பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

10.45% வரை வட்டி... புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் புதிதாக வந்த நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஶ்ரீராம் ஃபைனான்ஸ்: டெபாசிட் வட்டி உயர்வு..

ஶ்ரீராம் ஃபைனான்ஸ் தமது ஃபிக்ஸட் டெபாசிட்டு களுக்கான வட்டி விகிதத்தை 0.05 சதவிகிதத்திலிருந்து 0.3% புள்ளிகள் வரை 2023 ஜனவரி 1 முதல் அதிகரித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. ஶ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை வாடிக்கையாளர்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத் தில் சேரலாம்.

தற்போது உயர்த்தப்பட்ட வட்டி விகிதத்தின் அடிப் படையில் அதிகபட்சமாகப் பெண்களுக்கான சீனியர் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதமாக 9.36% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் முதிர்ச்சி அடைந்த டெபாசிட் களை மீண்டும் புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங் களில் முதலீடு செய்யும் போதும் கூடுதலாக 0.25% வட்டி கிடைக்கும். வங்கி டெபாசிட்டுகளைவிட கூடுதலாக வட்டி கிடைக்கும் இந்தத் திட்டங்களில் குறைந்த ரிஸ்க் எடுப்பவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

10.45% வரை வட்டி... புதிய என்.சி.டி 
திட்டம்!

எடெல்வைஸ் ஃபைனான் ஷியல் சர்வீசஸ்: புதிய என்.சி.டி

எடெல்வைஸ் ஃபைனான் ஷியல் சர்வீசஸ் நிறுவனம், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிட்டு நிதி திரட்டுகிறது.

இந்தத் திட்டத்தில் ஜனவரி 23-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். திட்ட காலமாக இரண்டு ஆண்டுகள் முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் செய்யப்படும் முதலீட்டுக்கு அதிகபட்சமாக 10.45% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. ஒருவர் குறைந்த பட்சம் 10,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ள லாம்.

இந்தத் திட்டங்களில் கிடைக்கும் வட்டி வருமானத்தை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலோ, காலாண்டின் முடிவிலோ, நிதியாண்டில் முடிவிலோ முதிர்வுக் காலத்துக்குப் பிறகோ பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் டைவிடக் கூடுதலாக வருமானத்தை வழங்கும் இந்தத் திட்டத்தில் குறைவான ரிஸ்க் எடுக்கும் திறன் உடைய முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

பஞ்சாப் சிந்து பேங்க், எஸ்.பி.ஐ கார்டு: கிரெடிட் கார்டு

முன்னணி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் சிந்து வங்கி முதல் முறையாக எஸ்.பி.ஐ கார்டு நிறுவனத் துடன் இணைந்து கடன் அட்டையை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தக் கடன் அட்டை பி.எஸ்.பி எஸ்.பி.ஐ கார்டு எலைட், பி.எஸ்.பி எஸ்.பி.ஐ கார்டு ப்ரைம் மற்றும் பி.எஸ்.பி சிம்பிலி சேவ் எஸ்.பி.ஐ கார்டு என்று மூன்று விதங்களில் அறிமுகம் செய்யப் பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஷாப்பிங் எக்ஸ்பீரியன்ஸ் மற்றும் அதிக ரிவார்டு பாயின்டுகள் வழங்கும் வகையில் இந்தக் கடன் அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கு நுழைவுக் கட்டணமாக 500 முதல் 5,000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வங்கி லாக்கர் வசதி: ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கும் மாற்றங்கள்

அனைத்து வங்கிகளும் லாக்கர் வைத்திருக்கும் தமது அனைத்து வாடிக்கையாளர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்து வாங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இந்தப் புதிய ஒப்பந்தத்தின்படி, வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்க உள்ளன.

தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தப் புதிய ஒப்பந்தத்தால் வங்கியின் தவறுகளால் லாக்கரில் உள்ள பொருள்களுக்கு நஷ்டம் ஏற்பட்டால் வருடாந்தர லாக்கர் கட்டணத்தில் இருந்து நூறு மடங்கு நஷ்ட ஈட்டை வங்கி வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டும்.

மேலும், ஆண்டுச் சந்தா செலுத்திய வாடிக்கை யாளர் நடுவில் லாக்கர் சேவைகளை நிறுத்தினால் அதிகமாகக் கணக்கிடப்பட்ட கட்டணத்தை வாடிக்கையாளருக்கு வங்கி திரும்ப அளிக்க வேண்டும். தற்போது ஆண்டுச் சந்தாவை வாடிக்கை யாளர் திரும்ப செலுத்தாவிட்டால் ஓர் ஆண்டுக்குள் லாக்கர் சேவைகளை வங்கி நிறுத்திக்கொள்ளலாம். இது மூன்று ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும், லாக்கர் சேவைகளை வாடிக்கையாளர் பயன்படுத்தாமல் இருக்கும்பட்சத்தில் மூன்று ஆண்டு களில் தற்போது லாக்கர் சேவைகளை வங்கி நிறுத்திக் கொள்ளலாம். இது தற்போது ஏழு ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.