
விழிப்புணர்வு
நாணயம் விகடன் மற்றும் மிரே அஸெட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து ‘சரியான மியூச்சுவல் ஃபண்ட்: தேர்வு செய்வது எப்படி?’ என்ற தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பற்றிய விழிப்புணர்வுக் கூட்டம் ஒன்றை அண்மையில் மதுரையில் நடத்தின.
இந்த நிகழ்ச்சியில் மிரே அஸெட் நிறுவனத் தின் உதவி துணைத் தலைவர் அருண்குமார் மற்றும் நிதி மற்றும் வருமான வரி ஆலோசகர் அழகப்பன் ராமநாதன் ஆகியோர் பேச்சாள ராகக் கலந்துகொண்டனர்.
முதலில் அருண்குமார், “நீங்கள் முதலீட்டைத் தொடங்கும்முன் மருத்துவக் காப்பீடு மற்றும் டேர்ம் இன்ஷூரன்ஸ் காப்பீடு எடுப்பது அவசியம். மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்முன் உங்களது எதிர்கால வாழ்க்கை யின் எந்த இலக்கை நிறைவேற்ற முதலீடு செய்யப்போகிறீர்கள் என்பதை முதலில் முடிவு செய்யுங்கள். மியூச்சுவல் ஃபண்டில் ஒரு நாள் முதலீடு தொடங்கி, பல பத்தாண்டு களுக்கான முதலீட்டுத் திட்டங்களும் உள்ளன. நம்முடைய இலக்கை நிறைவேற்ற எந்த ஃபண்ட் திட்டம் சரியாக இருக்குமோ, அதைத் தேர்வு செய்து, அதில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

அடுத்து பேசிய அழகப்பன் ராமநாதன், சரியான ஃபண்ட் திட்டத்தைத் தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங் கள் குறித்து விளக்கமாக எடுத்துச் சொன்னார். முதலீட்டில் வெளிப்படைத்தன்மை, வரி விதிப்பு, நினைத்த நேரத்தில் பணமாக்குவது எனப் பல விஷயங்களில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் எப்படி சாதகமான விஷயங்களைக் கொண்டுள்ளன என்பதை விளக்கமாக எடுத்துச் சொன்னார்.
அடுத்து, முதலீட்டாளர்கள் முதலீடு தொடர்பாகத் தங்களுக்குள்ள சந்தேகங்களைக் கேள்விகளாக கேட்க, அவர்களுக்குத் திருப்தி கரமான பதில் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பலரும் கணவன் - மனைவி என குடும்பமாக வந்திருந்தனர். 25 வயதுக்கும் குறைவான இளைஞர்களும் வந்திருந்தது சிறப்பான விஷயமாக இருந்தது!