நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

கடன் வாங்கியிருப்பவர்களுக்கு ஆர்.பி.ஐ-யின் சந்தோஷமான செய்தி..!

கடன்தாரர்...
பிரீமியம் ஸ்டோரி
News
கடன்தாரர்...

தனியார் வங்கிகள் இந்த தாமத வட்டியை உடனே வசூல் செய்யாமல், மேலும் தாமதப்படுத்தி இன்னும் அதிக தொகையை வசூல் செய்கின்றன...

நம்மில் பெரும்பாலா னோர் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன் என ஏதாவது ஒரு கடனை வாங்கியிருக்கிறோம். இந்தக் கடன்களுக்கான தவணையைத் தொடர்ந்து கட்டி வந்தாலும், நிதிச் சிக்கல் காரணமாக ஏதாவது ஒரு தவணை கட்டுவது தவறி விடுகிறது. அப்போது கடன் வழங்கிய நிறுவனம், அபராத வட்டி (Penal Interest) விதிக்கிறது.

எஸ்.கார்த்திகேயன் 
நிதி, ஆலோசகர், 
https://winworthwealth.com/
எஸ்.கார்த்திகேயன் நிதி, ஆலோசகர், https://winworthwealth.com/

வட்டிக்கு வட்டி...

பொதுவாக, ஒரு கடன் தவணையைக் கட்டத் தவறி னால், அதையும் சேர்த்துக் கட்டாமல், அடுத்த மாதத் தவணையை மட்டும் பலரும் கட்டுகின்றனர். இந்த நிலையில், கட்டாத தவணைக்கு வட்டிக்கு வட்டி விதிக்கப்படுவதால், அந்தத் தொகையானது நீண்ட காலத்தில் மிகப் பெரிய தொகையாகப் பெருகிவிடு கிறது. கொரோனா காலத்தில் மாதத் தவணை கட்டாத பலரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளானார்கள்.

இது மாதிரி பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு மகிழ்ச்சி யான செய்தியை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.அதாவது, தவணை கட்டத் தவறியவர்களுக்கு அபராத வட்டி என்பதைவிட ‘அபராதக் கட்டணம்’ (Penal Charge) என ஆர்.பி.ஐ மாற்ற உள்ளது. ஆர்.பி.ஐ அண்மை யில் வெளியிட்டுள்ள ஒரு சுற்றறிக்கையில், ‘கடன் தவணையைச் செலுத்துவதில் தாமதம் அல்லது தவணை தவறுதல் போன்வற்றுக்கு நியாயமான அபராதத்தைக் கடன் வழங்கிய நிறுவனங்கள் விதிக்கலாம். இந்த அபராதம் வெளிப்படையான முறையில் ‘அபராதக் கட்டணங்கள்’ என்கிற வடிவில் இருக்க வேண்டும். இந்தத் தொகையை பாக்கி உள்ள கடன் தொகை யுடன் சேர்க்கக் கூடாது. இதை ‘அபராத வட்டி’ வடிவத்தில் விதிக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டுள்ளது.

கடன் வாங்கியிருப்பவர்களுக்கு 
ஆர்.பி.ஐ-யின் சந்தோஷமான செய்தி..!

அதாவது, தவணை தவறி யதற்கான அபராதத் தொகை தனியாகப் பராமரிக்கப்பட வேண்டும். அந்தத் தொகை யைக் கடன் பாக்கியுடன் சேர்க்கக் கூடாது. அதை தனியாகத்தான் வசூல் செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.

அதே நேரத்தில், கடன் வாங்கியவரின் கிரெடிட் ரிஸ்க் சுயவிவரத்தில் (Profile) ஏதேனும் சரிவு ஏற்பட்டால், வட்டி விகித நிர்ணய வழி காட்டுதல்களின்கீழ், கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் ரிஸ்க் பிரீமியத்தை (Credit Risk Premium) மாற்றிக்கொள்ள முடியும். அதாவது, கடன் வாங்கியபின், அதைச் சரி யாகக் கட்டாதவர்களுக்கு அதிக வட்டியைக் கடன் தரும் நிறுவனங்கள் நிர்ணயிக் கலாம் என ஆர்.பி.ஐ தெரிவித் துள்ளது.

அதாவது, கடன்தாரர்கள் எப்போதாவது ஒருமுறை கடன் தவணை கட்டத் தவறினால் சிக்கல் இல்லை. கடன் தவணையை அடிக்கடி தவறவிடுபவர்களுக்கு அதிக வட்டி நிர்ண யிக்கப்படலாம். மேலும், ஆர்.பி.ஐ ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கும்போது, சரியான நேரத்தில் தவணை கட்டாதவர்களுக்கு அவர்களின் கடன் ரிஸ்க் அதிகரித்திருப்பதால், அவர்களுக்கு வட்டி விகிதம் குறைக்கப்படாமல் போக வாய்ப்புள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை..?

‘‘அபராதத் தொகையை தனியாகப் பராமரித்து வாங்குவதன்மூலம் கடன்தாரர்களிடம் இருந்து கடனை சரியாகத் திரும்பக் கட்டும் ஒழுங்கை கொண்டு வர முடியும்’’ என ஆர்.பி.ஐ அந்த சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. தவிர, பெரும்பாலான தனியார் வங்கிகள் இந்த தாமத வட்டியை உடனே வசூல் செய்யாமல், மேலும் தாமதப்படுத்தி இன்னும் அதிக தொகையை வசூல் செய்வதை வழக்கமாக வைத்திருப்பது ஆர்.பி.ஐ-யின் கவனத்துக்கு வந்திருக்கிறது.

இந்தத் தொகையானது கடன் முடிக்கும் காலத்தில் பெரும் தொகையாக அதிகரித்திருக்கும். இதை வாராக்கடனாக கணக்கில் எடுத்துக்கொண்டு, அப்போதுதான் மொத்தமாக வசூலிக்கிறார்கள். கடன் பாக்கி எதுவும் இல்லை என என்.ஓ.சி வாங்கும் போதுதான் சிறிய அளவிலான அபராதத் தொகை பெரும் தொகையாகப் பெருகியிருப்பதைக் கண்டு கடன்தாரர்கள் திகைத்துப் போகிறார்கள். எனவேதான், இந்தப் பிரச்னையை ஆர்.பி.ஐ கையில் எடுத்திருக்கிறது.

விரைவில் வரைவு விதிமுறைகள்...

மேற்கூறிய நடைமுறைக்கான வரைவு விதிமுறைகளை (Draft guidelines) விரைவில் ஆர்.பி.ஐ வெளியிட இருக்கிறது. இது தொடர்பாக வங்கிகள், வீட்டுவசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் கடன் வாங்கியவர்களின் கருத்துகளை ஆர்.பி.ஐ கேட்க உள்ளது.

ஆர்.பி.ஐ இப்போது அறிவித்திருக்கும் வரைவு விதிமுறைகள் கூடிய விரைவில் நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே கடன் வாங்கிய அனைவரின் விருப்பமாகும்.