கட்டுரைகள்
Published:Updated:

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும் முதலீடுகள்... எவை தெரியுமா?

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும் முதலீடுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும் முதலீடுகள்

பாரம்பர்ய முதலீட்டுத் திட்டங்களுக்கு அடுத்தபடியாக 20% முதலீட்டாளர்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர்.

உலகின் முன்னணி நிறுவனங்களின் முக்கியப் பதவிகளில் இந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள். கூகுள் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை உட்பட பல தமிழர்களும் முன்னணி நிறுவனங்களில் அதிகாரமிக்க உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவர்களின் சம்பளம் கோடிக்கணக்கில் என்பதால் அவர்கள் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறார்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் முதலீடு செய்யப் பயன்படுத்தும் பிரபல ஃபின்டெக் பிளாட்பாரம் ஆன எஸ்.பி.என்.ஆர்.ஐ (SBNRI) நிறுவனம் சர்வே ஒன்றை சமீபத்தில் நடத்தியது. அதில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (Non-Resident Indian-NRI) நம் நாட்டில் அதிகம் எப்படியான முதலீடு செய்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஷியாம் ராம்பாபு
ஷியாம் ராம்பாபு

பாரம்பர்ய முதலீட்டுத் திட்டங்கள்

சர்வே முடிவின்படி வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பங்குச்சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம், ரியல் எஸ்டேட் எனச் சொத்துப் பிரிவுகளில் முதலீடு செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் அதிக ரிஸ்க் இல்லாத, காப்பீட்டுடன் சேமிப்புப் பலன்களையும் தரும் எண்டோமென்ட் (Endowment) இன்ஷூரன்ஸ் பாலிசிகள் போன்ற பாரம்பர்ய முதலீட்டுத் திட்டங்கள், மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புகின்றனர். மிக அதிகமாக 25% என்ற அளவில் இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட்

வளரும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளதால் அதிக அளவு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நமது நாட்டில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய அதிக நேரம் தேவைப்பட்டது. சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட்

பிளான் என்கிற எஸ்.ஐ.பி முறையில் செயல்பாட்டுக்கு வர 20-25 நாள்களானது. ஆஃப்லைனில் அதிக காகித வேலைகள் (Paper Works) இருப்பதன் காரணமாக பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்யாமல் இருந்துவந்தனர். ஃபின்டெக் நிறுவனங்களின் வருகைக்குப் பிறகு, சுலபமாக சில நிமிடங்களில் ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யும் வாய்ப்பு வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குக் கிடைத்துள்ளது. இதுவும் மியூச்சுவல் ஃபண்டுகளில் அதிக முதலீடு செய்யப்படுவதற்கு முக்கியக் காரணம்.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் விரும்பும் முதலீடுகள்... எவை தெரியுமா?

வங்கி, ரியல் எஸ்டேட்

பாரம்பர்ய முதலீட்டுத் திட்டங்களுக்கு அடுத்தபடியாக 20% முதலீட்டாளர்கள் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீட்டை மேற்கொண்டுள்ளனர். அடுத்தபடியாக ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளனர். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் முதலீட்டாளர்களை ரியல் எஸ்டேட் பக்கம் ஈர்த்துள்ளது. மேலும், இந்தியாவோடு தொடர்பில் இருக்க ரியல் எஸ்டேட் முதலீடு முக்கிய அங்கம் என்று கருதுவதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலர் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய முனைப்பு காட்டுகின்றனர்; குடியிருப்புகளை விட வர்த்தகக் கட்டடங்களில்தான் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரிவில் சுமார் 15% முதலீடு செய்திருப்பதாக சர்வே தெரிவிக்கிறது.ஓய்வுக்காலத்தில் இந்தியாவில் செட்டிலானால் ரியல் எஸ்டேட் முதலீடு கைகொடுக்கும் என்பதும் இதற்குக் காரணம்.

கடன் வாங்கி முதலீடு

என்.ஆர்.ஐக்கள் ரியல் எஸ்டேட்க்கு அடுத்தபடியாக, என்.ஆர்.இ டெபாசிட்களில் (NRE deposits) அதிகமாக முதலீடு செய்திருக்கிறார்கள். தொடர்ந்து, 13% முதலீட்டாளர்கள் ‘அசட் ஃபைனான்சிங்’ எனப்படுகிற, கடன் வாங்கி முதலீடு செய்வதை மேற்கொள்கின்றனர். நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தைகள் மூலம் 6% பேர் முதலீடு செய்திருக்கிறார்கள். புதிய பங்கு வெளியீடுகள் மூலம் 10% பேர் முதலீட்டினைச் செய்துகொண்டுள்ளனர்.

ரிஸ்க்கைப் பொறுத்தவரை, அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் 25% முதலீட்டாளர்கள் சற்றுக் கூடுதலாக ரிஸ்க் எடுக்க விரும்புகின்றனர்; புதிய வென்ச்சர் கேப்பிடல் வாய்ப்புகளில் முதலீடு செய்யவும் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வசிக்கும் முதலீட்டாளர்கள் ரிஸ்க் குறைவான பாரம்பர்ய முதலீடுகளில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அரபு நாடுகளில் சராசரி ஊதியம் சற்றுக் குறைவு என்பதும் இவர்கள் ரிஸ்க் குறைவான முதலீடுகளைத் தேர்ந்தெடுக்கக் காரணம்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வார்ம் வெல்கம்!