மற்ற எபிசோடுகள்
Published:Updated:

பத்தல... பத்தல... மினிமலிசம் - 11 - விலகிச் செல்வதும்கூட வாழ்வை வளப்படுத்தும்!

விலகிச் செல்வதும்கூட வாழ்வை வளப்படுத்தும்!
பிரீமியம் ஸ்டோரி
News
விலகிச் செல்வதும்கூட வாழ்வை வளப்படுத்தும்!

அவசர காலத்தில் நமக்கு என் னென்ன தேவை? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போது கவனமாக இருங்கள். எல்லாவற்றையும் ‘அவசரப் பொருள்’ என்று நியாயப்படுத்துவது எளிது.

மினிமலிச வாழ்வுலகில் சில விதி களைக் கடைப்பிடித்தால் எல்லோமே இனிதாகும். அந்த வகையில் அவசரப் பொருள்கள் விதியும், தன்னிச்சையான எரிப்பு விதியும் மிக முக்கியமானவை. இந்த எரிப்பு விதியானது பொருள் களைத் தாண்டி, நம் வாழ்வை மகத் தானதாக மாற்றும் பல விஷயங்களை உள்ளுக்குள் பொதிந்து வைத்திருக் கிறது. பயன்படுத்திப் பார்த்தால், மாற் றத்தை நிச்சயமாக உணர முடியும்.

அவசரப் பொருள்கள் விதி

மினிமலிச வாழ்க்கைக்குள் நுழைந்த சிலருக்கு எல்லாமே பிரச்னையாகவே தோன்றும். வேறு சிலருக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும். வாழ்வை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தே இது அமையும். ஏனெனில், பார்வைகள் மாறலாம்.

எவ்வாறாயினும், எப்போதும் சில பொருள்களை வைத்திருப்பது சிறந் தது. அதாவது இயற்கைப் பேரிடர்கள், பெருந்தொற்றுக் காலங்கள் மற்றும் எதிர்பாரா நிகழ்வுகளின்போது அவை கைகொடுக்க வேண்டும். இந்தப் பொருள்கள் அனைத்தும் ‘அவ சரப் பொருள்கள்’ என்கிற வகையின் கீழ் வருகின்றன. அப்படியானால் அதற்கு ஒரு விதி இருக்கும்தானே? அதுதான் அவசரப் பொருள்கள் விதி!

அவசரப் பொருள் என்பது விபத்துக் காப்பீடு, மருத்துவக் காப்பீடு போன்று அத்தியாவசியமான ஒன்று. பொதுவாக, அவசரப் பொருள்களில் முதலுதவிப் பெட்டி, தண்ணீர், டார்ச், மருந்துகள் போன்றவை அடங்கும். இந்தப் பொருள்களை நாம் ஒருபோதும் பயன்படுத்த வேண்டி வராது என்று நம்புவோம். ஆனால், அவசர காலப் பொருள்கள் நம் கைவசம் இருக்கின்றன என்கிற எண்ணமே மன அமைதியை அளிக்கும்.

சரி... அவசர காலத்தில் நமக்கு என் னென்ன தேவை? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்போது கவனமாக இருங்கள். எல்லாவற்றையும் ‘அவசரப் பொருள்’ என்று நியாயப்படுத்துவது எளிது. ஆனால், பெரும்பாலான நேரங் களில் அவை தேவைப்படாது. அது மட்டுமல்ல, எவ்வளவுதான் தயார் செய் தாலும், எல்லாவற்றுக்கும் நம்மால் தயாராக முடியாதுதானே... ஏனெனில், ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என்றே நம்மைப் பார்த்துச் சொல்கிறது வாழ்க்கை.

இதுவரை நாம் எப்போதாவது நமக்குத் தேவைப்படும் பொருள்களைக் கூட வாங்கி வைப்பதை ஒரு பழக்க மாகவே பற்றிக்கொண்டிருக்கிறோம். அவசர காலப் பொருள்களையும் இப்படித்தான் சேகரித்து வைக்கிறோம். உதாரணமாக ஒரு டார்ச் லைட் போதுமானது என்கிற நிலையில், நாம் எமர்ஜென்சி லைட் ஒன்றையும் வாங்கி வைக்கிறோம். அதைப் பயன்படுத்து கிற நிலையே வராதது நல்ல விஷயம் தான். ஆனால், பயன்பாடே இல்லாத காரணத்தால், அதிலுள்ள பேட்டரி பழுதாகிப் போனது. இதுபோன்ற அநா வசியங்களைத் தவிர்க்கும் வகையில் நம் தேர்வுகள் அமைய வேண்டும்.

விலகிச் செல்வதும்கூட வாழ்வை வளப்படுத்தும்!
விலகிச் செல்வதும்கூட வாழ்வை வளப்படுத்தும்!

நிச்சயம் தேவை என்பதற்காக ஓராண்டுக் காலத்துக்குத் தேவையான பலசரக்குப் பொருள்களையும், அளவு மாறக்கூடிய உடைகளையும், சோப்பு, பற்பசையையும் மூட்டை மூட்டையாக வாங்கி அடைத்து வைப்போமா? இந்தத் தயாரிப்புகள் ஒவ்வொன்றின் சிறிய பங்குகளை நமக்குத் தேவைப்படும் போதுதானே வாங்குகிறோம். அதே போலத்தான் மற்ற பொருள்கள் பற்றி யும் சிந்திக்க வேண்டும். இதை நாம் சரியாகச் செய்தால், நாம் அதிகப் படியான குப்பைகளைத் தவிர்க்கலாம்.

தன்னிச்சையான எரிப்பு விதி

நம் பொருள் உடைமைகள் அடிக்கடி அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிவீர்களா?

பணம் கொடுத்து வாங்கியவை மட்டுமல்ல; இலவசமாகக் கிடைக் கின்றன என்பதற்காகவே நம்மில் பலர் டிஜிட்டல் குப்பைகள் உட்பட, வேண் டாத பல விஷயங்களைப் பாதுகாத்துக் கொண்டிருப்போம். உதாரணம்... பிடிஎஃப் வடிவில் பரவிக் கொண்டிருக் கும் நாளிதழ்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள். இவை ஒருவகையில் திருட்டு எனத் தெரிந்தாலும்கூட பலர் இவற்றை டௌன்லோடு செய்து மொபைலில் பத்திரப்படுத்துவதை ஒரு வேலையாகவே செய்கிறார்கள். அவற்றையெல்லாம் படிப்பார்களா என்றால் ‘இல்லை’ என்பதே உண்மை யான பதில். இதோடு, டௌன்லோடு செய்யப்படும் திரைப்படங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இப்படியாக, கடந்த காலத்தில் நாம் வாங்கியவையும் சேகரித்தவையும் ஒரு கட்டத்தில் மேலும் மேலும் சுமை யாகவே வளரும். பின்னர் அது ஒரு கொதிநிலையை அடையும். அப்போது தான் அதை நாம் உணர்வோம்... இவையெல்லாம் தேவையே இல்லாத ஆணிகள் என்று. உண்மையில் இந்த அளவு வெப்பநிலை அதிகரிக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை.

மினிமலிஸ்டுகளின் சந்திப்பு நிகழ்ச்சி யொன்றில் ஓர் இளைஞர், ``எனது மொபைலில் பல பத்திரிகைகள், புத்த கங்களைச் சேமித்து வைத்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றையும் படிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால், அவை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. இப்படி என்னிடம் நூற்றுக்கணக்கான படிக்காத பத்திரிகைகள் உள்ளன. அவை என்னை அழுத்துகின்றன” என்றார்.

மற்றொரு மினிமலிஸ்ட் கேட்டார்... ``இப்போதே அவை அனைத்தையும் நீக்கினால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்... வருத்தப்படுவீர்களா அல்லது நிம்மதியாக உணர்வீர்களா?”

“அவற்றை நீக்குவது பற்றி நான் ஒருபோதும் நினைத்ததில்லை. ஆனால், நான் நிம்மதியாக இருப்பேன் என்று நினைக்கிறேன்” என்று அந்த இளைஞர் கூறினார்.

“அப்படியானால் அவற்றையெல்லாம் நீக்குவோம். இங்கேயே... இப்போதே!”

கூட்டத்தில் இருந்த சிலர் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை வழங்கினர். பின்னர் ஆரவாரம் தொடங்கியது... “டெலீட் இட்! டெலீட் இட்! டெலீட் இட்!”

அங்கேயே, அந்த இடத்திலேயே, அவர் அனைத்தையும் நீக்குவதற்கான பட்டனை அழுத்தினார். அவை அனைத்தும் மறைந்து விட்டன. மொபைலில் படிக்காத விஷயங்களை நீக்கியதிலிருந்து அவர் எதிர்பார்க்காத நிம்மதி யையும் புதிய அமைதியையும் பெற்றதாக, அவர் அடுத்த சந்திப்பில் எல்லோருக்கும் நன்றி தெரிவித் தார்.

நமது டிஜிட்டல் ஒழுங்கீனத்தை அகற்றுவது மிக எளிமையானதாக இருக்கிறதுதானே? நமது பொருள் உடைமைகளிலும் நாம் அதையே செய்ய வேண்டும். இதனால்தான் மினிமலிஸ்ட் உலகில் தன்னிச்சையான எரிப்பு விதி உருவாகியுள்ளது, இது ஓர் எளிய கேள்வியுடன் தொடங்குகிறது...

இந்தப் பொருள் தன்னிச்சையாக எரிந்து போவதாக வைத்துக்கொள்வோம்... அப்போது நான் வருத்தப்படாமல் ‘போகட்டும் விடு’ என்று தானே நினைப்பேன்?’ அப்படியானால், அதிலிருந்து விடுபடலாமே!

இந்த விதி பொருள் உடைமைகள், டிஜிட்டல் ஒழுங்கீனம் முதல் தொழில் மற்றும் உறவுகள் வரை எதற்கும் பொருந்தும். இது நம் வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் கேட்கத் தகுந்த ஒரு கேள்வி. ஏனெனில், இது எதைச் சேர்ப்பது மதிப்பு மற்றும் எதிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்பதை நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது.

ஆம்... தேவையற்ற குப்பைகளை அகற்ற வேண்டிய செயல்முறை திடப்பொருள்களுக்கு மட்டுமல்ல... டிஜிட்டல் பொருள்களுக்கு மட்டு மல்ல... நம் மனதுக்கும்தான்!

- இனிதே வாழப் பழகுவோம்...

*****

மொபைலுக்குள் எவ்ளோ குப்பை!

ரயில் அல்லது பஸ் பயணத்தின்போது ஜன்ன லோர இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே செல்வது சுவாரஸ்யமான அனுபவம்தானே! அப்படியொரு பயணம் வாய்த்தாலோ, ஒரு விடுமுறை நாளிலோ இந்த விஷயத்தைச் செய்து பாருங்களேன்...

வீட்டுக்குள் இருக்கிற குப்பைகள் வெளிப் படையாகத் தெரியும். அதேபோல தேவையற்ற பொருள்களை அடையாளம் கண்டு அகற்றவும் நாம் மினிமலிஸ்ட் உலகில் அறிந்து கொண்டு விட்டோம். ஆனால், பாருங்கள்... நம் மொபைலுக்குள் எவ்வளவு குப்பைகள் இருக் கின்றன? அவற்றை அகற்ற வேண்டும் என என்றாவது நினைத்திருக்கிறோமா... இனிமேல் அதில் எதையுமே சேமிக்க முடியாது என்கிற ‘மொபைல் ஃபுல்’ நிலை வரும் வரை...

பத்தல... பத்தல... மினிமலிசம் - 11 - விலகிச் செல்வதும்கூட வாழ்வை வளப்படுத்தும்!

* உங்கள் மொபைலில் இப்போது எவ்வளவு மெமரி நிறைந்து காணப்படுகிறது?

* தேவையற்ற, ஒருமுறை பயன்படுத்தப்படாத பிடிஎஃப் கோப்புகள், நாளிதழ்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், திரைப்படங்கள், வீடியோக்கள், பாடல்கள் போன்றவை எவ்வளவு உள்ளன?

* இவை அனைத்தையும் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும் எனில், அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? அவ்வளவு நேரத்தை உங்களால் தர முடியுமா?

* இதற்கான பதில் ‘ஆமாம்... முடியாது’ என்றால், இப்போதே அவற்றையெல்லாம் டெலீட் செய்ய வேண்டியதுதானே?

* இதே செயல்முறையை டேப்லெட், லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஆகியவற்றுக்கும் செய்யுங்கள். மாற்றத்தின் பலனைப் பெறுங்கள்!