ஐன்ஸ்டீன் சொன்ன உலகின் எட்டாவது அதிசயம் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதுதான் கூட்டு வட்டி. கூட்டு வட்டியின் மூலம் நாம் சீக்கிரம் பணக்காரர் ஆக முடியும். யாருக்குதான் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்காது. அதற்காகத்தானே ஓடி ஓடி உழைக்கிறோம். ஆனால், ஒரு விஷயத்தை எத்தனை முறை சொன்னாலும் நாம் மறந்துவிடுகிறோம்.
அது வேறு ஒன்றுமில்லை. நாம் வேலை செய்து சம்பாதித்தால் மட்டுமே பணக்காரர்கள் ஆகிவிட முடியாது. மாறாக நம்மிடம் இருக்கும் பணத்தை நமக்காக வேலை செய்ய வைக்க வேண்டும். நமக்கு ஓய்வு நேரம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால், பணத்துக்கு ஓய்வே இல்லை. அது எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

பணவீக்கம் காரணமாக எப்போது வேண்டுமானாலும் பணத்தின் மதிப்பு உயரவோ, சரியவோ செய்யலாம். அதற்குத்தான் பணவீக்கத்தைத் தாண்டிய மதிப்பை நம்முடைய பணம் கொண்டிருக்க வேண்டும் என்று நிதி நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தைத் தரக்கூடிய முதலீடுகளில் நம்முடைய பணத்தை முதலீடு செய்து வர வேண்டும். பங்குச் சந்தை அதற்குச் சரியான இடம்.
பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வது என்பது எல்லோருக்கும் சாத்தியமானது இல்லை. அதற்கு அனுபவமும், பங்குச் சந்தை குறித்த தெளிவும், ரிஸ்க் எடுக்கும் திறனும், முக்கியமாக நேரமும் அவசியம். ஆனால், இவை எல்லோருக்குமே வாய்ப்பதில்லை. அவர்களும் பங்குச் சந்தையின் பலனை அடைய உருவாக்கப்பட்டவைதான் மியூச்சுவல் ஃபண்டுகள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலமும் பணவீக்கத்தைத் தாண்டிய வருமானத்தை நீண்டகால அடிப்படையில் நம்மால் ஈட்ட முடியும். மியூச்சுவல் ஃபண்ட் என்றால் என்ன, அதன்மூலம் எப்படி நம்முடைய செல்வத்தைப் பெருக்கிக்கொள்வது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள தொடர்ச்சியாக நாணயம் விகடன் விழிப்புணர்வு கூட்டங்களை முதலீட்டாளர்களுக்காக நடத்தி வருகிறது.
அந்த வரிசையில் வரும் ஜனவரி மாதம் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து `மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!' என்ற தலைப்பில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறது.
ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை நாமக்கல்லில் ஆண்டவர் நகர் கிழக்கு, திருச்சி ரோட்டில் உள்ள நலா ஹோட்டலில் (மாலை 6 pm – 8.30 pm) நடைபெறுகிறது. ஈரோட்டில் ஜனவரி 7 சனிக்கிழமை (மாலை 6 pm – 8.30 pm) பழையபாளையம் பெருந்துறை ரோட்டில் உள்ள ரோட்டரி சிடி ஹாலில் நடைபெறுகிறது.

சிறப்பு பேச்சாளராக நிதி நிபுணர் வ.நாகப்பன் பங்கேற்று விரிவாக மியூச்சுவல் ஃபண்ட் பற்றியும், முதலீடுகள் பற்றியும் பேசுகிறார். மேலும், ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் சார்பாக எஸ்.குருராஜ் மற்றும் க.சுவாமிநாதன் ஆகியோரும் பேசுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முற்றிலும் அனுமதி இலவசம். நாமக்கல், ஈரோடு வாசிகள் கலந்துகொண்டு பயன் அடையலாம். பதிவு செய்ய https://bit.ly/NV-Adityabirla