பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மோட்டார் இன்ஷூரன்ஸ்... மூன்று புதிய ரைடர் பாலிசிகள்! - சந்தைக்குப் புதுசு

சந்தைக்குப் புதுசு
பிரீமியம் ஸ்டோரி
News
சந்தைக்குப் புதுசு

சோழ மண்டலம் வெளியிட்டுள்ள என்.சி.டி-யில் முதலீடு செய்தால், வங்கி டெபாசிட்டைவிட கூடுதல் வருமானம் கிடைக்கும்...

சசி ரேகா

சந்தையில் அண்மையில் அறிமுகமான நிதி சார்ந்த புதிய திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.

சோழமண்டலம் ஃபைனான்ஸ்: புதிய என்.சி.டி திட்டம்...

சோழமண்டலம் ஃபைனான்ஸ் நிறுவனம் பல்வேறு தவணைகளில் ரூ.5,000 கோடி வரை பங்கு களாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (NCD) வெளியிட்டு நிதி திரட்ட இருக்கிறது. இதில் முதல் தவணையாக ரூ.1,000 கோடி திரட்ட இருக்கிறது.

இதில் ஒருவர் குறைந்த பட்சம் 10,000 ரூபாயில் இருந்து முதலீட்டைத் தொடங்க முடியும். ஒரு பத்திரத்தின் விலையாக ரூ.1,000 நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது.

திட்டக் காலமாக 22, 37 மற்றும் 60 மாதங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் செய்யப்படும் முதலீட்டுக்கு அதிகபட்சமாக 8.4% வட்டி வழங்கப்படுகிறது.

முதல் தவணையில் வெளியிடப்படும் பத்திரத் தில் மே 9-ம் தேதிக்குள் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.

குறைவான ரிஸ்க் உடைய இந்தக் கடன் பத்திரங்களில் முதலீட்டை மேற்கொள்ளும் போது வங்கி டெபாசிட்டை விட கூடுதல் வருமானம் கிடைக்கும்.

ஆர்.பி.எல் வங்கி: ஆன்லைன் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டம்...

ஆர்.பி.எல் வங்கி, தனது வலைதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் உடனடி வங்கி சேமிப்புக் கணக்கு மற்றும் ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கைத் தொடங்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு அதிகபட்சமாக 7.8% வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

திட்டக் காலமாக குறைந்த பட்சம் 15 மாதங்களில் இருந்து 725 நாள்கள் வரை நிர்ணயம் செய்யப்பட் டுள்ளது. டிஜிட் டல் எஃப்.டி தொடங்கும் வாடிக்கையாளர் களுக்கு காப்பீட்டு கவரேஜ் கிடைக்கும்.

மேலும், வங்கிக் கணக்குத் தொடங்குபவர்கள் ஆன் லைன் கே.ஒய்.சி வசதி மூலம் டிஜிட்டல் முறையில் ஆதார் போன்ற விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

டிஜிட்டல் முறையில் எளிமையான வகையில் முதலீடு செய்யும் இந்தப் புதிய வகை ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் சேர்ந்து பயன் பெறலாம்.

மோட்டார் இன்ஷூரன்ஸ்... மூன்று புதிய ரைடர் பாலிசிகள்! - சந்தைக்குப் புதுசு

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷூரன்ஸ்: 3 புதிய ரைடர் பாலிசிகள்...

ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் புதிதாக மூன்று ரைடர் பாலிசிகளை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த மூன்று பாலிசிகளும் மோட்டார் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரைடர் என்பது துணை பாலிசியாகும். இதை அடிப்படை பாலிசியை எடுக்கும்போது கூடுதல் கவரேஜுக்காக எடுக்கலாம்.

முதலாவது, ரைடர் பாலிசியில் வாகனத்தின் முழு மதிப்பை வாகனம் திருடுபோனால் திரும்பப் பெற முடியும். இரண்டாவது வகை, ரைடர் பாலிசியில் வாகனத்தின் உண்மையான மதிப்புடன் காப்பீடு, வாகனத்துக்கான ரெஜிஸ்ட்ரேஷன் செலவுகள் மற்றும் சாலை வரி போன்ற செலவுகளுக்கும் சேர்த்து காப்பீடு எடுக்க முடியும்.

பொதுவாக, வாகனக் காப்பீட்டில் வாகனத்தின் முழு மதிப்புக்கும் காப்பீடு பெற முடியாது. கூடுதல் ரைடர் பாலிசியை எடுத்துக்கொள்வதன் மூலம் முழுமையான காப்பீட்டை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

மேலும், மூன்றாவது வகை ரைடர் பாலிசியில் ரோடு சைட் அசிஸ்டன்ட் மூலம் 19 வகையான சேவைகளை இலவசமாகப் பெற முடியும். அதனால் தன்னுடைய வாகனங்களுக்கு முழுமையான காப்பீடு தேவைப்படுபவர்கள் ராயல் சுந்தரம் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய ரைடர் பாலிசிகளை எடுத்து பயன் பெறலாம். இந்தத் துணை பாலிசிகளுக்கு சற்றுக் கூடுதல் பிரீமியம் கட்ட வேண்டும்.

அம்ரித் கலாஷ் எஃப்.டி. நீட்டிப்பு செய்யும் எஸ்.பி.ஐ

எஸ்.பி.ஐ வங்கி புதிதாக 400 நாள்களைத் திட்ட காலமாகக் கொண்ட ‘அம்ரித் கலாஷ்’ என்ற புதிய ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை சென்ற பிப்ரவரியில் அறிமுகம் செய்து, மார்ச் 31-ம் தேதியுடன் முடிந்தது. தற்போது எஸ்.பி.ஐ வங்கி மீண்டும் அந்த ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை முதலீடு செய்ய முடியும். மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.6% வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் ஜூன் 30-ம் தேதி வரை முதலீடு செய்ய முடியும்.