Published:Updated:

செபி அனுமதி இல்லாமல் பங்கு ஆலோசனை: பி.ஆர்.சுந்தருக்கு பங்குச் சந்தையில் ஈடுபட ஒரு வருடம் தடை...!

பி.ஆர்.சுந்தர்

செபியிடம் முறையாகப் பதிவு செய்யாமல் பங்கு ஆலோசனைகளைப் பல ஆண்டுகளாக வழங்கிவந்த பி.ஆர்.சுந்தர், அவருடைய மன்சுன் கன்சல்டிங் நிறுவனம், அதன் இணை புரோமோட்டர் மங்கையற்கரசி சுந்தர் ஆகியோருக்கு, செபி நோட்டீஸ் அனுப்பியது.

Published:Updated:

செபி அனுமதி இல்லாமல் பங்கு ஆலோசனை: பி.ஆர்.சுந்தருக்கு பங்குச் சந்தையில் ஈடுபட ஒரு வருடம் தடை...!

செபியிடம் முறையாகப் பதிவு செய்யாமல் பங்கு ஆலோசனைகளைப் பல ஆண்டுகளாக வழங்கிவந்த பி.ஆர்.சுந்தர், அவருடைய மன்சுன் கன்சல்டிங் நிறுவனம், அதன் இணை புரோமோட்டர் மங்கையற்கரசி சுந்தர் ஆகியோருக்கு, செபி நோட்டீஸ் அனுப்பியது.

பி.ஆர்.சுந்தர்

இணையதளம் மூலமாகவும், யூடியூப் மூலமாகவும் பங்கு வாங்குவது, விற்பது தொடர்பான ஆலோசனைகளை வழங்கிவந்த பி.ஆர்.சுந்தருக்குப் பங்குச் சந்தையில் ஈடுபட ஒரு வருடத்துக்குத் தடை விதித்துள்ளது சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையம் செபி.

செபியிடம் முறையாகப் பதிவு செய்யாமல் பங்கு ஆலோசனைகளைப் பல ஆண்டுகளாக வழங்கிவந்த பி.ஆர்.சுந்தர் மீது புகார்கள் எழுந்த நிலையில், செபி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக ஃபின் இன்ஃப்ளூயன்சர் பி.ஆர்.சுந்தர், அவருடைய மன்சுன் கன்சல்டிங் நிறுவனம், அதன் இணை புரோமோட்டர் மங்கையற்கரசி சுந்தர் ஆகியோருக்கு, செபி நோட்டீஸ் அனுப்பியது.

செபி
செபி

செபியின் நோட்டீஸை அடுத்து பி.ஆர்.சுந்தர், மன்சுன் நிறுவனம், மங்கயற்கரசி சுந்தர் செபியுடன் செட்டில்மென்ட் செய்துகொள்ள முன்வந்துள்ளனர். அதன்படி, இதுவரை மன்சுன் நிறுவனம் பங்கு ஆலோசனைக்காக வாங்கிய கட்டணத்தை செபிக்கு வழங்க முன்வந்தது. அதாவது, பங்கு ஆலோசனைக் கட்டணம் ரூ.4.68 கோடியுடன், அபராதம் மற்றும் வட்டி சேர்த்து ரூ.6.07 கோடியை செபியிடம் கொடுத்து செட்டில்மென்ட் செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பி.ஆர்.சுந்தர் ஒரு வருடத்துக்கு பங்குச் சந்தையில் ஈடுபடக் கூடாது எனவும் செபி உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில் பங்கு முதலீடு சார்ந்து ஆலோசனைகளை சமூக வலைதளங்கள், யூடியூப் போன்றவற்றில் வழங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இவர்களில் யார் செபி அமைப்பில் முறைப்படி பதிவு செய்தவர்கள் என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என்பதையே இது உணர்த்துகிறது!