நிஃப்டி குறியீடுகளில் முதலீடு செய்யும் பாஸிவ் வகை திட்டங்கள்! - சந்தைக்குப் புதுசு

ஹெச்.டி.எஃப்.சி டிஃபென்ஸ் ஃபண்ட், நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு முதலீட்டை மேற்கொள்ளும்...
சசி ரேகா
சந்தையில் அண்மையில் அறிமுகமான நிதி சார்ந்த புதிய திட்டங்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
ஹெச்.டி.எஃப்.சி டிஃபென்ஸ் ஃபண்ட் (HDFC Defense Fund)
ஹெச்.டி.எஃப்.சி மியூச் சுவல் ஃபண்ட் நிறுவனம், நாட்டிலேயே முதல்முறையாக பாதுகாப்புத்துறை சார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் புதிய வகை திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
நிஃப்டி இந்தியா டிஃபென்ஸ் இண்டெக்ஸ் என்கிற குறியீட்டை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் முதலீட்டை மேற்கொள்ளும். இந்தக் குறியீட்டில் நமது நாட்டின் பாதுகாப்பு மற்றும் அந்தத் துறை சார்ந்த இதர நிறுவனங்கள் இடம்பெற்று இருக்கும்.
தற்போதைய நிலவரப்படி, இந்தக் குறியீட்டில் 13 நிறுவனங்கள் இடம்பெற்று இருக்கின்றன. அந்த 13 நிறுவனங்களில் 10 நிறுவனங் கள் சிறிய மற்றும் நடுத்தர மதிப்பு கொண்ட நிறுவனங் கள் ஆகும். கொச்சின் ஷிப்யார்ட், இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்கல், பாரத் எலெக்ட்ரானிக்ஸ், மசாகன் டெவலப்பர்ஸ் போன்ற நிறுவனங்கள் இந்த குறியீட்டில் இடம்பெற் றிருக்கும் நிறுவனங்களில் குறிப்பிடத்தக்கவை.
இந்தத் திட்டத்தில் ஜூன் 2 வரை முதலீட்டை மேற் கொள்ளலாம். ஆனாலும், இது போன்ற தீமெட்டிக் வகை திட்டங்கள் அதிக ரிஸ்க் உடையவை.
மேலும், இதில் திரட்டப் படும் நிதியில் பெரும்பகுதி பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இதில் முதலீடு செய்யலாம்.

யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட்: இரு புதிய திட்டங்கள்
யு.டி.ஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம், நிஃப்டி குறியீடுகளில் முதலீடு செய்யும் இரண்டு பாஸிவ் வகை திட்டங்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
யு.டி.ஐ நிஃப்டி 50 ஈக்குவல் வெயிட் இண்டெக்ஸ் ஃபண்ட் என்கிற முதலாவது திட்டத்தில் நிஃப்டி குறியீட் டில் இடம்பெற்றிருக்கும் 50 நிறுவனங்களில் சரிசமமாக முதலீடு மேற்கொள்ளப்படும்.
பொதுவாக, நிஃப்டி குறியீடுகளில் முதலீடு செய்யப்படும்போது ஒவ்வொரு நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டிருக்கும் மதிப் பீட்டை (weightage) அடிப் படையாகக் கொண்டு முதலீடு மேற்கொள்ளப்படும்.
நிஃப்டி குறியீட்டில் முதலீடு செய்யப்படும்போது ஒவ்வொரு நிறுவனத்திலும் மேற்கொள்ளப்படும் முதலீட்டின் அளவு மாறுபடும். அதற்கு மாறாக, இந்தப் புதிய திட்டத்தில் அனைத்து நிறுவனங்களிலும் முதலீடு சரிசமமாகப் பிரித்து மேற்கொள்ளப்படும்.
யு.டி.ஐ எஸ் & பி பி.எஸ்.இ ஹவுஸிங் இண்டெக்ஸ் ஃபண்ட் என்கிற திட்டத்தில், நிஃப்டி எஸ் & பி பி.எஸ்.இ ஹவுஸிங் குறியீட்டில் முதலீடு மேற்கொள்ளப் படும். சிமென்ட் மற்றும் கட்டுமானத் துறை சார்ந்த நிறுவனங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப் படுவதால், இது ஒரு தீமெட்டிக் வகை திட்டத்தைச் சேர்ந்ததாகும்.
மேற்கூறிய இரண்டு திட்டங்களிலும் ஜூன் 5-ம் தேதி வரை முதலீட்டை மேற்கொள்ளலாம். குறைந்தபட்சம் 5,000 ரூபாயிலிருந்து முதலீட்டைத் தொடங்கலாம்.
இந்த இரண்டு வகை திட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் முதலீடு முழுவதும் பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்படுவதால், அதிக ரிஸ்க் எடுக்கும் திறனுடைய முதலீட்டாளர்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
பேடிஎம், எஸ்.பி.ஐ கார்டு: புதிய கடன் அட்டை
ஃபின்டெக் துறை சார்ந்த பேடிஎம் நிறுவனம் எஸ்.பி.ஐ கார்டு நிறுவனத்துடன் இணைந்து ரூபே நெட்வொர்க்கில் பேடிஎம் எஸ்.பி.ஐ கார்டு என்ற புதிய கடன் அட்டையை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்தக் கடன் அட்டைக்கு அறிமுக சலுகையாக 75,000 ரூபாய் மதிப்பிலான பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, விமான டிக்கெட்டுகள் புக்கிங் செய்யப் படும்போது கூடுதல் டிஸ்கவுன்ட், 750 ரூபாய் மதிப்புள்ள பேடிஎம் ஃபர்ஸ்ட் மெம்பர்ஷிப் இலவசம், பல்வேறு ஓடிடி கட்டணங்களில் சலுகைகள், திரைப்பட டிக்கெட் புக்கிங் செய்யப் படும்போது 3% வரை கேஷ்பேக் போன்றவை வழங்கப்படுகின்றன.
புதிய கடன் அட்டை வேண்டுபவர்கள் பேடிஎம் மற்றும் எஸ்.பி.ஐ கார்டு நிறுவனம் இணைந்து அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கடன் அட்டைக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.