தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மைனர் மியூச்சுவல் ஃபண்ட் விதிகளைத் தளர்த்திய செபி!

மைனர் மியூச்சுவல் ஃபண்ட்
பிரீமியம் ஸ்டோரி
News
மைனர் மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்டில் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வது வருகிற ஜூன் 15 முதல் வருகிறது...

மியூச்சுவல் ஃபண்டில் 18 வயதுக்குகீழ் உள்ள மைனர்கள் முதலீடு செய்ய ஊக்குவிக்கத் தேவையான விதியை செபி அமைப்பானது சமீபத்தில் மாற்றி இருக்கிறது.

தற்போதைய நடைமுறையின்படி, மைனர் களின் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் மைனர் பெயரில் உள்ள வங்கிக் கணக்கிலிருந்து மட்டும்தான் முதலீடு செய்யமுடியும். இந்த விதிமுறையானது மாற்றப்பட்டு, வருகிற ஜூன் 15 முதல் புதிய விதிமுறை வருகிறது.

புதிய விதிமுறையின்படி, மைனர் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் மைனரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் வங்கிக் கணக்கில் இருந்தும் முதலீடு செய்யலாம் என விதியானது மாற்றப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மாற்றம் குறித்து மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் சுரேஷ் பார்த்தசாரதியிடம் கேட்டோம்.

மைனர் மியூச்சுவல் ஃபண்ட்
விதிகளைத் தளர்த்திய செபி!

“செபி தற்போது அறிவித்துள்ள மாற்றம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்தது தான். இடையில் இதை மாற்றிவிட்டது. இதனால், குழந்தைகளின் பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள் யாரும் மைனர்களின் மியூச்சுவல் ஃபண்ட் கணக்கில் முதலீடு செய்ய முடிய வில்லை. தற்போது பழைய விதிமுறையே கொண்டுவந்திருப்பதன் மூலம் குழந்தைகள் பெயரில் முதலீடு செய்வது எளிமையாக மாறி இருக்கிறது. பெற்றோரோ, பாதுகாவலரோ இனி அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்தே மைனர்களின் பெயரில் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

ஆனால், மைனர் பெயரில் உள்ள முதலீட் டைத் திரும்ப எடுக்கும்போது மைனரின் வங்கிக் கணக்கிற்கே பணம் போகும். மைனர் ஒருவர் கே.ஒய்.சி தொடர்பான விவரங்களை நிறைவு செய்தபின்பே அவருடைய கணக்குக்கு ஃபண்டிலிருந்து தொகையை எடுக்க முடியும். வங்கிக் கணக்கில் ஏதேனும் மாற்றங்கள் இருந் தால், ஃபண்ட் யூனிட்டுகளை விற்கும்முன்பே வங்கிக் கணக்கு மாற்றங்களை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் சொல்லிவிட வேண்டும்” என்றார். பிள்ளைகள், பேரக் குழந்தைகளின் பெயரில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் பயனுள்ளதாக அமையும்!