
சந்தைக்குப் புதுசு
சசி ரேகா
அண்மையில் சந்தை யில் புதிதாக வந்த முதலீடு, காப்பீடு உள்ளிட்ட நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க்: கட்டணம் எதுவும் இல்லாத பேக்கிங் ஸ்கீம்
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி 25 வகையான பல்வேறு கட்டணங்களைத் தள்ளுபடி செய்யும் புதிய வங்கி திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது. வங்கிக் கிளை களில் நடைபெறும் ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வித்ட்ராயல் பரிவர்த்தனை களுக்குக் கட்டணத் தள்ளு படி, கட்டணம் இல்லாத காசோலை மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் வசதி, கட்டணம் இல்லாத நெஃப்ட் மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் வசதி, வெளி நாடுகளில் ஏ.டி.எம் சேவை களுக்குக் கட்டணம் இல்லாதது போன்ற பல்வேறு வங்கிக் கட்டணங்களுக்கு இந்தக் கணக்கில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கில் மாதாந் தரம் வாடிக்கையாளர் ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் கள் அறியாமல் பலவித கட்டணங்களை வங்கிகள் பெறுகின்றன என்கிற புகார் மக்கள் மனதில் நிலவி வருகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் ஐ.டி.எஃப். சி ஃபர்ஸ்ட் வங்கியின் இந்தப் புதிய திட்டம் வாடிக்கை யாளர்களுக்குப் பயனுள்ள தாக அமைந்துள்ளது. அதிக வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் வாடிக்கை யாளர்கள் இந்தப் புதிய கணக்கில் சேர்ந்து பயன் பெறலாம்.

பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ்: ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர் திட்டம்
பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம், புதிதாக மூத்த குடிமக்களுக்குப் பயன்படும் வகையில் ரெஸ்பெக்ட் சீனியர் கேர் ரைடர் திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது. இப்போது நமது நாட்டில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் தங்கள் பிள்ளைகளை விட்டு தனியாக வசித்து வருவது அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. அவர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்தத் துணை பாலிசியைப் (ரைடர்) பொதுவான மருத்துவக் காப்பீட்டுடன் சேர்ந்து எடுத்துக்கொள்ளலாம். முழுமையான ஆம்புலன்ஸ் சேவைகளுக்கான கட்டணம், வீட்டிலிருந்தே குறிப்பாக, பிசியோதெரபி மற்றும் நர்சிங் தேவைகள் போன்ற சிகிச்சைகளுக்கான கட்டணம், மனநலம் தொடர்பான சிகிச்சைகளுக்கான கட்டணம் போன்ற பல்வேறு சிகிச்சைகளுக்கு இந்த ரைடர் திட்டத்தின் மூலம் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியும். மூத்த குடிமக்களுக்கு 360 கோணத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்க உதவிடும் வகையில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த ரைடர் திட்டத்துக்கான பிரீமியத் தொகை ரூ.700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மருத்துவக் காப்பீடு எடுத்திருக்கும் முதியோர்கள் இந்தப் புதிய ரைடர் பாலிசியையும் சேர்த்து எடுத்துக்கொள்வது முழுமையான கவரேஜ் கிடைப்பதற்கு உதவிடும்.

நியூ இந்தியா இன்ஷூரன்ஸ்: டிரோன்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்
நமது நாட்டில் ஏர் கிராஃப்ட் மற்றும் டிரோன்கள் சார்ந்த நிறுவனங்களின் வளர்ச்சி 2030-ம் ஆண்டுக்குள் 23 பில்லியன் டாலர் என்ற அளவை எட்டும் என்று ஒரு கணிப்பு உள்ளது. அந்த வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் டிரோன்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
ஏற்கெனவே இந்த ஆண்டில் ஹெச்.டி.எஃப்.சி எர்கோ நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்ட் நிறுவனம், பஜாஜ் அலையன்ஸ் மற்றும் டாடா எ.ஐ.ஜி போன்ற தனியார் நிறுவனங்கள் டிரோன்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.
தற்போது முதல்முறையாக பொதுத்துறை சார்ந்த நியூ இந்தியா இன்ஷூரன்ஸ் நிறுவனம் இந்த வகை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் பெரிய ஏர் கிராப்ட் முதல் கிலைடர்கள், டிரோன்கள் போன்றவற்றுக்கும் காப்பீடு எடுக்க முடியும். இந்தக் காப்பீட்டைத் தயாரிப்பு நிறுவனங்கள், பயன்படுத்தும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்கள் ஆகிய அனைவருமே எடுத்துக் கொள்ள முடியும்.