பாசிட்டிவ் பொருளாதாரம்... முன்னேற்றத்தில் 20 நிறுவனங்கள்... கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

2021-22 நிதியாண்டில் நாட்டில் நடந்த பணப் பரிமாற்றங்களில் 88% பரிமாற்றங்கள் ஏதாவது ஒரு டிஜிட்டல் முறையின் மூலம் நடந்துள்ளது!
இந்தியாவின் மிகச் சிறிய தொழில்கள் மறு அவதாரம் எடுத்து வரும் நேரம் இது. சிறிய தொழில்கள் நவீன, அதிக செயல்திறன் கொண்ட, மிக அதிக அளவிலான டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அதிக அளவில் விரிவாக்கம் செய்யக்கூடிய வகையில் மறு அவதாரம் எடுத்து வருவதை நான் கண்கூடாகப் பார்க்கிறேன்.

இதற்கு உதாரணம், எங்கள் அலுவலகத்துக்கு அருகே உள்ள ஒரு டீக்கடை. ஓர் ஆண்டுக்கு முன் இந்தக் கடையை ஆரம்பித்தபோது நாளொன்றுக்கு 500 முதல் 600 கப் டீயை விற்பனை செய்து வந்தார் அந்தக் கடைக்காரர். இன்றைக்கு அவரே 7,000 முதல் 8,000 கப் டீயை விற்பனை செய்கிறார். அதாவது, அவருடைய வியாபாரம் ஆண்டில் 15 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது.
இந்த டீக்கடைக்குப் பக்கத்தில் நான்கு மாதத்துக்கு முன் ஒரு சிகரெட் கடையை ஆரம்பித்தவர், முதல் சில வாரங்களில் நாளொன்றுக்கு ரூ.1,000 என்கிற அளவில் விற்றார். தற்போது நாளொன்றுக்கு ரூ.8,000 என்கிற அளவில் சிகரெட் விற்கிறார்.
இந்த இரு கடைக்காரர்களுமே தங்களுக்கு வர வேண்டிய பணத்தில் பெரும்பான்மை யான பணத்தை யு.பி.ஐ எனப்படும் மொபைல் மூலம் பணப் பரிமாற்றம் செய்துவிடுகிறார்கள். ஆரம்ப காலத்தில் 20% முதல் 30% பணத்தை யு.பி.ஐ மூலமாகப் பெற்ற இவர்கள், இன்றைக்கு 70% முதல் 80% அளவிலான பணத்தை யு.பி.ஐ மூலமாகத் தங்களுடைய வாடிக்கை யாளர்களிடம் இருந்து பெற்றுவருவதாகக் கூறுகின்றனர்.

138% அதிகரித்த டிஜிட்டல் பேமென்ட்...
நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அளிக்கும் தகவல்களின்படி, வாடிக்கையாளர்களிடம் இருந்து வியாபாரி களுக்குப் பணம் செலுத்தும் அளவிலான பரிமாற்றங்களின் அளவானது 2022 நவம்பரில் மட்டும் 138% அளவு அதிகரித்திருக்கிறது. கடந்த 2022 நவம்பரில் மட்டும் இந்தியாவில் நான்கு பில்லியன் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களிடம் இருந்து வியாபாரிகளுக்குப் பண பரிவர்த்தனை யு.பி.ஐ வாயிலாக நடந்துள்ளது. அதாவது, 2021-22 நிதியாண்டில் நாட்டில் நடந்த ஒட்டுமொத்த பணப் பரிமாற்றங்களில் 88% அளவிலான பரிமாற்றங்கள் ஏதாவது ஒரு டிஜிட்டல் முறையின் மூலம் நடந்துள்ளது.
நமது நிதி அமைச்சகம் அளிக்கும் தகவல்கள்படி, இந்தியாவில் ஆகஸ்ட் 2022-ல் நடந்த டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களில் கிட்டத்தட்ட 40% அளவு (எண்ணிக்கையின் அடிப்படையில்) யு.பி.ஐ வாயிலாகவே நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட தொகை அமெரிக்க டாலர் மதிப்பீட்டில் கிட்டத்தட்ட 140 பில்லியன் டாலர் என்ற அளவைத் தாண்டுவதாக உள்ளது. சொல்லப்போனால் ஆண்டொன்றுக்கு யு.பி.ஐ மூலமானப் பணப் பரிமாற்றத்தின் அளவு ஆண்டொன்றுக்கு 1.7 டிரில்லியன் என்கிற அளவைத் தொட்டுவிடுகிறது.
இந்த வியத்தகு மாற்றம் பெரு நகரங்களிலும் சிறு நகரங்களிலும் மட்டும் நடந்து உள்ளதாக நினைக்க வேண்டாம். எங்கள் அலுவலகத்தில் பணிபுரிபவர் ஒருவர் சமீபத்தில் மேகாலாயாவில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் மேகி நூடுல்ஸ் வாங்க யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தியிருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய மாற்றம்!
அதிக லாபம் சம்பாதிக்கும் 20 பெரும் நிறுவனங்கள்...
டிஜிட்டலைசேஷன் மற்றும் யு.பி.ஐ-யானது கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப வளர்ச்சிக்குப் பேருதவியாக இருக்கிறது. போக்குவரத்துக்கான சாலை நெட்வொர்க் அதிகரிப்பு (கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்துள்ளது), ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்தது மற்றும் மேலை நாடுகளில் நடைமுறையில் இருக்கிற பிசினஸ் மாடல்கள் இந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டு களில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இது போன்ற பல்வேறு விஷயங்கள் இந்தியாவில் செயல் பட்டும் வரும் அதிக அளவிலான லாபம் சம்பாதிக்கும் 20 நிறுவனங்கள் மட்டும் ஒட்டுமொத்த இந்தியாவில் அனைத்து நிறுவனங்களும் சேர்ந்து சம்பாதிக்கும் லாபத்தில் 80% அளவிலான லாபத்தை சம்பாதிக்க உதவியுள்ளது. அதாவது, இந்தியாவில் செயல்படும் நிறுவனங்கள் அனைத்தின் லாபத்தையும் கூட்டினால் வரும் தொகையில் 80 சதவிகிதத்தை 20 பெரிய நிறுவனங்களே சம்பாதித்துவிடுகின்றன. 10 ஆண்டு களுக்குமுன் இதே அளவீட்டைச் செய்தால் அது 40% என்கிற அளவிலேயே இருந்தது. இந்தவித லாப அதிகரிப்பானது இந்திய பங்குச் சந்தையில் செய்யப்படும் முதலீட்டிலும் சில நிறுவனங்களே அதிக லாபம் தரும் நிறுவனங்களாக உருவெடுக்கும் நிலையை உருவாக்கிவிட்டது.
மார்ச் 31, 2012-ல் முடிவடைந்த 10 ஆண்டுகளில் நிஃப்டி 440 பில்லியன் டாலர் அளவிலான மார்க்கெட் கேப்பிடலை சேஷன் அதிகரிப்பைக் கொண்டிருந்தது. அந்த 10 ஆண்டுகளில் 17 நிறுவனங்களே கிட்டத்தட்ட 80 % அளவிலான பங்களிப்பை (மார்க்கெட் கேப்பிடலை சேஷன் அதிகரிப்பில்) தந்திருந்தன. இந்த 17 நிறுவனங் கள் தந்த மீடியன் டோட்டல் ஷேர் ஹோல்டர் ரிட்டர்ன் (Total Shareholder Return - TSR) 26% (CAGR) என்கிற அளவில் இருந்தது. (பார்க்க, அட்டவணை - 1)
மார்ச் 31, 2022-ல் முடிவடைந்த அடுத்த 10 ஆண்டு களில் நிஃப்டி 1.4 டிரில்லியன் மார்க்கெட் கேப்பிடலை சேஷன் அதிகரிப்பைக் கொண்டிருந்தது. இந்த 10 ஆண்டுகளிலும் கிட்டத்தட்ட 80 % அளவிலான மார்க்கெட் கேப்பிடலைசேஷன் அதிகரிப்பில் பங்களிப்பைக் கொண்டிருந்தது 20 பெரு நிறுவனங்கள் ஆகும். இந்த 20 நிறுவனங்கள் தந்த மீடியன் டோட்டல் ஷேர் ஹோல்டர் ரிட்டர்ன் (Total Shareholder Return - TSR) 18% (CAGR) என்கிற அளவில் இருந்தது. (பார்க்க, அட்டவணை - 2)

லாபத்தை அதிகரிக்கும் கேஷ் ஃப்ளோ...
இந்த இரு அட்டவணை களையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், கிட்டத்தட்ட ஒன்றரை டஜன் நிறுவனங் களே இந்தியாவில் சொத்து உருவாக்கம் (wealth creation) செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது நமக்குப் புரியும்.
இதை மேலும் புரிந்து கொள்ள நாம் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை (Free Cash Flow) ஆராய்வோம். 2012-ல் முடிவடைந்த 10 ஆண்டு களில் உருவான ஃப்ரீ கேஷ் ஃப்ளோவை ஆராய்ந்தால், டாப் 20 நிறுவனங்கள் ஒட்டுமொத்த இந்திய நிறுவனங்களின் கேஷ் ஃப்ளோவில் கிட்டத்தட்ட 23 சதவிகிதத்தை உருவாக்கி இருந்தன. 2022-ல் முடி வடைந்த அடுத்த 10 ஆண்டுக் காலத்தில் இந்த சதவிகித மானது 51% என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த வித மாறுதலை நாம் இரண்டு விதமாக அணுகலாம்.
1. ஒரு சில நிறுவனங்களே – குறிப்பாக, 20 நிறுவனங்களே ஒட்டுமொத்த கார்ப்பரேட் லாபத்தில் 80% (3 வருட மூவிங் ஆவரேஜ் அடிப்படையில்) லாபத்தை அடைந்தும், ஒட்டு மொத்த கார்ப்பரேட் ஃப்ரீ கேஷ் ஃப்ளோவில் பாதி அளவையும் பெற்று இருக்கிறது. 2021-22 நிதியாண்டில் 2019-20 மற்றும் 2020-21-ல் இருந்த நிலையைவிட இதன் செறிவானது (concentration) சற்றுக் குறைந்திருந்தாலுமே, இந்த நிலை அதிகரித்துக்கொண்டே போகிறது. 20 நிறுவனங்கள் வசம் சென்று சேரும் இந்த வித அதிகப்படியான லாபம் மற்றும் 50 சதவிகிதத்துக்கும் மேலான ஃப்ரீ கேஷ் ஃப்ளோ என்கிற இரண்டும் அவற்றைப் போட்டி நிறுவனங்களைத் தாண்டி அதிக தூரம் முன்னேறிச் சென்று அதிகப்படியான ஸ்திரத் தன்மையுடன் செயல்பட வைக்கின்றன. கோவிட்-19-ன் பாதிப்போ, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வின் பொருளாதார ஊக்குவிப்பு (Quantitative easing) குறித்த நடவடிக்கைகளோ இந்தவித நிறுவனங்களின் மீது பெரிய அளவிலான தாக்கம் எதையும் கொண்டு வர முடியாது.
2. மார்ச் 2022-ல் முடிந்த 10 ஆண்டுகளில் வெறும் 20 நிறுவனங்களே நிஃப்டி உருவாக்கிய செல்வத்தில் 80% பங்களிப்பைத் தந்திருக்கின்றன. மார்ச் 2012 நிலவரத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், அந்தக் காலகட்டத்தில் 17 நிறுவனங் களே இதே அளவிலான பங்களிப்பை ஒட்டுமொத்த நிஃப்டியின் செல்வ உருவாக்கத்தைத் தந்துள்ளது. அதாவது, கடந்த இரு 10 ஆண்டுகளில் செல்வ உருவாக்கம் என்பது சில பெரும் நிறுவனங்களால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்பதை அட்டவணை-1, 2-ஐ பார்த்தால், நமக்குத் தெளிவாகத் தெரியும்.

காரணம் என்ன..?
எதனால் ஒரு சில நிறுவனங்களே லாபத்தின் பெரும் பங்கை எடுத்துச் செல்லுதல் மற்றும் வெல்த் கிரியேஷனில் பெரும்பங்கு வகிப்பது போன்ற நிலை உருவானது என்று பார்த்தால், அதற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், இந்தியா சம்பந்தப்பட்டது. இரண்டாவது, உலக நடப்புகள் சம்பந்தப்பட்டது. முதல் காரணத்தை முதலில் பார்ப்போம்.
இரு மடங்கு வளர்ச்சி...
2012-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் இந்தியாவில் நெடுஞ்சாலைகளின் அளவு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது (கிட்டத்தட்ட 76,000 கி.மீட்டர் என்ற அளவில் இருந்து 1,40,000 கி.மீட்டர் என்கிற அளவுக்கு – 6% சி.ஏ.ஜி.ஆர் அளவில்). இதே காலகட்டத்தில் உபயோகத்தில் இருந்த ஸ்மார்ட்போன்களின் அளவு 44 மில்லியன் என்ற அளவில் இருந்து, 600 மில்லியன் என்ற அளவுக்கு அதிகரித்தது (சி.ஏ.ஜி.ஆர் 30% அளவில்). இன்டர்நெட் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும் 137 மில்லியன் என்ற அளவில் இருந்து 658 மில்லியன் என்ற அளவுக்குஅதிகரித்திருந்தது (சி.ஏ.ஜி.ஆர் 17% என்ற அளவில்).
பத்து ஆண்டுகளுக்குமுன் ஆண்டொன்றுக்கு 162 மில்லியன் இந்தியர்கள் விமானப் பயணம் செய்தனர். இன்றைக்குக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு (கோவிட்-19-க்கு முன் – 2020-ல் முடிவடைந்த நிதியாண்டில்) இந்தியர்கள் விமானப் பயணம் மேற்கொள்கின்றனர் (சி.ஏ.ஜி.ஆர் 6% என்ற அளவில்).
15 ஆண்டுகளுக்கு முன் மூன்றில் ஒரு இந்திய குடும்பத் துக்கே வங்கியில் சேமிப்புக் கணக்கு இருந்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட எல்லா இந்திய குடும்பங்களுக்குமே வங்கியில் சேமிப்புக் கணக்கு இருக்கிறது.
இது போன்ற பல்வேறு விஷயங்கள் இணைந்த நெட் வொர்க்கானது தலைசிறந்த மற்றும் பெரிய அளவிலான திறன்கொண்டு அகில இந்திய ரீதியாகச் செயல்பட்டுவரும் பெரும் நிறுவனங்கள் உள்ளூர் போட்டியாளர்களை எளிதில் வெற்றி கொள்வதற்கு வழி வகையைச் செய்தது. உதாரணமாக, ஒரு காலத்தில் கடன் வழங்குவதில் உள்ளூர் நிறுவனங்களின் கை ஓங்கி யிருந்த நிலை மாறி, இன்றைக்கு ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஹெச்.டி.எஃப்.சி போன்ற அகில இந்திய ரீதியிலான பெரும் நிறுவனங்கள் பெரிய அளவில் கடன் வழங்க ஆரம் பித்துவிட்டன. இதனால் இந்த இரண்டு நிறுவனங்களுமே கடந்த 10 ஆண்டுகளில் அகில இந்திய ரீதியாக லாபத்துக்குப் பிந்தைய லாபத்தில் டாப்-20 நிறுவனங்களின் பட்டியலில் இணைந்துவிட்டன.
உலகளாவிய மாற்றங்கள்...
உலக அளவில் கணினி தொழில்நுட்பம் என்பது பெருமளவில் இந்த வகை இந்திய நிறுவனங்களுக்கு உதவியுள்ளது. உதாரணமாக, என்டர்பிரைஸ் டெக்னாலஜி (ஆப்கள், சாஷ் (SaaS) தொழில் நுட்பம் மற்றும் கிளவுட் (Cloud) தொழில்நுட்பங்களானது சரியான வகையில் நடை முறைப்படுத்தப்பட்டதால் லாப விகிதம் அதிகரித்து, வொர்க்கிங் கேப்பிடல் சைக்கிளின் அளவு குறைந்தது, அஸெட் டேர்ன் ஓவர் அதிகரிப்பு போன்றவற்றுக்குப் பெருமளவில் உதவியாக இருந்திருக்கிறது.
இப்படிப்பட்ட திறன் கொண்ட பெரும் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைத் தங்கள் முன்னேற்றத்துக்கு எப்படிப் பயன்படுத்துகின்றன எனப் பார்ப்போம்.
எதிர்காலத்தை மனதில் கொண்டு கடந்த காலத்தில் அல்லது நிகழ்காலத்தில் செலவிடப்பட்ட பணம் (sunk costs) லாபத்தை அதிகரித்துத் தருவதில் பேருதவியாக இருக்கும் நிலையிலான ஆராய்ச்சி வசதிகள், பிராண்ட் பில்டிங் போன்றவற்றில் செலவிடப்படும் தொகையானது ஒப்பீட்டு அனுகூலத்தை ஒரு நிறுவனத்துக்குத் தந்து (competitive advantage) போட்டியாளர்களைவிட அதிக தூரத்துக்குச் சென்று செயல்பட உதவியாக இருக்கும். தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்கள் விரிவாக்கங்களை சுலபத்தில் செய்வதன் மூலம் லாபத்தை அதிகப்படுத்திக்கொள்ளும்.
கணினி டெக்னாலஜியில் ஆரம்பத்தில் செய்யப்படும் முதலீடானது மீண்டும் மீண்டும் தொழிலை வளர்க்கவும் வாடிக்கையாளரை அதிகரிக்கவும் பெருமளவில் உதவும். உபயோகிக்க சுலபமாக இருந்தால் வாடிக்கையாளர், சப்ளையர் போன்ற அனைத்து பங்களிப்பாளர்களுமே இந்த டெக்னாலஜி முயற்சியில் விருப்பத்துடன் இணைந்து செயல்பட்டு நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க உதவியாக இருப்பார்கள்.

லாபத்தின் வளர்ச்சிக்கும் திறன் விரிவாக்கத்துக்கும் இடையே உள்ள அளவு...
கடந்த 40 ஆண்டுகளில் உலக அளவிலான பெரும் நிறுவனங்கள் பலவும் தொட்டறிய முடியாத (Intangible) வகையிலான விஷயங்களில் (பிராண்ட், டெக்னாலஜி) பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்தன. இந்தவகை முதலீடுகள் உற்பத்தி அதிகரிப்புக்கு செய்யப்படும் முதலீட்டைவிட பன்மடங்கு அதிகமாக இருந்தது. இந்த வகை (டெக்னாலஜி, பிராண்ட் போன்றவை) முதலீடுகள் ஏன் அதிகரித்தது என்பதற்கு நான்கு காரணங்கள் உண்டு.
1. எல்லையில்லா விரிவாக்கம் சாத்தியம்: சரியான வகையில் உருவாக்கப்பட்ட விஷயங்களை எந்த அளவுக்கு வேண்டுமென்றாலும் சுலபமாக விரிவாக்கம் செய்துகொள்ள முடியும் (உதாரணமாக, ஒரு நிறுவனம் தன் செயல்பாடுகள் குறித்த சொந்தமான ஒரு டேட்டாபேஸ் ஒன்றை உருவாக்குதல்)
2. எதிர்காலத்தை மனதில்கொண்டு கடந்தகாலத்தில் அல்லது நிகழ்காலத்தில் செலவிடப்பட்ட பணம் (sunk costs): இந்த வகை செலவினங்களை மீட்டெடுக்க நீண்ட நாள்களாகும்/அல்லது முடியாமல் போகலாம்.
3. ஒரு நிறுவனம் செய்த முதலீடு மற்றொரு நிறுவனத்துக்கு உதவும் வகையில் இருப்பது: ஒரு நிறுவனம் செய்யும் இது போன்ற முதலீடுகள் அந்த நிறுவனத்துக்குப் பிற்பாடு பலனளிக்கலாம். அது மட்டுமல்ல, வேறு நிறுவனங்களுக்கும் பலன் தரலாம். (உதாரணமாக, SAP நிறுவனம் செய்துள்ள இந்த வகை முதலீட்டால் கிடைக்கும் சாஃப்ட்வேரின் மூலம் பல நிறுவனங்கள் பலன் அடைவது).
4. இணைவதன் மூலம் கிடைக்கும் அதிகப்படியான ஒத்துழைப்பு: பல்வேறு நிறுவனங்கள் செலவு செய்து உருவாக்கும் இது போன்ற தொட்டுணர முடியாத சொத்துகள் பலவற்றையும் இணைத்து செயல்படுத்துவதன் மூலம் புதிய பல அனுகூலங்கள் கிடைப்பது (சொந்தமாக உருவாக்கிய டேட்டா பேஸையும் SAP நிறுவனத்தின் சாஃப்ட்வேரையும் இணைத்து டேட்டா அனா லிடிக்ஸ் செய்து அதன் மூலம் பலனடைவது).
நிறுவனங்களின் தொட்டு உணர முடியாத சொத்துகளில் முதலீடு செய்ய காரணமாக இருக்கும் இந்த நான்கு விஷயங் களும் கடந்த இரு 10 ஆண்டு களில் இந்தியாவில் செயல் படுத்தப்பட்ட திட்டங்களும் கொண்டு வரப்பட்ட மாறுதல் களும் இணைந்து எவ்வாறு இந்த வகை பெரிய நிறுவனங் களுக்குப் பயன் அளித்தது எனப் பார்ப்போம்.
ஜி.எஸ்.டி-யின் வருகை...
2017-ல் அறிமுகப்படுத்தப் பட்ட ஜி.எஸ்.டி இந்தியாவில் இருக்கும் 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங் களை (உதிரியாக இருந்த பல்வேறு மாநில அளவிலான சந்தைகளை) ஒரே சந்தையாக மாற்றியது.
நாடுதழுவிய அளவிலான சாலைகள் கட்டுமானமானது பொருள்களைச் சுலபமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்ல உதவியது. உதாரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் கோவை யில் இருந்து லூதியானாவுக்கு ஒரு லாரி செல்ல (கிட்டத்தட்ட 2,800 கி.மீட்டர்) 10 நாள் ஆனது. இன்றைக்கு இதே தூரத்தை மூன்றே நாள்களில் சென்ற டைய முடிகிறது.
வரி ஏய்ப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பைத் தங்கம், நிலம் போன்ற ‘பிசிக்கல் அஸெட்’ என்பதில் இருந்து, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் ‘ஃபைனான்ஷியல் அஸெட்’ என்பதற்கு மாற்றச் செய்தது.
கடந்த காலத்தில் ஒவ்வொரு ஐந்து ஆண்டு காலத்திலும் இந்திய குடும் பங்கள் கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை சந்தைக்கு மடை மாற்றிவிட்டன. இதனால் நல்ல மற்றும் திறமை மிகுந்த நிறுவனங்களின் காஸ்ட்-ஆப்-கேப்பிடல் கணிசமாகக் குறைந்துள்ளது.
10 ஆண்டுகளுக்கு முன் ரூ.2.50-ஆக இருந்த 1 எம்.பி டேட்டாவுக்கான கட்டணம் தற்போது ரூ.0.0043 என்கிற அளவுக்குக் குறைந்துள்ளது. இதனால் இந்தியா இன்றைக்கு உலகளவில் அதிக மொபைல் டேட்டாவை உபயோகிக்கும் நாடாக இருக்கிறது.
இதனால் மூன்று பெரும் நிறுவனங்கள் பெரும் பயன் அடையும் நிலையில் இருக் கிறது. அந்த மூன்று நிறு வனங்கள் பற்றிப் பார்ப்போம்.
டி.சி.எஸ்...
இது ஒரு ஐ.டி சர்வீசஸ் நிறுவனம் ஆகும். 1981-ல் இந்த நிறுவனம் டாடா ரிசர்ச் டெவலப்மென்ட் அண்ட் டிசைன் சென்டர் என்ற பெயரில் ஆராய்ச்சி மையத்தை நிறுவியது.
Y2K பிரச்னை, பங்குச் சந்தைகளுக்கான சாஃப்ட் வேர், வங்கிகளுக்கான (BaNCS) சாஃப்ட்வேர் உள்ளிட்ட பல முக்கியமான பணிகளுக்கு இந்த வசதியில் இருந்து பெறப்பட்ட உதவிகளே இந்த நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட உதவியது. பணியாளர்களுக்கான பயிற்சிகளை அளிப்பதிலும் கடந்த 40 ஆண்டுகளாக முன்னோடியாகச் செயல் பட்டு வருகிறது.
டாக்டர் லால்பாத் லேப்ஸ்...
உள்ளுர் லேப்கள் கடும் போட்டியைத் தருகிற தொழிலில் கால்பதித்து தன்னுடைய 4,730 மாதிரி சேகரிப்பு நிலையங்கள் வாயிலாக வாடிக்கையாளருக்கு மிக அருகே சென்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிற நிறுவனம் ஆகும்.
10 ஆண்டுகளுக்கு முன் கிட்டத்தட்ட 820 மாதிரி சேகரிப்பு மையங்களை மட்டுமே கொண்டிருந்த இந்த நிறுவனம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்து வதன் மூலம் மாதிரிகள் சேகரிப்பில் இருந்து, அது லேபுக்குச் சென்று சேர்ந்து வாடிக்கையாளருக்கு முடிவுகள் சென்று சேரும் வரையிலான துல்லியமான ஒருங்கிணைப்பைச் செய்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுக் காலத்தில் வருமான மானது கிட்டத்தட்ட 6 மடங்கும் லாபமானது 8 மடங்கு அதிகரித்துள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி பேங்க்...
1995-ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது முதலே இந்த வங்கி தொடர்ந்து தன் வளர்ச்சியை சிறப்பாகக் கட்டமைத் துக்கொண்டே வருகிறது. தொழில்நுட்பத்தின் உபயோகத்தின் மூலம் வெகுவேகமான செயல் பாடுகள் (10 செகண்டில் பர்சனல் லோன் போன் றவை), வாடிக்கையாளர் களுடைய டேட்டாவை அனலைஸ் செய்து ப்ரீ-அப்ரூவ்டு லோன்கள் வழங்குதல், லாபத்தில் கணிசமான பங்கை மறுமுதலீடு செய்து ஸ்திரமான செயல்பாட் டுக்கான கட்டமைப்பை வளர்த்துக்கொள்தல் போன்றவற்றையும் சரியாகச் செய்து வருகிறது இந்த வங்கி.