Published:Updated:

வருமான வரி முதல் முதலீடு வரை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் நிகழ்ச்சி!

வருமான வரி
முதலீடு
News
வருமான வரி முதலீடு

சேமிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கு வரி நடைமுறைகள், முதலீட்டு நடைமுறைகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், சலுகைகள் என்னென்ன என்பதையெல்லாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

இந்தியர்கள் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளில் கட்டுமான வேலைகளில் தொடங்கி கம்பெனிகளின் உயர் பதவிகள் வரை பல்வேறு வேலைகளில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் அங்கு சம்பாதிக்கும் பணத்தை சேமிப்பது, முதலீடு செய்வது போன்ற காரியங்களுக்குப் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் சேமிப்பு, முதலீடு ஆகியவற்றுக்கு வரி நடைமுறைகள், முதலீட்டு நடைமுறைகள் இந்தியாவில் இருப்பவர்களுக்கும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், சலுகைகள் என்னென்ன என்பதை யெல்லாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

வருமான வரி
வருமான வரி

வருமான வரி நடைமுறைகளையும், சேமிப்பு, முதலீடு போன்ற வற்றிலுள்ள கட்டுப்பாடுகளையும் தெரிந்துகொண்டால்தான் கூடுதல் வரி, அதிக வரி போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும். எனவே, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த நாணயம் விகடன் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

நாணயம் விகடன் சார்பில் `அமெரிக்கா வாழ் என்.ஆர்.ஐ: வரி முதல் முதலீடு வரை' என்கிற தலைப்பில் ஆன்லைன் நிகழ்ச்சியை வரும் பிப்ரவரி 18, 2023 அன்று இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை (IST) நடத்த இருக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு (NRI) வருமான வரி முதலீடு / வருமான வரி கணக்கு தாக்கல், வீடு, மனை வாங்குதல், நிறுவனப் பங்குகள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு போன்றவை குறித்த பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். இவற்றுக்கு விடையளிக்கும் விதமாக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

வருமான வரி முதல் முதலீடு வரை; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கான ஆன்லைன் நிகழ்ச்சி!

என்.ஆர்.ஐ-களுக்கு வருமான வரி மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார் கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னணி ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன், அவர் இந்தப் பயிற்சி வகுப்பை நடத்த உள்ளார்.

இவர் ஆடிட்டிங் பணியில் 30 ஆண்டுக் கால அனுபவம் கொண்டவர். அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குப் பயன் தரக்கூடிய இந்த ஆன்லைன் நிகழ்ச்சிக்கான கட்டணம் ₹900 ஆகும். முன் பதிவுக்கு: https://bit.ly/3QMIs9N என்ற லிங்கில் பதிவு செய்யவும். பதிவு செய்பவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியும்.