
சந்தைக்குப் புதுசு
சசி ரேகா
அண்மையில் சந்தைக்குப் புதிதாக வந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.
கோட்டக் சில்வர் இ.டி.எஃப் (Kotak Silver ETF)
கோட்டக் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வெள்ளி யில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தத் திட்டத்தில் டிசம்பர் 5-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். எஸ்.ஐ.பி மூலம் முதலீடு செய்யும் வசதியும் உள்ளது.
இந்தத் திட்டத்தில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் வெள்ளியில் முதலீடு செய்யப்படும். வெள்ளியில் முதலீடு செய்ய திட்டமிடுபவர்கள் டிஜிட்டல் முறையில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெறலாம்.

மஹிந்திரா மனுலைஃப் ஸ்மால்கேப் ஃபண்ட் (Mahindra Manulife Small Cap Fund)
மஹிந்திரா மனுலைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், சிறு நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் டிசம்பர் 5 வரை முதலீட்டை மேற்கொள்ள முடியும்.
குறைந்தபட்சம் 10,000 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்த பணத்தை மூன்று மாதத் துக்குள் வெளியே எடுக்கும் பட்சத்தில் 0.5% கட்டணம் செலுத்த வேண்டிவரும்.
பொதுவாக, ஸ்மால் கேப் வகைத் திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை ஆகும். மேலும், முழுவதும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப் படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட் டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் சூக் சம்ரிதி திட்டம் (ICICI Prudential Sukh Samrudhi)
ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் மியூச்சுவல் நிறுவனம், நிச்சய வருமானம் அளிக்கும் பாரம்பர்ய வகை காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை முதிர்வுக் காலத்திலோ, குறிப்பிட்ட கால இடைவெளி களிலோ (Moneyback) பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
திட்டக் காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடு கிடைக்கும். செலுத்தும் காப்பீட்டுத் தொகைக்கு வருமான வரிச் சலுகை கிடைக்கும். பிரீமியத்தில் பெண்களுக்குக் கூடுதல் சலுகை இந்தத் திட்டத்தில் வழங்கப்படுகிறது. அதிக ரிஸ்க் இல்லாத காப்பீடு மற்றும் முதலீடு ஆகிய இரட்டை பலன்களை அளிக்கும் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்தவர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

உறுதியான வருமானம் அளிக்கும் சேமிப்புத் திட்டங்கள்...
கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் புதிய திட்டங்களை சுந்தரம் ஃபைனான்ஸ், டாடா கேப்பிடல் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி ஆகியவை அறிமுகம் செய்திருக்கின்றன. இந்தத் திட்டங்களின் முதிர்வுக் காலமாக மூன்று ஆண்டுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீடு செய்யும் தொகைக்கு வட்டியாக முறையே 7.9%, 7.89%, 7.70% வழங்கப்படு கிறது. அதிக ரிஸ்க் இல்லாத, உறுதியான வருமானம் தரும் இந்தத் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட் டாளர்கள் முதலீடு செய்து பயன்பெறலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றும் எரிம் (AEREM) இணைந்து வழங்கும் புதிய கடன்
எரிம் நிறுவனம் சோலார் மின்தகடுகள் அமைத் திடும் முன்னணி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பல சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மின் தகடுகள் அமைக்க உதவிடுகிறது.
தற்போது இந்த நிறுவனம் பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் இணைந்து தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியில் மின்தடங்கள் அமைக்க உதவிடும் வகையில் கடன் வழங்க சிறப்புக் கூட்டணியை அமைத்துள்ளது. இதன் மூலம் மின் தகடு அமைக்க விரும்பும் நிறுவனங்கள் குறைந்த வட்டியில் பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் கடன் பெற்றுக் கொள்ள லாம். இதனால் மின்சார கட்டணம் குறைவதுடன் பசுமை வழியில் இயற்கையைப் பேணுவதற்கும் இந்த நடவடிக்கை உதவும். தகுதி வாய்ந்த நிறுவனங்கள் இந்தச் சிறப்பு சலுகையைப் பயன்படுத்தி சோலார் மின் தகடுகள் அமைத்துக்கொள்ளலாம்.