண்ட் (JM Midcap Fund)

ஜே.எம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நடுத்தர வகை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 14-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட் டைத் தொடங்கலாம். குரோத் மற்றும் டிவிடெண்ட் என்று இரண்டு வகைகளில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது. மிட்கேப் வகை திட்டங்கள் பொதுவாக அதிக ரிஸ்க் உடையவை ஆகும். முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

8% வரை வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்!

கோட்டக் ஆல் வெதர் டெப்ட் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் (Kotak All Weather Debt Fund of Fund)

கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், தமது நிறுவனத்தின் டெப்ட் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் புதிய ஃபண்ட் ஆஃப் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் நவம்பர் 10-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீடு, கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், இந்த வகை திட்டங்கள் பொதுவாக ரிஸ்க் குறைவானவை ஆகும். வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கும் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.

ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி ஐ.டி இ.டி.எஃப் (HDFC Nifty IT ETF)

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி ஐ.டி குறியீடுகளில் முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 9-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும்.

இது பேசிவ் வகை திட்டம் என்பதால், இந்தத் திட்டத்தை நிர்வகிக்க ஆகும் செலவு குறைவாகும். கடந்த ஒரு வருட காலமாகத் தகவல் தொழில்நுட்பத் துறை குறியீடு குறைந்த வருமானத்தைத் தந்துள்ளது. வரும் காலத்தில் இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என்பதால், இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஆனாலும், செக்டோரல் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். அதனால் அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

8% வரை வட்டி தரும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்!

ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி பிரைவேட் பேங்க் இ.டி.எஃப் (HDFC Nifty Private Bank ETF)

ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் தனியார் வங்கிகளில் மட்டும் முதலீடு செய்யும் நிஃப்டி பிரைவேட் பேங்க் குறியீட்டில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் நவம்பர் 9-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இதில் குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம். இதுவும் ஒரு பாசிவ் வகை திட்டமாகும். தனியார் வங்கிகளில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: டெபாசிட் வட்டி உயர்வு...

சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனம் தமது டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஐந்து ஆண்டுகளுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 8% வரை வட்டி விகிதமும், ஓர் ஆண்டுக்கான ஃபிக்ஸட் டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7% வரை வட்டி விகிதமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ரிஸ்க் இல்லாமல் நிலையான வருமானம் வேண்டுபவர்கள் சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.