நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பங்குச் சந்தையில் எதிர்பார்த்திருந்த நகர்வின் வரம்பானது கடந்த வாரம் திங்கள்கிழமை வர்த்தகத்தில் முற்றிலு மாக நிராகரிக்கப்பட்டதுடன், கடுமையான வீழ்ச்சியையும் சந்தித்தது.

டாக்டர் சி.கே.நாராயண்
நிர்வாக இயக்குநர், 
Growth Avenues
டாக்டர் சி.கே.நாராயண் நிர்வாக இயக்குநர், Growth Avenues

அது வரலாற்று வீழ்ச்சியாகப் பதிவானதுடன், தொடர்ந்து வீழ்ச்சி குறித்த அச்சத்தையும் அதிகரித்தது. முந்தைய வாரத்திலிருந்து கடந்த வாரத்தின் தொடக்கம் வரையில் மட்டுமே நிஃப்டி 1000 புள்ளிகள் சரிந்தது. இத்தகைய வரம்பிலான சரிவை நிஃப்டி எட்ட மூன்று மாதங்கள் வரை எடுத்துக்கொள்ளும். ஆனால், தற்போது ஒரே வாரத்தில் நிகழ்ந்துள்ளது.

பேங்க் நிஃப்டி தொடர்ந்து பலவீனமாக இருந்து வருகிறது. இதனால் நிஃப்டியின் நஷ்டத்தை அதிகமாக்கியது. இந்த சரிவில் ஸ்மால்கேப் இண்டெக்ஸ் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்தது. அதாவது, அதன் சமீபத்திய உச்சத்திலிருந்து 18% சரிந்தது. ஆனாலும், சந்தை மீண்டும் வரத் தொடங்கி யதுமே இந்தப் பிரிவிலும் மீட்சி துரிதமாக நடந்ததைப் பார்க்க முடிந்தது. இதிலிருந்து சந்தையின் இறக்கத்தில் முதலீடு செய்வதற்கான பணத்துடன் சிறு முதலீட் டாளர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

எஃப்.ஐ.ஐ தொடர்ந்து விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால், கடந்த சில வர்த்தக தினங்களில் அவர்களுடைய விற்பனை வேகம் குறைந்திருக்கிறது. இது முற்றிலுமாக குறையும் போது சந்தையில் ஏற்றத்தின் நகர்வை நம்மால் தொடர்ந்து பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

அதேபோல், உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகள் கணிசமாகத் தொடர்வதால், சந்தை தன்னை நிலைநிறுத்திக்கொண்டு மேல்நோக்கி நகர முயற்சி செய்யும்போது அதற்கு உறுதுணையாக இருக்கும்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

துறை சார்ந்த குறியீடுகளைப் பார்க்கும்போது, பெரும்பாலானவை 25 வார நகர்வு சராசரிக்கு அருகில் முறையான சப்போர்ட் நிலைகளுக்குள் இறங்கியுள்ளதைப் பார்க்க முடிந்தது. ஆர்.எஸ்.ஐ சார்ட்டுகளில் 10 - 12 எண்கள் வரையில் நகர்வுகளைப் பார்த்ததும், பல காலமாகப் பார்க்காத நகர்வு என்பதுபோல் சென்டிமென்ட் உணர்வும் சற்று உச்சத்தை எட்டியது. எனவே, இறுதியாக அதிகமாக விற்றுவிட்ட உணர்வு புரிய ஆரம்பித்தது.

தற்போதைய நகர்வில் பெரிய முதல் ரெசிஸ்டன்ஸ் 17400 என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையைத் தாண்டி, நிஃப்டி தன்னுடைய நகர்வை நிலை நிறுத்திக்கொண்டால், நாம் மேலதிக ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

இறக்கங்கள், தற்போது 16700 என்ற நிலைகளில் உச்ச பாட்டம்களை உருவாக்கலாம். அத்தகைய இறக்க நிலைகளில் ஏதேனும் திருப்பங்கள் ஏற்பட்டால், அது குறைந்த ரிஸ்க்குடனான முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

ஜே.பி கெமிக்கல்ஸ் (JBCHEPHARM)

தற்போதைய விலை ரூ.1,700.50

வாங்கலாம்

பார்மா பங்குகள் சில காலமாகவே இறக்கத்தின் போக்கில் உள்ளன. துறை சார் குறியீட்டின் சார்ட் நகர்வுகளைப் பார்க்கும்போது, அவை சப்போர்ட் நிலையை எட்டிவிட்டதையும் பார்க்க முடிகிறது.

இந்த நிறுவனப் பங்கு கடந்த சில வாரங்களாகப் பக்கவாட்டில் நகர்ந்து வருகிறது. இதிலிருந்து இப்பங்கில் விற்பனை குறைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது. கடந்த வாரம் இதில் சில ஏற்றத்தின் நகர்வுக்கான முயற்சி காணப் பட்டது.

எனவே, வரும் நாள்களில் இப்பங்கு ரூ.1,900 வரை செல்ல வாய்ப்புள்ளது. ரூ.1,650 ஸ்டாப்லாஸுடன் இப்பங்கில் முதலீடு செய்யலாம்.

ராடிகோ கெய்தான் (RADICO)

தற்போதைய விலை ரூ.1,174.90

வாங்கலாம்

மதுபான நிறுவனப் பங்குகளில் ராடிகோ சிறப்பான ஃபண்டமென்டல் அம்சங்களுடன் உள்ளது. இதோடு சேர்ந்து அருமையான டெக்னிக்கல் அம்சங்களும் உள்ளன. தற்போதைய நிலையிலிருந்து தொடர்ந்து ஏற்றம் அடைவதற்கான புதிய உற்சாகம் இதில் தென்படுகிறது.

எனவே, தற்போதைய விலையில் இப்பங்கை வாங்கலாம். குறுகிய காலத்தில் ரூ.1,225 வரை உயர வாய்ப்புள்ளது. ஸ்டாப்லாஸ் ரூ.1,140-க்குக் கீழ் வைத்துக்கொள்ளவும்.

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா (TIINDIA)

தற்போதைய விலை ரூ.1,709.90

வாங்கலாம்

பங்குச் சந்தையில் நீண்டகால அடிப்படையில் சிறப்பாகச் செயல்படும் பங்குகளில் ஒன்றாக டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் உள்ளது. இப்பங்கில் 2020 மார்ச்ச்சில் காணப்பட்ட இறக்கத் திலிருந்து நல்ல ஏற்றத்தின் போக்கு இருந்துவருகிறது. இந்தப் போக்கு தடைபடுவதற்கான எந்த அறிகுறியும் இப்போதைக்கு இல்லை. நடப்பு மாதத்திலும் இப்பங்கில் ஏற்றத்துக்கான புதிய உந்துதல் காணப்பட்டது. இண்டிகேட்டர்களும் பங்கின் விலை ஏற்றத்துக்குச் சாதக மாகவே உள்ளன. இதனால் மொமன்டத்திலும் எந்த சிதறலும் இல்லை.

எனவே, வரும் காலத்தில் பங்கு விலை ரூ.1,875 வரை உயர வாய்ப்புள்ளது. ரூ.1,675-க்குக் கீழ் ஸ்டாப்லாஸ் வைத்துக் கொள்ளவும்.

தமிழில்: ஜெ.சரவணன்