பத்தல... பத்தல... மினிமலிசம் - 12: புதிய யோசனைகளே நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன!

தேவை ஏற்பட்டால், கிட்டத்தட்ட எதையும் விட்டு வெளியேறத் தயாராக இருக்கிற மனநிலை கைவரப் பெற்றவர் களுக்கு கவலைகள் இல்லை; மன அழுத்த மும் இல்லை.
மினிமலிஸ்ட்டுகள் மற்றவர்களிடம் அடிக்கடி சொல்கிற உதாரணம் இது... ‘உங்கள் சோபா என்றென்றும் நிலைக்காது. ஆனால், உங்கள் நினைவுகள் எப்போதும் இருக்கும்!’ ஆம்... ‘உங்கள் பணத்தை அனுபவங்களுக்காகச் செலவிடுங்கள், பொருள்களுக்காக அல்ல!’ என்ற மினிமலிச பொன்மொழிக்குள் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஏராளம்.
இந்தத் தத்துவம் நம்மில் பலர் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதானே?
சில நேரங்களில் நாமேகூட ‘மினிமலிஸ்ட்’ வாழ்க்கையை நிச்சயமற்றதாக உணரக்கூடும். குறைந்தபட்ச வாழ்க்கை, வெறுமையான வாழ்க்கை, எப்போதும் இல்லாத வாழ்க்கை என மினிமலிசத்தை பற்றி எண்ணிக்கொண்டு, அந்த வாழ்க்கையை வாழ பலரும் விரும்புவ தில்லை. ஆனால், மினிமலிசம் என்றால் அது வல்ல என்பது இப்போது உங்களுக்கு நன்கு தெரியும்.
‘மாற்றம் என்பதே மாறாதது’ விதி
ஒரு வீடு எரிகிறது என்று வைத்துக் கொள் வோம். அப்போது நாம் என்ன செய்வோம்? நமக்கு மிக முக்கியமான விஷயங்களை மட்டுமே காப்பாற்ற முயற்சி செய்வோம். அதாவது... விலையுயர்ந்ததோ, அவசியமானதோ அங்குள்ள பொருள்களை பற்றி முதலில் கவலைப்பட மாட்டோம். நம் அன்புக்குரியவர்கள் மற்றும் செல்லப்பிராணி களின் பாதுகாப்பை தானே நாம் முதலில் உறுதி செய்வோம்... அவர்கள் பாதுகாப்பான பகுதிக்குச் சென்ற பிறகுதானே அவசியமான, விலை மதிப்புள்ள அல்லது உணர்வுபூர்வமான பொருள்களைப் பாதுகாக்கத் தொடங்குவோம்... பொருள்களுடன் ஓர் உணர்வுபூர்வமான பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால், வாழ்க்கை ரொம்பவே எளிதாகி விடும். எதிலிருந்தும் விலகிச் செல்ல, விட்டு விடுதலையாக முடியும். உடைமைகளுடன் ஒருபோதும் அதிக ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதுதான் இதற்கான முதல் வழி. பொருள்களுடான பற்றுதல் இல்லாமல் இருக்கையில், நாம் ஒரு சுதந்திரமான பறவையைப் போல உணர முடியும். அந்த உணர்வு நம் வாழ்க் கையை மிகவும் நெகிழ்வானதாக ஆக்கு கிறது. அது மட்டுமல்ல; அந்த வாழ்க்கை வாய்ப்புகளால் நிரப்பப்படுகிறது.

நாம் ஒரு புதிய யோசனை அல்லது பழக்கத்தை ஏன் ஏற்றுக்கொள்கிறோம்? அது நம் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும் திறனைக் கொண்டிருப்பதால்தானே அவ்வாறு செய்கிறோம். புதிய யோசனைகள் நம் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன. பழக்க வழக்கங்களுக்கும் இதுவே பொருந் தும். ஆனால், காலப்போக்கில் நம் யோசனைகள் மாறுகின்றன; மேம்படுத்தப் படுகின்றன; மேலும் விரிவடைகின்றன. அதனால், நம்முடைய தற்போதைய பழக்கவழக்கங்கள் புதியவற்றால் மாற்றப் படுகின்றன. அவையே நாம் தொடர்ந்து வளர உதவுகின்றன. புதிய யோசனைகள் அல்லது பழக்கவழக்கங்களுக்கான மனநிலையில் நாம் இருந்தால், நாம் வளரத் தயாராக இருக்கிறோம் என்று அர்த்தம்!
நாம் இந்த உலகில் ஒரு புதிய உறவைக் கொண்டுவந்தால், அவர்களின் அன்பு, மரியாதை, கனிவைச் சம்பாதிக்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் புரிந்துணர்வை யும் நாம் வழங்காவிட்டால், அவர்களும் வெளியேறத் தயாராகவே இருப்பார்கள். எனவே, உறவுக்குப் பங்களிக்க இருவரும் கடுமையாக உழைக்க வேண்டும். தொடர்பில் இருக்க வேண்டும். ஒருவருக் கொருவர் தேவைகளை அறிந்திருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக அன்பு, தொடர்பு, புரிந்துகொள்ளும் தன்மை, அக்கறை - நம்பிக்கையை பரஸ்பரம் உருவாக்க வேண்டும்.
தேவை ஏற்பட்டால், கிட்டத்தட்ட எதையும் விட்டு வெளியேறத் தயாராக இருக்கிற மனநிலை கைவரப் பெற்றவர் களுக்கு கவலைகள் இல்லை; மன அழுத்த மும் இல்லை. அவ்வாறு செய்வதே அவர் களின் தொடர்ச்சியான வளர்ச்சியைப் பாதுகாக்கிறது; உறவுகளை மேம்படுத்துகிறது. இவைதான் நிறைவான, அர்த்தமுள்ள வாழ்க்கைக்குப் பங்களிக்கின்றன.
மினிமலிசத்தின் ஐந்து வகைகள்
முழுமையான மினிமலிச வாழ்க்கைக்கு இன்னமும் தயாராகாத உங்களை மினிமலிஸ்ட் என்று அழைக்க முடியுமா? நிச்சயம் முடியும்!
மினிமலிசம் என்பது விஷயங்களை (பொருள்களை) அகற்றுவது மட்டுமல்ல... அது தேவையற்றதை நீக்குவதாகும். அதனால் நாம் மிக முக்கியமானவற்றில் கவனம் செலுத்தும் வாய்ப்பு உருவாகிறது. குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதில் குறைவான விஷயங்கள் இல்லை. அதிகமாக இருப்பதை, தேவையற்றதை அகற்றுவதற்காகவே இது குறைவாக உள்ளது. அப்படிச் செய்யும்போது அதிக நேரம், அதிக ஆற்றல், அதிக சுதந்திரம் கிடைக்கிறது. நோக்கத்துடன் வாழ வழி வகுக்கிறது. கவனத்துடன் தேர்ந்தெடுக்க வாய்ப்பு அளிக்கிறது. நீடித்த நோக்கங்களுக்காக உங்கள் வளங்களை விடுவித்து முடிந்தவரை எளிமையாக வாழ்வதற்கு வழி காட்டுகிறது.
மினிமலிஸ்டாக இருக்க இதுதான் சரியான வழி என்று எதுவுமில்லை. உங்கள் பயணம் உங்களுடையது. இருப்பினும் மினிமலிசத்தின் வகைகளாகச் சிலவற்றை நாம் பட்டியலிட்டுப் பார்க்க முடியும்.
1. அத்தியாவசியமானவர் (எசென்ஷியலிஸ்ட்)
‘குறைவான, ஆனால் சிறந்தது’ என்ற தத்துவத்தைக் கூறுகிற மினிமலிஸ்ட் இவர். ‘குறைவான விஷயங்களைச் செய்யுங்கள். ஆனால், அவற்றை நன்றாகச் செய்யுங்கள். குறைவான விஷயங்களைச் சொந்தமாக வைத் திருங்கள். ஆனால், நீடிக்கும் விஷயங்களைத் தேர்ந்தெடுங்கள்’ என்று இதை விளக்கலாம். `எசென்ஷியலிசம்' என்கிற மினிமலிசம் அள வில் அல்ல, தரத்தில் கவனம் செலுத்துகிறது.
2. அனுபவவாதி (எக்ஸ்பெரிமென்டலிஸ்ட்)
பொருள் முதல்வாதத்தைத் தழுவுவதற்கு மாற்று இது. அனுபவவாதம் என்பது அனுபவங்களைச் சேகரிப்பதாகும். அனுபவ வாதி நினைவுகளில் முதலீடு செய்வார். பொருள்களுக்குப் பதிலாக செயல்களில் ஆர்வம்காட்டுவார்.
3. போதுமானவர் (எனஃபிஸ்ட்)
போதியவாதம் என்கிற மினிமலிசம் போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்கிற நம் பழமொழியை நினைவு படுத்துகிறது. உணவு, உடை, வீட்டின் அளவு, சேமிப்பு இடம் என எந்த வகையிலும் போது மான அளவு மட்டுமே இவர் பயன்படுத்துவார். அப்படிப் பயன்படுத்துவதில் போதுமானவர் அமைதியைக் காண்கிறார். இந்த ‘போதும்’ அளவு, நபருக்கு நபர் வித்தியாசப்படும்.
4. சுற்றுச்சூழல் மினிமலிஸ்ட் (எக்கோ மினிமலிஸ்ட்)
சுற்றுச்சூழல் மினிமலிஸ்ட் பூமியின் பாதிப்பைக் குறைப்பதற்காக குறைந்த நுகர்வு வாழ்க்கையைத் தொடர்கிறார். தனிப்பட்ட குடும்பத்துக்கான நன்மைகள் மீது அவரது கவனம் குறைவாகவே இருக்கும்.
5. ஆன்மா மினிமலிஸ்ட் (சோல் மினிமலிஸ்ட்)
இந்த மினிமலிஸ்ட் ஆன்மாவின் அமைதியைப் போற்றுகிறார். மேலும் மன மற்றும் ஆன்மிக ஒழுங்கீனத்தைக்கூட குறைந்த பட்சமாக வைத்திருக்கும்படி பார்த்துக் கொள்கிறார். அமைதி, நினைவாற்றல், காது கொடுத்துக் கேட்பது போன்ற நடைமுறைகள் அனைத்தும் இதில் முக்கியம்.
உங்களது எளிமையான வாழ்க்கைமுறை வேறு யாரையும் போல இருக்க வேண்டிய தில்லை. இதில் முக்கியமானது என்ன வென்றால், மிக முக்கியமானவற்றுக்கு இடமளிக்க உங்களுக்குத் தேவையில்லாததை நீங்கள் வேண்டுமென்றே நீக்குகிறீர்கள். உங்கள் உறவுகள், உங்கள் நிதி மற்றும் பரந்த இந்த உலகில் உங்கள் தேர்வுகள் ஏற்படுத்தும் தாக்கத்தை நீங்கள் கவனத்தில் கொள்கிறீர்கள்.
நீங்கள் முக்கியமானவற்றில் முதலீடு செய் கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த வாழ்க்கையை வாழ்கிறீர்கள். நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை நீங்களே வடிவமைக்க முடியும்.
தேவையில்லாத விஷயங்களை அகற்றுவது என்பது அந்த வாழ்க்கைக்குள் செல்வதற்கு உதவும் ஒரு கருவியே. சரி... மேற்சொன்ன பட்டியலில் கண்ட ஐவகை மினிமலிஸ்ட்டு களில் யாரை நீங்கள் பின்பற்ற விரும்புகிறீர்கள்? யோசியுங்கள்!
- அடுத்த இதழில் முடியும்...