நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

குடும்பத்தில் சேமிப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

விழிப்புணர்வு
பிரீமியம் ஸ்டோரி
News
விழிப்புணர்வு

நீண்ட காலத்துக்குப்பின் தேவைப் படும் பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்...

நாணயம் விகடன் மற்றும் ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் இணைந்து ‘மியூச்சுவல் ஃபண்ட் மூலம் செல்வத்தைப் பெருக்குதல்..!’ என்கிற தலைப் பில் முதலீட்டாளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியை பிரமாண்டமாக சென்னையில் நடத்தின.

இந்த நிகழ்ச்சியில் முதலில் பேசிய ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சார்ந்த கே.எஸ்.ராவ், ‘‘பட்ஜெட் போட்டுச் செலவு செய்தால்தான் குடும்பத்தில் சேமிப்பு அதிகரிக்கும். சம்பாத்தியத்தில் சேமிப்புக்கு என ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைத்துவிட்டு, மீதியுள்ள தொகையை மட்டுமே செலவு செய்ய வேண்டும். இப்படி ஒருவர் செய்தால், அவர் செல்வந்தர் ஆவது உறுதி’’ என்றார்.

குடும்பத்தில் சேமிப்பு அதிகரிக்க
என்ன செய்ய வேண்டும்?

ஆதித்ய பிர்லா சன் லைஃப் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தைச் சார்ந்த எஸ்.குருராஜ், ‘‘முதலீட்டை ஆரம்பிக்கும்போது ‘இந்தத் திட்டம் என் இலக்கை நிறைவேற்ற உதவுமா’ என்று கேட்க வேண்டும். இன்னும் மூன்று மாதத்தில் பணம் வேண்டும் எனில், லாபம் அதிகம் கிடைக்குமா என்று பார்ப்பதைவிட, பணம் பத்திரமாக இருக்குமா என்றுதான் பார்க்க வேண்டும். இதற்கு வருமானம் குறைவு என்றாலும் லிக்விட் ஃபண்ட் போன்ற ரிஸ்க் இல்லாத திட்டங்களில்தான் முதலீடு செய்ய வேண்டும். நீண்ட காலத்துக்குப்பின் தேவைப் படும் பணத்தை மட்டுமே பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும்’’ என்றார்.

பேச்சாளர் பாரதி பாஸ்கர், ‘‘செலவு போக மீதமிருக்கும் பணத்தை சேமிப்போம் என்பது இயலாத காரியம். சேமிப்புக்கு என ஆரம்பத்திலேயே குறிப்பிட்ட தொகையை ஒதுக்கினால் தான், சேமிப்பு அதிகரிக்கும்” என்றார்.

சந்தை நிபுணர் வ.நாகப்பன், பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து ஏற்றத்தின் போக்கில் இருப்பதற்கான புள்ளிவிவரங்களை ஆதாரங் களாகத் தந்தார். எம்.எஃப் யுட்டிலிட்டி நிறுவனத்தின் கணேஷ் ராம், ஆன்லைனில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை வாங்குவது பற்றி பேசினார். நிகழ்ச்சியின் இறுதியில் முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.