பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

ஷேர்லக்: தீபாவளி To தீபாவளி... அள்ளித் தந்த ஐ.பி.ஓ-கள்..!

ஷேர்லக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஷேர்லக்

ஷேர்லக்

வியாழன் காலை தொடங்கி ஒரே மழை. எனவே, வாட்ஸ்அப் காலில் நமக்குக் காட்சி தந்தார் ஷேர்லக். நாம் விறுவிறுவென கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

தீபாவளி முகூர்த்த டிரேடிங் வர்த்தகம் எப்படி இருந்தது?

“கடந்த அக்டோபர் 24-ம் தேதி மாலை 6.15 மணி முதல் 7.15 மணி வரை தீபாவளி முகூர்த்த டிரேடிங் நடைபெற்றது. ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் இந்த முகூர்த்த டிரேடிங்கில் முதலீட் டாளர்கள் சாஸ்திரத்துக்காக பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் முதலீட்டாளர்கள் இந்த முகூர்த்த டிரேடிங்கில் ஈடுபட்டனர். அன்று நிஃப்டியும் சென்செக்ஸும் 0.9% அதிகரித்தது பாசிட்டிவ்வான சிக்னலாகப் பார்க்கிறார்கள் சிலர். ‘‘இதெல்லாம் பக்கா சென்டிமென்ட். உலக நிலவரங்களைப் பார்த்துதான் முதலீடு செய்ய வேண்டும்’’ என்று சொல்பவர்களும் உண்டு. எனக்கும் இதில்தான் உடன்பாடு.’’

ஷேர்லக்: தீபாவளி To தீபாவளி...
அள்ளித் தந்த ஐ.பி.ஓ-கள்..!

நைகா நிறுவனத்தின் பங்கு விலை குறைந்துள்ளதே?

“இந்த நிறுவனப் பங்கில் நிறுவன மற்றும் உயர்மதிப்பு சொத்து கொண்ட முதலீட்டாளர் களின் ‘லாக்-இன் பீரியட்’ வருகிற நவம்பர் 10-ம் தேதி முடிவடைகிற நிலையில், இந்த நிறுவனப் பங்கின் விலை கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 2.5% வரை வீழ்ச்சியைச் சந்தித்து ரூ.1,115-க்கு வர்த்தகமானது. கடந்த 5 வர்த்தக தினத்தில் 3% வீழ்ச்சியையும், ஒரு மாதத்தில் 12.67% வீழ்ச்சியையும் இந்தப் பங்கு சந்தித்துள்ளது.

ஜெ.எம் ஃபைனான்ஷியல் தரகு நிறுவனம் இந்தப் பங்குகளை வாங்கச் சொல்லி பரிந்துரை செய்திருப்பதுடன், இலக்கு விலையை ரூ.1,780-ஆக நிர்ணயித்துள்ளது. அதே போல, ஐ.சி.ஐ.சி.ஐ செக்யூரிட்டீஸ் இந்தப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருக்கும்படி பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையை ரூ.1,250 ஆக நிர்ணயித்துள்ளது.”

எம்.சி.எக்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரித்தது ஏன்?

“இந்த நிறுவனம் நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டு முடிவை வெளியிட் டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 94% அதிகரித்து, ரூ.63.7 கோடியாக அதிகரித் துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.32.66 கோடியாக இருந்தது. சிறப்பான காலாண்டு முடிவை வெளியிட்ட காரணத்தால், இதன் பங்கு விலை கடந்த அக்டோபர் 25-ம் தேதி வர்த்தகத்தில் 6% வரை அதிகரித்து, ரூ.1,450-க்கு வர்த்தகமானது. ஐ.சி.ஐ.சி.ஐ செக் யூரிட்டீஸ் தரகு நிறுவனம் இந்த நிறுவனப் பங்கை வாங்கச் சொல்லி முதலீட்டாளர்களுக்குப் பரிந்துரை செய்ததுடன், இதன் இலக்கு விலை ரூ.1,700 ஆக நிர்ணயம் செய்துள்ளது.”

ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் நிறுவனத்தின் பங்கு விலை அதிகரிக்க என்ன காரணம்?

“இந்நிறுவனம் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளி யிட்டதுதான் காரணம். இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 69% அதிகரித்து, ரூ.1,168.70 கோடியாக அதிகரித்திருப் பதையும், இதர வருமானம் 36% அதிகரித்து, ரூ.1,061.30 கோடியாக உயர்ந்திருப்பதையும் குறிப்பிட்டிருந்தது.’’

கடந்த 2021-ம் ஆண்டின் தீபாவளிக்குப் பிறகு, வெளியான புதிய பங்கு வெளியீடுகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

“2021-ம் ஆண்டின் தீபாவாளிக்குப் பிறகு இந்திய பங்குச் சந்தையில் 44 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொண்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.95,000 கோடி நிதியை திரட்டியிருக்கின்றன. கடந்த சில மாதங்களாகவே உலக நாடுகளுக்கு மத்தியில் ஏற்பட்ட அரசியல் பதற்றம், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தியது, கட்டுக்குள் வராத பணவீக்க விகித உயர்வு போன்ற பல காரணிகள் இந்தியப் பங்குச் சந்தைகளை பாதித்தாலும்கூட 2021 தீபாவளிக்குப் பிறகு, வெளியான ஐ.பி.ஓ-களில் 31 ஐ.பி.ஓ-களின் பங்கு விலை வெளியிடப்பட்ட விலையைவிட அதிகரித்து வர்த்தகமாகியிருக்கிறது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அதானி வில்மர் பங்கு விலை வெளியிடப்பட்ட விலையில் இருந்து 190% வரை அதிகரித்துள்ளது. இதற்கு அடுத்தடுத்த இடங்களில் வெராண்டா லேர்னிங் சொல்யூசன்ஸ் (135%), டேட்டா பேட்டர்ன் (120)%, வீனஸ் பைப்ஸ் அண்டு டியூப்ஸ் (105%), கேம்பஸ் ஆக்டிவ்வேர் (100%), கோ ஃபேஷன் இந்தியா (98%), மெட்ரோ பிராண்ட்ஸ் (85%), லாடென்ட் வியூ அனலெடிக்ஸ் (80%), ஹரிஓம் பைப் இண்டஸ்ட்ரீஸ் (78%), வேதாந்த் ஃபேஷன்ஸ் (62%) மற்றும் சிகாச்சி இண்டஸ்ட்ரீஸ் (58%) ஆகிய நிறுவனங்கள் அதிக லாபத்தைப் பதிவு செய்த ஐ.பி.ஓ-களில் முதல் 10 இடங் களில் இருக்கின்றன.

அதே நேரத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளியான ஒன் 97 கம்யூனிகேஷன் (Paytm) நிறுவனம் 70% சரிவையும், எல்.ஐ.சி 35% சரிவையும் சந்தித் திருக்கிறது. ஃபினோ பேமென்ட் பேங்க் (-65%), பி.பி. ஃபைன்டெக் (-55%), ஏ.ஜி.எஸ் டிரான்ஸேக்ட் டெக்னாலெஜிஸ் (-54%), ராம் புராபர்டீஸ் (-35%) ரேட்கெய்ன் டிராவல் டெக்னாலஜீஸ் (-35%), மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் (-25)%, உமா எக்ஸ் போர்ட்ஸ் (-25%), எ.ஜே.எஸ் என்டர் பிரைசஸ் (-20%) மற்றும் ஸ்டால் ஹெல்த் அலைடு இன்ஷூரன்ஸ் (-20) ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பை சந்தித்துள்ளன.’’

ஓவியம்: அரஸ்
ஓவியம்: அரஸ்

சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை எப்போது தொடும்?

“60,000 புள்ளிகளைத் தாண்டி பெரிய அளவில் மேலே செல்லாமல் தவிக்கிறது சென்செக்ஸ். 2027-ம் ஆண்டில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளி களைத் தொடும் என ஜெஃப்ரீஸ் பங்குத் தரகு நிறுவனம் சொன்னது. ஆனால், வரும் 2025-ம் ஆண்டிலேயே சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகளை அடைந்துவிடும் என இப்போது பேச ஆரம்பித் திருக்கிறார்கள். அதே போல, கடந்த 2021-ம் ஆண்டில் சென்செக்ஸ் அடைந்த 62245 என்கிற வரலாறு காணாத உட்சபட்ச நிலையை நடப்பு ஆண்டில் சென்செக்ஸ் அடையும் என முதலீட்டாளர்கள் விவாதிக்க ஆரம்பித் திருக்கிறார்கள். அதற்கு சென்செக்ஸ் தற்போதைய நிலையில் இருந்து 2,700 புள்ளிகள் அதிகரிக்க வேண்டும்.

அக்டோபர் 2002-ல் சென்செக்ஸ் புள்ளிகள் 3,000-க்கும் குறைவான புள்ளிகளில் வர்த்தகமானது. ஆனால், 10 ஆண்டுகள் கழித்து அக்டோபர் 2012-ல் சென்செக்ஸ் 19000 புள்ளிகளைக் கடந்தது. நான்கு ஆண்டுகளுக்குமுன், அக்டோபர் 2018-ல் சென்செக்ஸ் 34000 புள்ளிகளில் வர்த்தக மானது. தற்போது 60000 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இதன்படி பார்த்தால், சென்செக்ஸ் 2025-க்குள் ஒரு லட்சம் புள்ளிகளைத் தொட வாய்ப்புண்டு என்கிறார்கள். சென்செக்ஸ் ஒரு லட்சம் என்ன, அதைக்கூடத் தாண்டி மேலே செல்லும். எனவே, நீண்டகால நோக்கில் பங்குச் சந்தையில் நாம் முதலீடு செய்வது அவசியம்.’’

டிப்ஸ் ஃபிலிம் நிறுவனப் பங்கு விலை அதிகரித்திருப்பது குறித்து..?

“பட வெளியீட்டு நிறுவனமான இதன் பங்கு விலை கடந்த அக்டோபர் 25-ம் தேதி 10% அப்பர் சர்க்யூட் விலையில் ரூ.630-க்கு வர்த்தகமானது. கடந்த எட்டு வர்த்தக தினங்களில் மட்டும் 108% வரை இதன் பங்கு விலை அதிகரித்துள்ளது. அதாவது, அக்டோபர் 13-ம் தேதி இதன் பங்கு ரூ.303.20-க்கு வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் வெற்றி விகிதம் 85 சத விகிதத்துக்கும் அதிகமாக உள்ளது. இந்நிறுவனம் தொடர்ந்து வருமானம் ஈட்டுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மீது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது. சினிமா பட நிறுவனம் என்பதால், ஜாக்கிரதையாக அணுக வேண்டியது அவசியம்.’’

டி.சி.எஸ் சிஸ்டம்ஸ் பங்கு ஐ.பி.ஓ-வுக்கு முன் கள்ளச் சந்தையில் (Grey market) விலை அதிகரித்து வர்த்தகமாவது சரியா?

“எலெக்ட்ரானிக் சப்-சிஸ்டம்ஸ் மற்றும் கேபிள் ஹார்னஸ் தயாரிப்பு நிறுவனமான டி.சி.எஸ் சிஸ்டம்ஸ் வருகிற அக்டோபர் 31-ம் தேதி முதல் நவம்பர் 2-ம் தேதி வரை ஐ.பி.ஓ வெளியிடுகிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.500 கோடி நிதியைத் திரட்ட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதன் ஆர்டர் புத்தக மதிப்பு ரூ.2,369 கோடியாக இருந்தது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட் செல வினத்தை ரூ.4.78 லட்சம் கோடி யிலிருந்து, ரூ.5.25 லட்சம் கோடி யாக மத்திய அரசு உயர்த்தி யுள்ளது. பாதுகாப்புத் துறையில் இந்திய அரசாங்கம் அதிக அளவில் கவனம் செலுத்தி வருவதால், இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான தேவை அதிக அளவில் இருக்கிறது. இதன் காரணமாக இந்த நிறுவனம் வெளியிடும் ஐ.பி.ஓ-வுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் எனப் பேச்சு. அதனால்தான் கிரே மார்க்கெட்டில் இதன் பங்குகள் 20% பிரீமியம் விலை யில் வர்த்தகமாகின்றன.’’

குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு குறித்து...

“குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் ஐ.பி.ஓ வெளியீடு வருகிற நவம்பர் 3-ம் தேதி ஆரம்பமாகி 7-ம் தேதி முடி கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டில் ரூ.500 கோடி மதிப்புள்ள புதிய பங்குகளை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. ஓ.எஃப்.எஸ் முறையில் 50.76 மில்லியன் பங்குகளையும் வெளியிடுகிறது. இதில் ஆனத் இன்வெஸ்ட் மென்ட் நிறுவனத்தின் 50.66 மில்லியன் பங்குகளும், சுனில் சச்தேவாவின் ஒரு லட்சம் பங்குகளும் அடங்கும்” என்றவர், ‘‘ஐரோப்பிய மத்திய வங்கி 0.75% வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. வருகிற 3-ம் தேதி அன்று ஆர்.பி.ஐ-யை திடீர் கூட்டத்தைக் கூட்டி யுள்ளது. இது மீண்டுமொரு வட்டி விகித உயர்வுக்கா? சந்தை கொஞ்சம் ஏற்ற, இறக்கமாகத்தான் இருக்கும், ஜாக்கிரதை’’ என்று சொல்லி விட்டு, வாட்ஸ்அப் காலை கட் செய்தார் ஷேர்லக்.

ஷேர்லக்: தீபாவளி To தீபாவளி...
அள்ளித் தந்த ஐ.பி.ஓ-கள்..!

சரியான மியூச்சுவல் ஃபண்ட்... தேர்வு செய்வது எப்படி?

நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து நடத்தும் ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?’ என்ற நிகழ்ச்சி கோவையில் நவம்பர் 5-ம், சனிக்கிழமை (மாலை 6.30 pm – 8.30 pm) நடைபெறுகிறது. இதில் ஆம்ஃபி பயிற்சியாளர் அழகப்பன் ராமநாதன், மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் ஏரியா ஹெட் (ரீடெய்ல் சேல்ஸ்) சுரேஷ் பாலாஜி ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
அனுமதி இலவசம். பதிவு செய்ய https://bit.ly/3d2WG6G