மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மியூச்சுவல் ஃபண்ட் இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 12: ஃபண்ட் பர்ஃபாமன்ஸ்... கண்டறிய உதவும் 5 அளவீடுகள்!

இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்...
பிரீமியம் ஸ்டோரி
News
இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்...

ஒரு ஃபண்ட் அதன் பிரிவில் உள்ள பிற ஃபண்டுகளைக்காட்டிலும் சிறப்பான வருமானத்தைத் தருவதாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்...

பாவனா ஆச்சார்யா, இணை நிறுவனர், Primeinvestor.in

மியூச்சுவல் ஃபண்டுகளின் செயல்பாடுகளைக் கணக்கிட பலவிதமான அளவீடுகள் உள்ளன. ஷார்ப் ரேஷியோ (Sharpe ratio), ஆல்பா (Alpha) மற்றும் பீட்டா (Beta), நிரந்தர விலகல் (Standard deviation) எனப் பல அளவீடுகள் உள்ளன. இந்த அளவீடுகள் பற்றியும், இவற்றைப் பயன்படுத்தும் விதம் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

பாவனா ஆச்சார்யா 
இணை நிறுவனர், 
Primeinvestor.in
பாவனா ஆச்சார்யா இணை நிறுவனர், Primeinvestor.in

1. நிரந்தர விலகல் (Standard deviation)

நிரந்தர விலகல் என்பது ஒரு ஃபண்ட் தரக்கூடிய வருமானத்தில் காணப்படுகிற அதிகபட்ச விலகல் ஆகும். இந்த விலகல் ஏற்றத்தின் போக்கிலும், இறக்கத்தின் போக்கிலும் எந்த அளவுக்கு இருக்கலாம் எனக் கணக்கிடப்படும். இந்த விலகலைக் கணக்கிட குறிப்பிட்ட கால இடைவெளியில் ஃபண்ட் கொடுக்கும் வருமானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ‘ரோலிங் ரிட்டர்ன்’ என்றும் சொல்லலாம். இந்த ‘ரோலிங் ரிட்டர்ன்’ தரவுகளில் வழக்கமான விலகல் ஃபார்முலாவைப் பயன்படுத்தி விலகல் அளவுகளை மதிப்பிட வேண்டும்.

இவ்வாறு மதிப்பிடுகிற ஒரு ஃபண்டின் நிரந்தர விலகல் அள வீடானது அந்த ஃபண்டைப் பற்றி எந்தத் தீர்வையும் தராது. மற்ற ஃபண்டுகளின் விலகல் அளவீடுகளுடன் ஒப்பீடு செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும். உதாரணமாக, குவான்ட் ஆக்டிவ் ஃபண்டின் நான்கு வருட கால வருமானத்துடன் ஒப்பிடுகையில், ஒரு வருட கால வருமானத்தின் விலகலானது 34 சதவிகிதமாகவும், டி.எஸ்.பி ஃப்ளெக்ஸிகேப் ஃபண்டின் விலகல் 20 சதவிகிதமாகவும் உள்ளன.

இந்த விலகல் அதிகமாக இருந்தால், அந்த ஃபண்டின் வருமான ஏற்ற இறக்கமும் அதிகமாக இருக்கும். குறைவான ஏற்ற இறக்கம் இருப்பதே பெரும்பாலும் விரும்பப்படுகிறது. காரணம், அதிக ஏற்ற இறக்கங்களைக்காட்டிலும் குறைவான ஏற்ற இறக்கம் காலப் போக்கில் நல்ல வருமானம் தருகிறது. எனவேதான், அதிக ஏற்ற இறக்கமாக உள்ள ஃபண்டுகள் கன்சர்வேட்டிவ் முதலீட்டாளர் களுக்குப் பொருத்தமாக இருக்காது.

ஈக்விட்டி, ஹைபிரிட் ஃபண்டுகளின் செயல்பாட்டில் சந்தையின் ஏற்ற இறக்கமானது முக்கியமான காரணியாக இருக்கிறது. ஆனால், கடன் ஃபண்டுகளில் ஏற்ற இறக்கமானது முக்கியமான காரணியாக இருப்பதில்லை. ஏனெனில், கடன் பத்திரங்களின் மதிப்பு பெரிய அளவில் ஏற்ற இறக்கங்களுக்கு உள்ளாவதில்லை.

மியூச்சுவல் ஃபண்ட்
இன்வெஸ்ட்மென்ட் ரிசர்ச்! - 12: ஃபண்ட் பர்ஃபாமன்ஸ்... கண்டறிய உதவும் 5 அளவீடுகள்!

2. ஷார்ப் ரேஷியோ (Sharpe ratio)

ஷார்ப் ரேஷியோ என்பது ஒரு ஃபண்ட் எதிர்கொள்ளும் ரிஸ்க்குக்கும் அது தரும் வருமானத்துக்கும் இடையிலான விகித மாகும். ஃபண்ட் எட்டக்கூடிய வருமானத்தை அடைவதற்கு எந்தளவு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதன் அளவீடுதான் ஷார்ப் ரேஷியோ. உதாரணமாக, இரண்டு ஃபண்டுகள் இருக்கின்றன எனில், இரண்டில் எந்த ஃபண்டில் ஏற்ற, இறக்க மானது குறைவாக இருக்கிறதோ, அதைத்தான் முதலீடு செய்ய தேர்ந்தெடுக்கிறோம். அந்த வகையில், நமக்குத் தேவையான வருமானத்துக்கும், எடுக்கக்கூடிய ரிஸ்க்குக்கும் இடையிலான பொருத்தத்தைப் பார்க்க வேண்டும். இந்த ஷார்ப் ரேஷியோ ஒரு ஃபண்டின் ரிஸ்க் எவ்வளவு என்பதைக் காட்டக்கூடியது. எடுக்கிற ரிஸ்க்குக்கு ஏற்ற வருமானம் கிடைக்கிறதா, இல்லையா என்பது மிகவும் முக்கியம். அதே சமயம், அதிக ரிஸ்க் எடுத்தால் தான் அதிக வருமானமும் பார்க்க முடியும். அதில் அதிக நஷ்டம் அடையவும் வாய்ப்புள்ளது.

உதாரணமாக, ஆதித்ய பிர்லா சன் லைஃப் கார்ப்பரேட் பாண்ட் ஃபண்ட் மூன்று வருட ரோலிங் காலத்தில் சராசரியாக வருடத்துக்கு 9.2% வருமானம் தருகிறது. அதே காலத்தில், எல் அண்ட் டி ட்ரிபிள் ஏஸ் பாண்ட் ஃபண்ட் 10% வருமானம் தருகிறது. ஆனால், ஷார்ப் ரேஷியோவில் எல் அண்ட் டி ஃபண்டைக் காட்டிலும் ஆதித்ய பிர்லா ஃபண்ட் 2.54% எனும் அளவில் சிறப்பாக இருக்கிறது. காரணம், இதில் ஏற்ற இறக்க மானது எல் அண்ட் டி ஃபண்டின் ஏற்ற இறக்கத்தில் பாதியளவுதான் இருக்கிறது.

கடன் ஃபண்டின் செயல்பாட்டை அளவிட ஷார்ப் ரேஷியோவை மட்டும் வைத்து தீர்மானிக்க வேண்டாம். மற்ற அளவீடுகளோடும் சேர்த்துதான் ஷார்ப் ரேஷியோவைப் பார்க்க வேண்டும்.

3. டௌன்சைடு, அப்சைடு கேப்சர் ரேஷியோ (Downside, Upside Capture Ratio)

ஒரு ஃபண்ட் இண்டெக்ஸ் ஏற்ற இறக்கங்களால் எந்தளவுக்குத் தாக்கத்துக்குள்ளாகிறது என்பதை அளவிடுவதுதான் இந்த டௌன்சைடு, அப்சைடு கேப்சர் ரேஷியோ. குறிப்பாக, ஈக்விட்டி ஃபண்டுகள் மற்றும் ஈக்விட்டி பங்கு அதிகமுள்ள ஹைபிரிட் ஃபண்டுகளுக்கு இந்த டௌன்சைடு, அப்சைடு கேப்சர் ரேஷியோ அளவீடு முக்கியமானது. அதாவது, ஒரு ஃபண்ட் இண்டெக்ஸின் இறக்கத்தால் குறைவாகவும், ஏற்றத்தால் அதிகமாகவும் தாக்கத்துக்குள்ளாக வேண்டும். அப்போதுதான் அந்த ஃபண்ட் அதிக வருமானத்தைத் தருவதாக இருக்கும்.

உதாரணமாக, ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் நிஃப்டி 100-ன் ஒரு மாத கால இறக்கத்தால் 70% தாக்கத்துக்கு உள்ளாகிறது. அதே சமயம், பி.என்.பி பரிபாஸ் லார்ஜ்கேப் ஃபண்ட் 80% தாக்கத்துக்கு உள்ளாகிறது. இவை இரண்டில் ஆக்ஸிஸ் புளூசிப் ஃபண்ட் குறைவான தாக்கத்துக்கு உள்ளாவதால், அதன் செயல்பாடு மேம் பட்டதாக இருக்கும். நஷ்டம் குறைவாக இருக்கும்.

பொதுவாக ஃபண்டுகளில் இறக்கமானது சிறிதளவேனும் இருக்க வேண்டும். அப்போது தான் அதில் முதலீடு செய்து ஏற்றத்தில் லாபம் பார்க்க முடியும். ஆனால் மிகக் குறைவாக இறக்கத்துக்கு உள்ளாகும் ஃபண்டுகள் அதிக ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ள முதலீட்டாளர்களுக்குத்தான் சரியாக இருக்கும். அரிதாக இறக்கத்துக்கு உள்ளாகும் ஃபண்டுகள் அந்த இறக்கத்தி லிருந்து மீண்டு ஏற்றத்தை நோக்கி நகரும்போது வீரியத்துடன் அதிக வருமானம் தருவதாக இருக்கும்.

பொதுவாக, இந்த ரேஷி யோவை அளவிட சந்தை இறக்கத்துக்குள்ளான காலத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் ஃபண்ட் கொடுத்த வருமானத்தை எடுத்துக் கொண்டு இண்டெக்ஸ் வருமானத்தால் ஃபண்ட் கொடுத்த வருமானத்தை வகுத்து டௌன்சைடு, அப் சைடு கேப்சர் ரேஷியோவை மதிப்பிடலாம். இதை சந்தை யின் பல்வேறு காலகட்டங் களில் நடை முறைப்படுத் தினால் தெளிவான முடிவுக்கு வர முடியும்.

கடன் ஃபண்டுகளுக்கு இண்டெக்ஸின் மதிப்பீடுகள் பொருந்தாது. எனவே, கடன் ஃபண்டுகளுக்குக் குறிப்பிட்ட காலத்தில் அவை எந்தளவுக்கு இழப்பைச் சந்தித்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். கடன் ஃபண்டுகளைப் பொறுத்தவரை, கிரெடிட் ரிஸ்க் மற்றும் முதிர்வுக் காரணிகள்தான் கடன் ஃபண்டுகளில் தாக்கத்தைச் செலுத்தும். அதன் அடிப் படையில்தான் அவற்றின் வருமான செயல்பாடு இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

4. இண்டெக்ஸைத் தாண்டிய வருமானம்

ஃபண்டுகளின் செயல் பாட்டை அறிவதில் இது முக்கியமானது. அதாவது, ஒரு ஃபண்ட் இண்டெக் ஸைத் தாண்டி எந்தளவுக்கு வருமானம் தந்திருக்கிறது என்பதைப் பார்ப்பதாகும். இண்டெக்ஸைத் தாண்டிய வருமான விகிதம் எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு அதன் செயல் பாடு நீடித்தும் நிற்கும்.

அந்தந்தப் பிரிவின்கீழுள்ள ஃபண்டுகளின் வருமானத்தை ஒப்பிட்டுப் பார்த்து அவற்றில் இண்டெக்ஸைத் தாண்டி அதிக விகிதத்தில் வருமானம் தந்துள்ள ஃபண்டுகளைத் தேர்வு செய்யலாம்.

நாம் வெவ்வேறு கால கட்டத்தில் ஒரு ஃபண்டில் முதலீடு செய்துவருவோம். ஆனால், நாம் முதலீடு செய்யக்கூடிய ஃபண்ட் அவ்வப்போது இண்டெக்ஸை விடவும் அதிகமாக வருமானம் தரக்கூடியதாக இருக்க வேண்டும். மேலும், ஒரு ஃபண்ட் அதன் பிரிவில் உள்ள பிற ஃபண்டு களைக்காட்டிலும் சிறப்பான வருமானத்தைத் தருவதாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும்.

கடன் ஃபண்டுகளுக்கு இண்டெக்ஸ் வருமானத்தின் ஒப்பீடு பயன்படாது. எனவே, அவற்றின் சக ஃபண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிக வருமானம் கொடுத்திருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

இண்டெக்ஸ் வருமானத்தை ஒப்பீட்டுக்கு எடுக்கும் போது கால அளவை சரியாக எடுக்க வேண்டியது முக்கியம். ஏனெனில், ஈக்விட்டி ஃபண்ட் குறுகிய காலத்தில் குறைவான வருமானத்தையே கொடுத் திருக்கும். ஆனால், நீண்ட காலத்தில் அது இண்டெக்ஸைவிட அதிக வருமானம் கொடுத்திருக்க வாய்ப்புள்ளது.

5. ஆல்ஃபா மற்றும் பீட்டா

பீட்டா என்பது ஃபண்டுக்கும் அதன் பெஞ்ச்மார்க் குறியீட்டுக்கும் இடையிலான ஏற்ற இறக்க ஒப்பீடாகும். இந்த பீட்டா விகிதம் ஒரு ஃபண்டுக்கு 1-க்கு அதிகமாக இருந்தால், ஏற்றத்தின் போக்கில் அந்தக் குறிப்பிட்ட ஃபண்ட் அதிக வருமானம் தரும். அதே போல், இறக்கத்தின் போக்கில் அதிக இறக்கத்தையும் காணும்.

அதே போல, பீட்டா விகிதம் 1-க்குக் குறைவாக இருந்தால், மேற்குறிப்பிட்ட செயல்பாடு தலைகீழாக இருக்கும். இதில் ஆல்ஃபா என்பது பீட்டா விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஃபண்ட் எடுக்கும் முடிவுகளால் பெஞ்ச்மார்க் குறியீட்டைக் காட்டிலும் கூடுதலாகக் கிடைக்கும் வருமானத்தை மதிப்பிடு வது ஆகும். இந்த வகையில், ஒரு ஃபண்ட் எந்தளவுக்குக் கூடுதலாக வருமானம் கொடுக்கும் என்பதை அறிய உதவுவதான் ஆல்ஃபா.

ஆல்ஃபா, பீட்டா இரண்டுக்குமே அதன் சரியான பெஞ்ச்மார்க் அளவீடு முக்கியமானது. ஒரு ஃபண்ட் அது சார்ந்த பெஞ்ச்மார்க் குறியீட்டோடு சம்பந்தமில்லாமல் இருந்தால் அதன் ஆல்ஃபா, பீட்டா மதிப்பீடுகளால் எந்தப் பயனும் இல்லை. அந்த வகையில் இந்த மதிப்பீடுகள் கடன் ஃபண்டுகள் அல்லது ஹைபிரிட் ஃபண்டுகளுக்குப் பயன் தராது.

(ஆய்வு தொடரும்)

தமிழில்: ஜெ.சரவணன்