தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

9.3% வரை வட்டி... புதிய என்.சி.டி திட்டம்!

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் புதிதாக வந்த முதலீடு, காப்பீடு உள்ளிட்ட நிதி சார்ந்த திட்டங்களில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

சாம்கோ இ.எல்.எஸ்.எஸ் டேக்ஸ் சேவர் ஃபண்ட் (SAMCO ELSS Tax Saver Fund)

சாம்கோ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், வருமான வரிச் சலுகை அளிக்கும் புதிய வகை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் டிசம்பர் 16-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்சம் 500 ரூபாயி லிருந்து முதலீட்டை மேற் கொள்ள முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப் படும் தொகைக்கு 80சி-படி, வருமான வரி சலுகை கிடைக்கும். இந்த சலுகையைப் பெற இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதலீட்டைத் தொடர வேண்டும்.

இந்தத் திட்டத்தில்திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால் அதிக ரிஸ்க் எடுக்கும் திற னுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

9.3% வரை வட்டி... புதிய என்.சி.டி 
திட்டம்!

ஆக்ஸிஸ் லாங் டியூரேஷன் ஃபண்ட் (Axis Long Duration Fund)

ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நீண்ட காலமாக ஏழு ஆண்டுகள் வரை முதிர்வுக் காலம் கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் வகையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் டிசம்பர் 21-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ள லாம். குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்ய வேண்டும். எஸ்.ஐ.பி மற்றும் எஸ்.டபிள்யூ. பி முறையில் முதலீடு செய்யலாம். நிலையான மதிப்பு கொண்ட கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுவதால், இந்தத் திட்டம் குறைந்த ரிஸ்க் உடைய திட்டமாகும்.

இதில் முதலீடு செய்யும் தொகைக்கு வங்கி டெபா சிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எஸ்.டபிள்யூ.பி முறையில் ஒரு முறை முதலீடு செய்துவிட்டு, மாதம்தோறும் குறிப்பிட்ட தொகையைப் பெற இது ஒரு சிறந்த திட்டம்.

எஸ்.பி.ஐ வங்கி: குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்

எஸ்.பி.ஐ வங்கி விழாக்கால சலுகையாகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடனை தற்போது வழங்கி வருகிறது. இந்தச் சலுகை அக்டோபர் 4-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஜனவரி 31-ம் தேதி வரை வீடு வாங்குபவர்களுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

வட்டி விகிதங்களில் 15 முதல் 30 புள்ளிகள் வரை தள்ளுபடி கிடைக்கும். மேலும், புதிய கடன்கள் மற்றும் டாப்அப் கடன்கள் வாங்கும்போது பரிசீலினைக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

இது போன்ற சலுகையை பேங்க் ஆஃப் பரோடா வங்கியும் தற்போது வழங்கி வருகிறது. பேங்க் ஆஃப் பரோடா வழங்கும் இந்தச் சலுகை டிசம்பர் 31-ம் தேதி வரை உள்ளது. புதிதாக வீடு வாங்க நினைப்ப வர்கள் இந்த இரண்டு வங்கிகளில் தமக்குத் தோதான வங்கியைத் தேர்ந்தெடுத்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

9.3% வரை வட்டி... புதிய என்.சி.டி 
திட்டம்!

இந்தியாபுல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ்: புதிய என்.சி.டி திட்டம்

இந்தியா புல்ஸ் ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் பங்குகளாக மாற்றிக்கொள்ள முடியாத கடன் பத்திரங்களை வெளியிட்டு 1,400 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட இருக்கிறது.

ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 10,000 ரூபாயிலிருந்து முதலீட்டை மேற்கொள்ளலாம்.

குறைந்தபட்ச முதிர்வுக் காலமாக இரண்டு ஆண்டுகள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு அதிகபட்சமாக 9.3% வரை வட்டி கிடைக்கும்.

வட்டி பணத்தை ஒவ்வொரு மாதத்திலோ, முதிர்வுக் காலத்துக்குப் பிறகோ பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது. குறைவான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால், வங்கி டெபாசிட்டைவிட சற்றுக் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.