சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக வட்டி வருமானம் வழங்கும் மூன்று வங்கிகள்..! - சந்தைக்குப் புதுசு

கனரா வங்கி, மாதச் சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக புதிய வகை வங்கிக் கணக்கை அறிமுகம் செய்திருக்கிறது...
சசி ரேகா
அண்மையில் சந்தையில் அறிமுகமான நிதி சார்ந்த புதிய திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
ஹெச்.டி.எஃப்.சி மியூச்சுவல் ஃபண்ட்: 3 புதிய திட்டங்கள்
ஹெச்.டி.எஃப்.சி மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி குறியீடுகளில் முதலீடு செய்யும் மூன்று வெவ்வேறு பாஸிவ் வகை திட்டங்களை அறிமுகம் செய்திருக்கிறது. ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி மிட்கேப் 150 இண்டெக்ஸ் ஃபண்ட் என்கிற திட்ட மானது, நடுத்தர நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும் நிஃப்டி மிட்கேப் 150 குறியீட்டில் முதலீடு செய்யும்.
ஹெச்.டி.எஃப்.சி நிஃப்டி ஸ்மால் கேப் 250 இண்டெக்ஸ் ஃபண்ட் என்கிற திட்டம், சிறிய நிறுவனங்கள் இடம் பெற்றிருக்கும் நிஃப்டி ஸ்மால் கேப் 250 குறியீட்டில் முதலீடு செய்யும். ஹெச்.டி.எஃப்.சி எஸ்&பி பி..எஸ்.இ 500 இண்டெக்ஸ் ஃபண்ட் என்கிற திட்டம், எஸ்&பி பி..எஸ்.இ 500 குறியீட்டில் முதலீட்டை மேற்கொள்ளும்.
இந்த மூன்று திட்டங் களிலும் ஏப்ரல் 18-ம் தேதி வரை முதலீட்டை மேற் கொள்ளலாம். குறைந்த பட்சம் 100 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம். பாஸிவ் வகை திட்டங்களில் நிர்வாகச் செலவு குறைவாக இருக்கும். என்றாலும், இந்த மூன்று திட்டங்களில் திரட்டப்படும் நிதியானது முழுவதும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர் கள் மட்டும் இந்தத் திட்டங் களில் சேர்ந்து பயன் பெறலாம்.

எடெல்வைஸ் ஃபைனான் ஷியல்: புதிய என்.சி.டி திட்டம்
எடெல்வைஸ் ஃபைனான் ஷியல் நிறுவனம், பங்கு களாக மாற்றிக்கொள்ள முடியாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிட்டு ரூ.400 கோடி வரை நிதித் திரட்ட இருக்கிறது. இந்தத் திட்டத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வரை முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலமாக இரண்டு முதல் பத்து ஆண்டுகள் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக 10.45% வரை வட்டி வழங்கப்படு கிறது. ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் 10,000 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங் கலாம். மிதமான ரிஸ்க் உடைய இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும்போது வங்கி டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.
கனரா வங்கி: பிரீமியம் பேரோல் அக்கவுன்ட் (Canara Bank Premium Payroll Account)
கனரா வங்கி, மாதச் சம்பளம் பெறும் வாடிக்கை யாளர்களுக்காக பிரத்யேக புதிய வகை வங்கிக் கணக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டம் 360 டிகிரி சுழற்சியில் வாடிக்கையாளரின் அனைத்து விதமான வங்கித் தேவைகளுக்கும் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கை ஐந்து பணியாளர்களுக்கு மேல் கொண்ட (மாதச் சம்பளம் ரூ.50,000-க்கு மேல்) நிறுவனங்கள் தொடங்க முடியும்.
வாடிக்கையாளருக்கு இலவச டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ், உடனடி ஓவர் டிராஃப்ட் கடன் பெறும் வசதி, இலவச விபத்துக் காப்பீடு, பிரீமியம் டெபிட் கார்டு போன்ற பல்வேறு சலுகைகள் வழங்கப்படும்.

சீனியர் சிட்டிசன்கள்: அதிக வட்டி வருமானம் வழங்கும் மூன்று வங்கிகள்...
தற்போதைய நிலையில், மூன்று சிறு வங்கிகள் அதிக வட்டி வருமானம் தருகின்றன. யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Unity Small Finance Bank) மிக அதிகபட்சமாக 1,001 நாள் முதிர்வுக் காலமாக கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 9.5% வட்டி வழங்குகிறது.
உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank) 700 நாள் முதிர்வுக் காலமாகக் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சீனியர் சிட்டிசன் களுக்கு 9% வட்டி வழங்குகிறது.
ஃபின்கேர் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Fincare Small Finance Bank) 500 நாள் முதிர்வுக் காலமாக கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு சீனியர் சிட்டிசன்களுக்கு 8.35% வட்டி வழங்குகிறது. தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்!