
முதலிலேயே சொல்லிவிடுகிறேன்... நான் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அல்ல. அதேபோல நான் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்துவதும் எனக்குப் பிடிக்காது.
குறைந்தபட்ச பொருள்களை மட்டுமே பயன்படுத்தி, சில பல விதிகளுக்கு உட் பட்டு வாழ்க்கைமுறையை வகுத்துக் கொண்ட ஒரு மினிமலிஸ்ட்டின் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதில் பரபரப்புக்குப் பஞ்சமே இருக்காதா அல்லது மெள்ள மெள்ள நகருமா அல்லது டென்ஷன் ஏதும் இன்றி எளிமையாகவும் இனிமையாகவும் செல்லுமா? மூன்றாண்டுக் காலமாக மினி மலிஸ்ட் வாழ்வில் தன்னைப் பிணைத்துக் கொண்ட ராதிகாவின் அனுபவங்கள் இதற்கு விடை சொல்லும். இனி அவரின் வார்த்தைகளில்...
‘‘இப்போது என்னுடைய ஒவ்வொரு நாளும் மெதுவாகவும் எளிமையாகவும்கழிகிறது. மூன்றாண்டுகளுக்கு முன் எனது பணி வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க் கைக்கும் எந்த வேறுபாடும் இல்லாமல் டென்ஷனாகவே இருந்தது. இப்போது எல்லாவற்றிலும் மாற்றம்... நல்ல மாற்றம்!
மினிமலிச நடைமுறைகள் காரணமாக நான் முக்கியமான எதையும் இழந்து விடவில்லை; அவசியமான எதையும் குறைப்பதில்லை. ஒவ்வொரு நாளையும் உயிர்ப்புடனேதான் உணர்கிறேன். ஒழுங்கீனம் மற்றும் பரபரப்பாக இருப்பதற்கு பதிலாக மிகவும் முக்கியமான விஷயங் களுக்கு ஒவ்வொரு நாளும் நேரத்தைச் செலவிடுவதை உறுதிப் படுத்த இது எனக்கு உதவுகிறது.
எனது தினசரி நடைமுறைகள் எனது இயற்கையான இயல்பையே பின்பற்றுகின்றன!
முதலிலேயே சொல்லிவிடுகிறேன்... நான் மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆபீசர் அல்ல. அதேபோல நான் செய்ய விரும்பாத விஷயங்களைச் செய்யும்படி கட்டாயப்படுத்துவதும் எனக்குப் பிடிக்காது. உதாரணமாக, குழந்தை எழுவதற்கு முன்பு வீட்டைச் சுத்தம் செய்வதற்காக நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்க மாட்டேன். ஆதலால், கவலை வேண்டாம்! அதற்கு பதிலாக, எனது இயல்புகேற்பவே என் நடை முறைகளை உருவாக்க விரும்புகிறேன்.

பகலில் என் ஆற்றல் நிலைகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை நான் கவனிக்கி றேன்... நான் எப்போது அதிக ஆற்றலுடன் உணர்கிறேன்? நான் எப்போது சோர்வாக உணர்கிறேன்? வெவ்வேறு பணிகள் என்னை எப்படி உணர வைக்கின்றன? எனக்கு அதிக ஆற்றலைத் தருவது எது? மேலும் எனது ஆற்றலைக் குறைப்பது எது? இவற்றையும் நான் அறிந்துகொள்கிறேன்.
எனது மினிமலிஸ்ட் நடைமுறைகளை உருவாக்க இந்தத் தகவல்களைப் பயன்படுத்து கிறேன். என் வாழ்க்கையை எளிதாக்குவ தற்கான வழிகளில் இதுவும் ஒன்று. மேலும், சுத்தம் செய்வது போன்ற சலிப்பான வேலைக ளில்கூட, என் நடைமுறைகளை ரசிக்க இது முக்கியமானது.
எதையும் சிறியதாகத் தொடங்குவதே என் வழக்கம்!
எனது மினிமலிச நடைமுறைகளும் சிறியதாகவே தொடங்குகின்றன. மேலும் அவற்றை முடிந்தவரை சிக்கலற்றதாக வைத் திருக்க முயற்சி செய்கிறேன். இதன் பொருள் என்னவென்றால், நான் என் வாழ்க்கையில் எதையாவது மாற்ற விரும்பினால், ஒரு நேரத்தில் கவனம் செலுத்தக்கூடிய ஓர் எளிய விஷயத்தை மட்டுமே தேர்வு செய்கிறேன்.
எனது ஒரு நாளுக்கு வசதியாகப் பொருந்திப் போகும்வரை அந்தப் புதிய விஷயத்தைப் பயிற்சி செய்கிறேன். சில நேரங்களில் அது உடனடியாக நடக்கும். சில நேரங்களில், அதற்கு அதிக பொறுமை தேவை. அது எப்படியிருந்தாலும், நான் ஏற்கெனவே உருவாக்கியதில் நம்பிக்கை ஏற்படும் வரை எனது வழக்கத்தில் கூடுதலாக எதையும் சேர்க்க மாட்டேன்.
என் நடைமுறைகளைப் பின்பற்றுவ தற்கான திறவுகோல் இதுதான். சிறியதாகத் தொடங்கும்போது, ஒரு வேலை அல்லது புதிய பொறுப்பை உள்ளடக்கிய நடை முறைகள் என் வாழ்க்கையின் சிரமமில்லாத பகுதியாக மாறும்.
என் நடைமுறைகள் தொடர்ந்து உருவாகி வருகின்றன!
என் வாழ்க்கையில் விஷயங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. உங்கள் வாழ்க்கையிலும் அப்படித்தான் இருக்கும். என் ஆற்றல் நிலைகள், என் குடும்ப பொறுப்புகள், எனது ஒரு நாள் அட்டவணை... இவற்றில் ஒரு நிலையான ஏற்றம் மற்றும் ஓட்டம் இருக்கும். இந்த அடிப்படையில்தான் என் நடைமுறைகளும் தொடர்ந்து உருவாகி வருகின்றன. அதற் கேற்ப நான் நெகிழ்வுத்தன்மையுடன் இருக் கிறேன். எனது வாழ்க்கையை எளிதாக் குவதற்காகவே இந்த நடைமுறைகள் இருக் கின்றன. அவை எனக்கு முதலாளியாக இருக்கவோ, எனது நேரத்தை நான் எப்படிச் செலவிட வேண்டும் என்று ஆணையிடவோ அல்ல. அதனால், எனக்குத் தேவைப்படும் போது மாற்றங்களைச் செய்ய நான் தயங்குவதில்லை.
எனது இப்போதைய வாழ்க்கை முறை!
நான், என் மகள் மற்றும் என் கணவருடன் 612 சதுர அடி அளவுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கிறேன்.
சில ஆண்டுகளாக நான் வீட்டிலிருந்து வேலை செய்கிறேன். வீட்டிலேயே வேலை என்றாலும் அதை ஓர் அட்டவணைக்குள் அடக்கியிருக்கிறேன். அதனால் மாலை அல்லது தூக்க நேரத்தில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத் தேவை ஏற்படுவ தில்லை. என் கணவர் அலுவலகம் சென்று முழுநேர வேலை செய்கிறார்.
என் நடைமுறைகள் உங்கள் வாழ்க்கைக்கு சரியாகப் பொருந்தாமல் போகலாம். உங்களுக்கும் உங்கள் இயல்பு வாழ்க்கைக்கும் எது மிகவும் முக்கியமானது என்பதை மனத்தில்கொண்டு, இந்தக் குறிப்புகளை ஒர் உத்வேகமாகப் பயன்படுத்துங்கள்.
மினிமலிஸ்ட் காலை
பள்ளிக்காலம் தொட்டே அதிகாலை என்பது எனக்கு பயமூட்டும் விஷயம்தான். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது.இருந்தாலும், சில நாள்களில் நான் இன்னும் கொஞ்சம் தூங்குவதற்கு ‘நோ’ சொல்ல மாட்டேன்.
ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு நாங்கள் எல்லா ஜன்னல்களையும் திறந்து புதிய காற்றை சுவாசிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறோம். இந்த உலகத்துக்கு ‘குட் மார்னிங்’ சொல்கிறோம்.
அடுத்து, காலைக் கடன்களை முடித்துவிட்டு, சமையலறைக்குள் சென்றவுடன் என் கணவரும் நானும் இணைந்து ஓர் எளிய காலை உணவைத் தயார் செய்யத் தொடங்கு வோம். கணவர் வேலைக்குச் செல்லும் வரை நாங்கள் ஒன்றாக சிறிது நேரம் செலவிடுகிறோம். அடுத்து எங்கள் நாளை நகர்த்தத் தொடங்கு கிறோம். என் கணவர் வேலைக்குத் தயாரா கிறார், நான் என் மகளை பள்ளிக்குத் தயார்படுத்துகிறேன். இப்படிதான் அனைத்து சாதாரண குடும்ப விஷயங்களும்.
செய்ய வேண்டியவை பட்டியலில் என்ன இருந்தாலும், நாங்கள் எப்போதும் ஒரு நாளின் முதல் மணிநேரத்தை மெதுவாக நகர்த்தி, மகிழ்ச்சியாக இருப்போம். அவசரம் மற்றும் மன அழுத்தத்துக்கு பதிலாக, புத்துணர்ச்சியுடன் நாளைத் தொடங்க இது உதவுகிறது.
மினிமலிஸ்ட் கிளினீங்
வீட்டையும் மற்ற பொருள்களையும் சுத்திகரிக்க அதிக நேரம் தேவைப்படுவதில்லை. சமையலறைச் சுத்திகரிப்பை அவ்வப்போதே செய்துவிடுவோம்.
அதன் பிறகு மினிமலிஸ்ட் வேலை நாள்
இதில் `ஹார்ட் வொர்க்' என்பதைவிட `ஸ்மார்ட் வொர்க்' என்பதைப் பழக்கப் படுத்தியிருப்பதால், எல்லாமே எளிதாகத் தான் இருக்கின்றன. அதனால் மன அழுத்தத்துக்கோ, பரபரப்புக்கோ ஆளாவதில்லை.
மினிமலிஸ்ட் மாலை | இரவு
நான் செய்யும் முதல் விஷயம், இரண்டாவது முறையாகக் குளிப்பதுதான். ஏனென்றால், மாலையில் குளிப்பது எனது பகல் மற்றும் இரவுக்கு இடையே ஓர் எல்லையை உருவாக்கு வதற்கான வழியாகும். இது நான் வீட்டில் இருந்து வேலை செய்வதால் அது மிகவும் முக்கியமானது.
குளித்த பிறகு, என் சருமத்தைப் பராமரிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறேன். அது என்னை உற்சாகமாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர வைக்கிறது. இறுதியாக, எனது டைரி யில் சில நிமிடங்களைச் செலவிடுகிறேன்.
மொத்தத்தில், என் மாலைப் பணிகளை முடிக்க 30 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும். ஆனால், அது மிகவும் சக்தி வாய்ந்தது. அதனால், நான் திருப்தியாகவும் நிம்மதியாகவும் படுக்கைக்குச் செல்கிறேன்... நன்றாகத் தூங்குகிறேன்!’’
ராதிகாவைப் போலவே உங்களுக்கான மினிமலிஸ்ட் நடைமுறைகளை உருவாக்குவது எப்படி?
மினிமலிஸ்ட் நடைமுறைகள் என்பவை சக்திவாய்ந்த எளிய வாழ்க்கைக் கருவிகள். அவை நம் வாழ்க்கையை மிகவும் முக்கியமான விஷயங்களுடன் சீரமைக்க உதவுகின்றன.
இதைப் போலவே நீங்கள் எளிமையான வாழ்க்கைக்கான உங்கள் சொந்த நடைமுறை களை உருவாக்க விரும்புகிறீர்களா? மீண்டும் ஒருமுறை முதல் அத்தியாயத்திலிருந்து படியுங்கள். முதலில் 7 நாள்களுக்கு ஒரு திட்டத்தை உருவாக்கி பின்பற்றத் தொடங் குங்கள். அது உங்களுக்கு ஒரு தெளிவைக் கண்டறியவும், முன்னுரிமைகளை வரை யறுக்கவும், சிறிய நடைமுறைகளைப் பின் பற்றவும் உதவும். வாழ்த்துகள்!
- நிறைவடைந்தது
இந்தத் தொடரின் இறுதி அத்தியாயம் இது. இனி விகடன் இணையதளத்தில் இதே தலைப்பில் `மினிமலிசம்' பகுதியைத் தொடர்ந்து வாசிக்கலாம்.