தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

பங்குச் சந்தை: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும்?

ஆஷிஷ் சோமையா
பிரீமியம் ஸ்டோரி
News
ஆஷிஷ் சோமையா

கருத்தரங்கம்

முதலீட்டு உலகின் ஜாம்பவான்கள் ஆண்டுக்கொருமுறை கூடும் இடமாக மாறியிருக்கிறது பி.எம்.எஸ் பஜார் மும்பையில் நடத்தும் கருத்தரங்கம். ‘பி.எம்.எஸ் & ஏ.ஐ.எஃப் 5.0’ என்கிற தலைப்பில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பி.எம்.எஸ் மற்றும் ஏ.ஐ.எஃப் துறையைச் சேர்ந்த சந்தை வல்லுநர்கள் பலர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்தக் கருத்தரங்கில் பேசிய முக்கியமான சிலரின் பேச்சு இனி...

எந்த முதலீடு சிறந்தது - ஆக்டிவ் அல்லது பேசிவ் முதலீடா என்னும் தலைப்பில் வொய்ட்வோக் கேப்பிடல் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆஷிஷ் சோமையா பேசினார்.

ஆஷிஷ் சோமையா
ஆஷிஷ் சோமையா

‘‘ஆக்டிவ் ஃபண்டுகளில் முதலீடு செய்வதால் பெரிய பயன் இல்லை. ஆக்டிவ் ஃபண்டுகளை விட பேசிவ் ஃபண்டுகளில் அதிக வருமானம் கிடைக்கிறது. அமெரிக்காவில் ஆக்டிவ் ஃபண்டுகள் மூலம் அதிக வருமானம் கிடைக்க வில்லை. அமெரிக்காவில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

உதாரணமாக, 1996-ம் ஆண்டு 7,322 நிறு வனங்கள் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருந்தன. ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு தகவல்படி 3,643 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதே சமயம், இந்தப் பங்குகளின் சந்தை மதிப்பு மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. 96-ம் ஆண்டு மொத்த சந்தை மதிப்பு 13,019 பில்லியன் டாலர் என்னும் நிலையில் இருந்து 37,741 பில்லியன் டாலர் என்னும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

ஆனால், இந்தியாவின் நிலைமை வேறு. இந்தியாவில் ஒவ்வொரு பிரிவிலும் பல பங்குகள் உள்ளன. லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என பெரிய சந்தை வாய்ப்பு இந்தியாவில் இருக்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானம் உயரத் தொடங்கி இருக்கிறது. இந்த வருமானம் உயரும்போது புதிய புதிய துறைகள் உருவாகும்; புதிய புதிய நிறுவனங்கள் பட்டியலிடும் என்பதால், இந்தியாவில் அதிக வாய்ப்பிருக்கிறது.

ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு துறையை அதிகமாக நம்பி இருக்கிறது. உதாரணமாக, ரஷ்யா பங்குச் சந்தை குறியீட்டில் எனர்ஜியின் பங்கு 49%, கொரியாவில் டெக்னாலஜி நிறுவனங்களின் பங்கு மட்டுமே 40%, சீனாவிலும் நுகர்வோர் சார்ந்த நிறுவனங்களே 30% பங்கு வகிக்கின்றன. ஆனால், இந்தியாவில் எந்தத் துறைக்கும் அதிக வெயிடேஜ் கிடையாது. அதாவது, அனைத்துத் துறைகளின் பங்களிப்பும் இருக்கிறது. அதிகபட்சமாக இருக்கும் நிதிச் சேவைகள் பிரிவே 20% மட்டுமே. எந்தத் துறையை நம்பியும் இந்தியா இல்லை; பல துறைகளில் பல பிரிவுகளில் நிறுவனங்கள் உள்ளன. தனிநபர் வருமானம் வளரும்போது புதிய துறைகளும் வளரும் என்பதால், இந்தியாவில் ஆக்டிவ் ஃபண்டுகளுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் ஆக்டிவ் ஃபண்டுகளில் அதிக லாபம் சம்பாதிக்க முடியும். இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன’’ என்றார்.

அடுத்து சுந்தரம் ஆல்டர் நேட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விகாஷ் சச்தேவா பேசினார். ‘‘பத்தாண்டு களுக்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சி யில், ‘விரைவில் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முக்கியமான முதலீட்டுத் திட்டமாக மாறும்’ எனப் பேசினேன். அது இப்போது நடந்திருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் பி.எம்.எஸ் மற்றும் ஏ.ஐ.எஃப் திட்டங்கள் முக்கிய முதலீட்டுத் திட்டங்களாக மாறும் வாய்ப்பு இருக்கிறது. தற்போது இந்தியா வில் நூற்றுக்கும் மேற்பட்ட யுனிகார்ன் நிறுவனங்கள் இரு நூறுக்கும் மேற்பட்ட ஃபேமலி அலுவலகங்கள் உருவாகி உள்ளன. மேலும், புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருக்கின்றன. இந்த நிலையில், செல்வம் உயர்ந்து வருகிறது. அதனால் அவர்களுக் கேற்ற பிரத்யேக முதலீட்டுத் திட்டங்கள் தேவைப்படும். அதனால் பி.எம்.எஸ் மற்றும் ஏ.ஐ.எஃப் முதலீடு வருங்காலத்தில் முக்கியமான முதலீட்டுத் திட்டங்களாக மாறும். 2007-ம் ஆண்டு நிதிச் சேவைகள் பிரிவில் சீனா எப்படி இருந்ததோ, அந்தச் சூழலில் தற்போது இந்தியா இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டு களில் இந்தப் பிரிவு மூன்று மடங்காக உயரும்’’ என்றார்.

பங்குச் சந்தை: அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா எப்படி இருக்கும்?

இந்தக் கருத்தரங்கில் மோதி லால் ஆஸ்வால் நிறுவனத்தின் ராம்தேவ் அகர்வால் முக்கிய மான விஷயத்தைப் பேசினார். ‘‘அதிக வளர்ச்சி என்பது நீண்ட காலத்துக்கும் சாத்தியம் இல்லை என்பது என் முதலீட்டு அனுபவத்தில் இருந்து கற்றுக் கொண்டேன். ஒரு பங்கு 35% வளர்ச்சிக்குமேல் மூன்று ஆண்டு கள் இருந்தால், அதற்கு மேலும் அதே அளவுக்கான வளர்ச்சியை நம்மால் எதிர் பார்க்க முடியாது. பல சூழல்களால் வளர்ச்சி தடைபடும்’’ என்றார்.

கார்னெலின் கேப்பிடல் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் விகாஷ் கெம்பானி, ‘‘கடந்த 40 ஆண்டுகளில் நடப்புக் கணக்கு உபரி என்னும் நிலைமையை ஜப்பான், கொரியா, தாய்வான் மற்றும் சீனா ஆகிய நாடுகள் மட்டுமே எட்டியிருக்கின்றன. இந்தியா உற்பத்தித் துறையில் வேகமெடுத்து வருகிறது. அதனால் அடுத்து ஐந்தாண்டு களில் நடப்புக் கணக்கு உபரி என்னும் நிலைமைக்கு மாறும். மேலும், 2025-ம் ஆண்டு இந்தியா வின் ஜி.டி.பி மதிப்பு 4.5 பில்லியன் டாலர் நிலைமையை எட்டும்’’ என்றார்.

அடுத்ததாக, நவீன் இந்தியா வின் வழக்கமில்லாத உயர்வு (Unusual Rice of modern india) என்னும் தலைப்பில் பேசினார் மார்செல்ஸ் நிறுவனத்தின் சௌரப் முகர்ஜி. ‘‘அமெரிக் காவில் 1870-ம் ஆண்டு முதல் 1940-ம் ஆண்டு வரை கட்டுமானத் துறையில் பெரிய மாற்றம் ஏற்றம் இருந்தது. இந்த சமயத்தில் தான் சாலைகள், ரயில் இணைப்பு, கார் உள்ளிட்ட முன்னெடுப்புகள் நடந்தன. அதுபோன்ற காலநிலையில் இந்தியா இருக்கிறது. இதுவரை எகானமிஸ்ட் இதழ் இந்தியா குறித்து சாதமாக எழுதியதில்லை. தற்போது எழுதியிருக்கிறது.

செளரப் முகர்ஜிக்கு நினைவுப் பரிசு தரும்
 பி.எம்.எஸ் பஜார் நிறுவனத்தின் இயக்குநர் பல்லவராஜன்
செளரப் முகர்ஜிக்கு நினைவுப் பரிசு தரும் பி.எம்.எஸ் பஜார் நிறுவனத்தின் இயக்குநர் பல்லவராஜன்

கடந்த பத்தாண்டுகளாக பல சீர்திருத்தங்கள் நடை பெற்றன. வங்கி, கட்டுமானம் வரி, அனைவருக்கும் வங்கிக் கணக்கு உள்ளிட்ட பல மாற்றங்கள் நடந்தன. இதனால் இந்தியாவில் தொழில்கள் என்பது பெரு நிறுவனங்கள் வசம் மாறும். காலத்துக்கேற்ப மாறாத நிறுவனங்களின் நிலை கடினமாக இருக்கும். அப்போது பட்டியலிட்ட நிறுவனங் களின் வருமானம் உயரும். இது பங்குகளில் எதிரொலிக்கும். தற்போது பலமாக இருக்கும் நிறுவனங்கள் மேலும் பலமாகும். முறைப்படுத்தப்பட்ட துறையில் பெரிய மாற்றங்கள் நடக்கும். இதனால் அந்நிய முதலீடு மேலும் அதிகரிக்கும். வரும் காலத்தில் பெரிய மாற்றங்கள் நடக்கும்’’ என்றார் சௌரப் முகர்ஜி.

அபாகஸ் நிறுவனத்தின் சுனில் சிங்கானியா பேசும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக நாம் எடுத்த நடவடிக்கை காரண மாக அடுத்த 20 ஆண்டுகள் பெரிய வளர்ச்சி சாத்தியம். அதனால் இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவது சாத்தியம். கணக்குப்படி குறைவாக இருந்தாலும், கணக்கில் வராத பொருளாதாரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்தியா இப்போதே 4 ட்ரில்லியன் டாலரைத் தாண்டியிருக்கும். 2027 அல்லது 2028-ம் நிதி ஆண்டில் 5 ட்ரில்லியன் டாலர் என்னும் இலக்கை நாம் எட்டும். எனவே, 5 ட்ரில்லியன் குறித்து பேசுவதை விட்டுவிட்டு, 10 ட்ரில்லியன் டாலர் எனும் இலக்கைப் பற்றிப் பேசுவோம்’’ என்றார்.

முதலீடு, இந்தியப் பொருளாதாரம் அடுத்து எப்படி இருக்கும் என்பதை எடுத்துச் சொல்வதாக இருந்தது இந்தக் கருத்தரங்கம்!