நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

சுயதொழில் செய்பவர்களுக்கு உதவும் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிதி சார்ந்த புதிய திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மல்ட்டி அஸெட் அலொகேஷன் ஃபண்ட் (Aditya Birla Sun Life Multi Asset Allocation Fund)

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், பங்குச் சந்தை, கமாடிட்டி மற்றும் கடன் பத்திரங்களில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஜனவரி 25-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். இதில் குறைந்தபட்சம் 500 ரூபாயி லிருந்து முதலீட்டை தொடங் கலாம்.

பங்குச் சந்தை அதிக ஏற்ற இறக்கம் உள்ள காலகட்டத்தில் பல விதமான சொத்துகளில் பிரித்து முதலீடு செய்யும்போது ரிஸ்க் பரவலாக்கம் நடை பெறுகிறது. அதனால் ஓரளவு நல்ல வருமானம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனாலும், திரட்டப்படும் நிதியில் பெரும் பகுதி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதால், நடுத்தர அளவு ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என்பதையும் கவனத்தில் கொள்வது அவசியம்!

சுயதொழில் செய்பவர்களுக்கு உதவும் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ்!

டாடா மல்ட்டிகேப் ஃபண்ட் (Tata Multicap Fund)

டாடா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனப் பங்குகளில் கலந்து முதலீடு செய்யும் புதிய திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் ஜனவரி 30-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயில் இருந்து முதலீட்டைத் தொடங்கலாம். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.

ஆனாலும் இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது, முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப் படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

ஐடேர்ம் ப்ரைம் இன்ஷூரன்ஸ் பிளான் (iTerm Prime Insurance Plan)

ஏகான் இன்ஷூரன்ஸ் நிறுவனம் சுயதொழில் செய்பவர்கள் பயனடையும் விதத்தில் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. பொதுவாக, காப்பீட்டில் அதிக பலன்கள் வழங்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ் திட்டம் மாத ஊதியம் பெறும் நபர்களுக்கு மட்டுமே அதிக பயனளிக்கக்கூடியதாக இருக்கிறது. சுயதொழில் செய்யும் நபர்கள் டேர்ம் இன்ஷூரன்ஸ் வேண்டி விண்ணப்பிக்கும்போது கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும்.

குறிப்பாக, வருமானம் தொடர்புடைய ஆவணங்கள் சரியாக இல்லாதபட்சத்தில் காப்பீடு கிடைக்காத சூழ்நிலையே நிலவுகிறது. சுயதொழில் செய்யும் மூன்றரை கோடி மக்கள் நமது நாட்டில் உள்ளனர். அவர்கள் இந்தத் திட்டத்தில் ஏகான் நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் எடுக்க முடியும். குறைந்தபட்சம் 25 லட்சம் ரூபாயில் இருந்து காப்பீட்டை எடுக்கலாம்.

டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது ஒருவருக்கு எவ்வளவு கடன் இருக்கிறது என்பது உட்பட எல்லாத் தகவல்களயும் மறைக்காமல் இன்ஷுரன்ஸ் நிறுவனத் திடம் சொல்லிவிடுவது அவசியம்.

சுயதொழில் செய்பவர்களுக்கு உதவும் புதிய டேர்ம் இன்ஷூரன்ஸ்!

இந்தியா புல்ஸ் கமர்ஷியல் கிரெடிட் (India Bulls Commercial Credit)

இந்தியா புல்ஸ் நிறுவனம், பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிட்டு அதிகபட்சமாக ரூ.200 கோடி வரை நிதி திரட்ட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 10.3% வரை வட்டி வருமானம் கிடைக்கும்.

இந்தப் பத்திரம் ஒன்றின் விலை ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10,000 ரூபாயிலிருந்து ஒருவர் முதலீட்டை மேற்கொள்ளலாம்.

இந்தத் திட்டத்தில் ஜனவரி 27-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். திட்டக் காலமாக இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறைவான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.