தொடர்கள்
நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

மாணவிகளுக்கு வழங்கப்படும் புதிய டெபிட் கார்டு! -சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

நிலையான மற்றும் பாது காப்பான கூடுதல் வருமானம் வேண்டுபவர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

சசி ரேகா

அண்மையில் சந்தை யில் அறிமுகம் செய்யப் பட்ட நிதி சார்ந்த புதிய திட்டங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஐ.சி.ஐ.சி.ஐ புரூ கோல்டு (ICICI Pru Gold)

ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென் ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம், நிச்சயமான வருமானம் வழங்கும் காப் பீட்டுடன் சேர்ந்த சேமிப்புத் திட்டத்தை அறிமுகம் செய் திருக்கிறது.

இந்தத் திட்டத்தில் வழங்கப்படும் நிலையான வருமானத்தை பாலிசிதாரர் அவரின் விருப்பத்துக்கேற்ப தேர்வு செய்துகொள்ள முடியும்.

வருமானத்தைப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் மூன்று வகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. முதலாவது வகையில், பிரீமியம் தொகை செலுத்திய 30 நாள்களில் இருந்து குறிப்பிட்ட தொகை மாதம்தோறும் அளிக்கப்படும்.

இரண்டாவது வகையில், பூஸ்டருடன் சேர்ந்து உடனடி வருமானம் வழங்கப்படும். அதன்படி, இந்தத் திட்டத்தில் சேர்ந்த 30 நாள்களில் இருந்து குறிப்பிட்ட மாத வருமான மும், ஒவ்வொரு ஐந்து வருட முடிவிலும் கூடுதலாக வருமானமும் வழங்கப்படும்.

மூன்றாவது திட்டத்தில் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப பிரீமியம் செலுத் திய குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு வருமானம் வழங்கப்படும்.

நிலையான மற்றும் பாது காப்பான கூடுதல் வருமானம் வேண்டுபவர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்தப் புதிய திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மாணவிகளுக்கு வழங்கப்படும் புதிய டெபிட் கார்டு! -சந்தைக்குப் புதுசு

பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ்: புதிய முதலீட்டு பத்திரம்...

பி.என்.பி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம், 1.5 ஆண்டுகளை முதிர்வுக் காலமாகக் கொண்ட புதிய முதலீட்டுப் பத்திரத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதற்கு அதிகபட்சமாக கூட்டு வட்டி அடிப்படையில் 8.7% வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

மேலும், மற்றொரு தனியார் துறை வங்கியான கோட்டக் மஹிந்திரா வங்கி ஏழு ஆண்டுகளை முதிர்வுக் காலமாகக் கொண்ட புதிய முதலீட்டுப் பத்திரத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இதற்கான வட்டி ஆண்டுக்கு 7.8% நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்றொரு முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா, டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. அதன்படி, மூத்த குடிமக்களுக்கான 5 முதல் 10 ஆண்டு டெபாசிட்டுகளுக்கு 7.55% வட்டியும், இதர பிரிவினருக் கான டெபாசிட்டுகளுக்கு 7.05% வட்டியும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட கால நோக்கில் கூடுதல் வருமானம் கிடைக்க விரும்புபவர்கள் மேலே குறிப்பிட்ட திட்டங்களில் தமக்கேற்ற திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

மாணவிகளுக்கு வழங்கப்படும் புதிய டெபிட் கார்டு! -சந்தைக்குப் புதுசு

தமிழக அரசுடன் இணைந்து பேங்க் ஆஃப் பரோடா வங்கி அறிமுகம் செய்யும் புதிய டெபிட் கார்டு...

அரசுப் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து தேர்ச்சி பெற்ற மாணவிகளின் கல்லூரிப் படிப்புக்கு உதவிடும் வகையில் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில் மாணவிகள் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

தற்போது இந்த உதவித் தொகை வழங்கப்படும் மாணவிகளுக்கு பரோடா வங்கியின் பிளாட்டினம் டெபிட் கார்டை தமிழக அரசு வழங்க இருக்கிறது. இந்தக் டெபிட் கார்டு ரூபே நெட்வொர்க்கில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்த அட்டைக்கான நுழைவுக் கட்டணமும் முதலாம் ஆண்டு பயன்பாட்டுக் கட்டணமும் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும், இந்த அட்டையின் பயனாளருக்கு ரூ.2 லட்சம் அளவுக்கு விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.

புதுமைப்பெண் திட்டத்தில் அரசின் சலுகைகள் பெற மாணவிகள் 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், குடும்பத் தலைவரின் வருமானச் சான்றிதழ், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து விண்ணப்பம் செய்யலாம்.