டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட்... வட்டி விகித ஏற்ற முடிவில் அதிக வருமானம் ஈட்ட சிறந்த வழி!

டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் குறிப்பிட்ட இலக்குடன் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட்டாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்...
சிந்தன் ஹரியா, தலைவர் - முதலீட்டு உத்திகள் பிரிவு, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஏஎம்சி
பணவீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்த போக்கு ஏறக் குறைய முடிவுக்கு வந்திருக் கிறது. ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தைக் குறைக்க சிறிது காலம் ஆகும். தற்போதுள்ள அதிக வட்டி சூழலைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் எப்படி பலன் அடையலாம் என்று பார்த்தால், டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட் (Target Maturity Fund) முக்கியமான தீர்வாக இருக்கிறது.

தற்போதுள்ள அதிக வட்டி யிலேயே உங்கள் முதலீடு களை ‘லாக்இன்’ செய்ய அதாவது, தொடர எளிதான வழிகளில் ஒன்று இந்த டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்ட் சிறந்த தேர்வாக இருக்கிறது. இந்த டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் பாஸிவ் முறையில் நிர்வகிக்கப்படும் கடன் சந்தை சார்ந்த ஃபண்டுகள் ஆகும். இவை, கடன் ஃபண்டுகளின் இண்டெக்ஸ் மற்றும் அவற்றின் முதிர்வுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. இவை, இ.டி.எஃப் (ETF- Exchange Traded Fund) அல்லது இண்டெக்ஸ் ஃபண்டுகளின் வடிவில் இருக்கின்றன.

இவற்றின் முதலீட்டுக் கலவையில் (Portfolio) பொதுவாக, அரசுக் கடன் பத்திரங்கள், பொதுத்துறை நிறுவனப் பத்திரங்கள், கார்ப் பரேட் நிறுவனப் பத்திரங்கள் மற்றும் மாநில அரசின் கடன் பத்திரங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும்.
இந்த ஃபண்டுகள் அதன் பெயருக்கு ஏற்ப நிலையான முதிர்வுத் தேதியைக் கொண்டுள்ளன. அந்தக் குறிப்பிட்ட முதிர்வுத் தேதியுடன் உங்களுடைய முதலீட்டு இலக்குக் காலம் ஒத்துப்போகும்பட்சத்தில் தற்போதுள்ள அதிக வட்டி யில் உங்கள் முதலீட்டை ‘லாக் இன்’ செய்துகொள்ளும் வாய்ப்பை அவை வழங்கும்.
குறிப்பிட்ட முதிர்வுத் தேதி வரை இந்தக் கடன் பத்திரங்களை வைத்திருக்கும் நோக்கத்துடன், இந்த டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் முதலீட்டாளர் களிடமிருந்து திரட்டப்படும் பணம் முதலீடு செய்வதால், இது சாத்தியமாகிறது.
உதாரணமாக, நீங்கள் 10 வருட டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டில் முதலீடு செய்யும் போது, 10 வருட முதிர்ச்சி யுடன்கூடிய கடன் பத்திரங் களில் முதலீடு செய்யும் திட்டத்தில் உங்கள் முதலீட்டை வைக்கிறீர்கள். அந்த வகையில் வரும் ஆண்டு களில் வட்டி விகிதங்கள் குறைந்தாலும், தற்போதுள்ள வட்டி விகிதத்தை உங்கள் முதலீடு தொடர்ந்து பெறும்.
இந்த ஃபண்டுகளின் கட்ட மைப்பு முதிர்வுக் காலத்தை படிப்படியாகக் குறைக்கும் வகையில் செயல்படுகிறது. அதாவது, ஒவ்வோர் ஆண்டு கடக்கும்போதும் பத்திரங்களின் முதிர்வுக் காலம் குறைந்துகொண்டே வரும். இந்த வழியில், கால அவகாசத்தின் ரிஸ்க் (Duration Risk) குறைந்துகொண்டே வரும். அதே சமயம், முதிர்வுத் தேதி மாறாமல் இருப்பதால், இதில் கிடைக்கும் வருமானம் எவ்வளவு என்பதை நம்மால் ஓரளவுக்குக் கணிக்க முடியும். எடுத்துக் காட்டாக, ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் பி.எஸ்.யூ பாண்ட் ப்ளஸ் எஸ்.டி.எல் 40:60 இண்டெக்ஸ் ஃபண்ட் - செப்டம்பர் 2027 ஃபண்டில் முதலீடு செய்கிறீர்கள் எனில், 4 வருடங்கள் மட்டுமே முதிர்வுக் காலம் எஞ்சியிருக்கும். அதாவது, குறைந்த கால அவகாச ரிஸ்க்கை இது கொண்டிருக்கும்.
மேலும், டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் சாவரின் மற்றும் சாவரின் சார்ந்த பத்திரங்களில் (Sovereign or Quasi-Sovereign Bonds) மட்டுமே முதலீடு செய்கின்றன. எனவே, இவற்றில் செய்யப்படும் முதலீடுகளில் கிரெடிட் ரிஸ்க்கும் மிகக் குறைவாகவே இருக்கும்.
இந்த டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகளில் செய்யப்படும் முதலீடு மூன்று விதங்களில் செயல்படு கிறது. ஒன்று, முதிர்ச்சியின்போது பெறக்கூடிய வருமானத்தை ‘லாக்இன்’ செய்ய முடியும்.
இரண்டாவது, கால முதிர்வில் இருக்கும் ரிஸ்க்கைக் குறைக்கும். இவை, பாஸிவ் முறையில் கடன் பத்திரங்களை வாங்கி வைத்திருக்கும் உத்தியைப் பின்பற்றுவதால், தொடர்புடைய முதலீட்டுக்கான செலவு விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. இவை பாஸிவ் முறையில் நிர்வகிக்கப்படுவதால், தொடர்புடைய குறியீடுகளின் நகர்வுகளுக் கேற்ப பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது என்பதையும் அறிந்துகொள்ள முடியும்.
டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டுகள் ஒரு குறிப்பிட்ட தேதியில் முதிர்ச்சியடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், முதலீட்டாளர்களுக்கு முதிர்வில் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பது குறித்த தெளிவு கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட இலக்குடன் முதலீடுகளை மேற்கொள்ளும் முதலீட் டாளர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும். டார்கெட் மெச்சூரிட்டி ஃபண்டின் பாசிட்டிவ் அம்சங்கள் புரிந்ததா?