தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

லீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம்!

நாணயம் விகடன்
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் விகடன்

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019

‘‘பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எங்களைத் தேடிவந்தார் லீமா. தஞ்சாவூர் பொம்மைகளை அற்புதமாகச் செய்வார். தன் பிசினஸை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல எங்களிடம் கடனுதவி கேட்டு வந்திருந்தார். அவருக்குக் கடனுதவி செய்து தந்ததோடு, கீதா ராம் என்ற தொழில் வழிகாட்டுரையும் (Mentor) அவருக்காக நியமித்தோம்.

நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019
நாணயம் விகடன் பிசினஸ் ஸ்டார் விருதுகள் 2019

‘எனக்கு மென்ட்டார்னா என்னன்னே தெரியாது. கடனுதவி மட்டும் செய்யுங்க' என்று சொன்ன லீமாவிடம் தொழில் வழிகாட்டுநரின் அவசியத்தை எடுத்துச் சொல்லிப் புரியவைத்தோம். எங்கள் மென்ட்டார், லீமாவுக்கு டிரைபல் மாஸ்க்குகள் தயாரிக்கும் ஐடியாவைக் கொடுத்தார். இன்று அவர் வெளிநாடுகளில் அவற்றை விற்கும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார். லீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம்!''

டிசம்பர் 5 அன்று நாணயம் விகடன் சென்னையில் நடத்திய `பிசினஸ் ஸ்டார் அவார்டு' நிகழ்ச்சியில் பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்டின் ஃபவுண்டிங் அண்டு மேனேஜிங் டிரஸ்டி லட்சுமி வெங்கடேசன் இப்படிப் பேசினார். அவருக்கு ‘பிசினஸ் மென்ட்டார் (இன்ஸ்டிடியூஷன்) அவார்டு’ வழங்கப்பட்டது.

 `பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்'  லட்சுமி வெங்கடேசனுக்கு விருது வழங்கும் `டி.வி.எஸ்'  ஆர்.தினேஷ்
`பாரதிய யுவ சக்தி டிரஸ்ட்' லட்சுமி வெங்கடேசனுக்கு விருது வழங்கும் `டி.வி.எஸ்' ஆர்.தினேஷ்

இந்த விழாவில் `ஆரஞ்ச் ஸ்கேப், கிஸ்ஃப்ளோ’ நிறுவனத்தின், சி.இ.ஓ-வும் ஃபவுண்டருமான சுரேஷ் சம்பந்தத்துக்கு `ஸ்டார்ட்அப் சாம்பியன் அவார்டு’ம், ‘வில்குரோ’ நிறுவனத்தின் சி.இ.ஓ பால் பேஸலுக்கு ‘சோஷியல் கான்ஷியஸ்னெஸ் அவார்டு’ம், ‘குரூம் இந்தியா சலூன் & ஸ்பா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனர்களான சி.கே.குமரவேல் மற்றும் வீணா குமரவேலுக்கு ‘பீனிக்ஸ் ஆந்த்ரப்ரனார் அவார்டு’ம் அளிக்கப்பட்டன.

‘ராம்ராஜ் காட்டன்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கே.ஆர்.நாகராஜனுக்கு `பிசினஸ் இன்னோவேஷன் விருது’ம், `மில்க்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் பிரைவேட் லிமிடெட்’டின் நிர்வாக இயக்குநர் சதிஷ்குமாருக்கு ‘ரைஸிங் ஸ்டார் அவார்டு’ம், ‘இன்டெலக்ட் டிசைன் எரினா’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநருமான அருண் ஜெயினுக்கு ‘பிசினஸ் மென்ட்டார் அவார்டு’ம், ‘பொன் ப்யூர் கெமிக்கல்’ நிறுவனத்தின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநருமான பொன்னுசாமிக்கு ‘செல்ஃப்மேடு ஆந்த்ரப்ரனார் அவார்டு’ம், முருகப்பா குழுமத்தின் சேர்மன் எம்.எம்.முருகப்பனுக்கு ‘லைஃப் டைம் அச்சீவ்மென்ட் அவார்டு’ம் வழங்கப்பட்டன.

தொழில்முனைவோர்களைப் பாராட்டும்விதமாக அமைந்திருந்தது ‘பிசினஸ் ஸ்டார் அவார்டு’ நிகழ்ச்சி!

லீமாவை இப்படித்தான் ஜெயிக்க வைத்தோம்!