பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

ஒரே பதவி - ஒரே பென்ஷன்! ராணுவ பென்ஷனர்களுக்கு மட்டும்தானா, மற்ற ஊழியர்களுக்குக் கிடையாதா?

ஒரே பதவி - ஒரே பென்ஷன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரே பதவி - ஒரே பென்ஷன்

ஒரே பதவி - ஒரே பென்ஷன்

ஒரே பதவி - ஒரே பென்ஷன்ஒரே பதவி - ஒரே பென்ஷன் நடைமுறையை அங்கீகரித்து முதல்முறை யாக, 01.07.2014 அன்று ராணுவ பென்ஷனர் களின் பென்ஷன் - குடும்ப பென்ஷனை உயர்த்தி வழங்கியது மத்திய அரசு. தற்போது இரண்டாவது தடவையாக 01.07.2019 முதல் மீண்டும் பென்ஷனை உயர்த்தி 23.12.2022 அன்று ஆணை வெளியிட்டுள்ளது. ரூ.23,638 கோடி நிலுவைத் தொகையும் வழங்கப்பட உள்ளது. இதனால் 25.19 லட்சம் பென்ஷனர்- குடும்ப பென்ஷனர் பயன் பெற உள்ளனர்.

ப.முகைதீன் ஷேக் தாவூது
ப.முகைதீன் ஷேக் தாவூது

ஒரே பதவி - ஒரே பென்ஷன்...

இன்றைய தேதியில் பணியில் சேருவோரில், ராணுவத்தினர் மட்டுமே ‘பழைய பென்ஷன்’ பெறத் தகுதியுடையவர்களாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் ஓய்வு பெறும்போது, பென்ஷன் உள்ளிட்ட ஓய்வுக்கால பணப்பலன்களைப் பெறுவார்கள். இதில் ‘ஒரே பதவி - ஒரே பென்ஷன்’ என்பது என்ன என்கிற கேள்வி பரவலாக எல்லோருக்குமே இருக்கிறது. முதலில் ‘ஒரே பதவி - ஒரே பென்ஷன்’ பற்றி விளக்க மாகத் தெரிந்துகொள்வோம்.

சம்பள கமிஷன்...

10 வருடங்களுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது. வாழ்வாதார நிலைகளைப் பரிசீலித்து சம்பள உயர்வுக்கு பரிந்துரை செய்கிறது. அரசு ஊழியர் - ஆசிரியர்களுடன் ராணுவத்தினரும் சம்பள கமிஷன் பரிந்துரைப்படி பணப்பலன் பெறுகின்றனர்.

பணியில் உள்ளவர்களுக்குத் தரப்படுவது போலவே ஓய்வு பெற்ற வர்களுக்கும் சம்பள கமிஷன் பரிந்துரை அமலாக்கம் பெறுகிறது. இங்கேதான் முளைத்தது முரண். பிறந்தது ஒரே பதவி -ஒரே பென்ஷன் கோரிக்கை. ஓர் உதாரணம் மூலம் இதைப் பார்க்கலாம்.

தமிழக வட்டாட்சியர்...

வருவாய் துறையில் துணை வட்டாட்சியராக இருப்பவர்தான் பதவி உயர்வில் வட்டாட்சியர் ஆகிறார். 01.01.1996-ல் அமையப் பெற்ற 5-வது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, வட்டாட்சியர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் 6,500 ரூபாய். அடுத்து வருகிறது 6-வது சம்பள கமிஷன். அதன்படி வட்டாட்சியர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட அடிப்படைச் சம்பளம் 7500 + 4900 = 12,400 ரூபாய்.

தொடர்ந்து வருகிறது 7-வது சம்பள கமிஷன். இதன் பரிந்துரைப்படி, வட்டாட்சியர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் ரூ.37,700 பென்ஷன் 30 ஆண்டு பணி நிறைவு செய்திருந் தால் ஓய்வு பெறும்போது பெற்றிருந்த அடிப்படை சம்பளத்தில் 50% பென்ஷனாக இருக்கும். அல்லது ஒரு பதவிக்கான குறைந்தபட்ச சம்பளத்தில் 50% பென்ஷனாகத் தரப்பட வேண்டும் என்பது விதி.

இந்த விதியின்படி, 5-வது சம்பள கமிஷன்படி ஓய்வு பெற்ற வட்டாட்சியர், தனது குறைந்தபட்ச சம்பளமான 6,500 ரூபாயுடன் ஓய்வு பெற்றிருக்கும்பட்சத்தில் 3,250 ரூபாயை பென்ஷனாகப் பெற்றிருந்திருப்பார்.

6-வது சம்பள கமிஷன் அமலாக்கம் பெற்ற 1.1.2006-ல் அப்போதைய வட்டாட்சியரின் குறைந்தபட்ச சம்பளமான ரூ.12,400-ல் 50% என்ற கணக்கில் 7,200 ரூபாய் பென்ஷனும், 7-வது சம்பள கமிஷன் அமலாக்கம் பெற்ற 1.1.2016-ல் ரூ.37,700-ல் 50% தொகையான 18,850 ரூபாய்க்கு குறையாமலும் பென்ஷன் தருவதுதானே நியாயம்?

இதுதான் ஒரே பதவி - ஒரே பென்ஷன் கோரிக்கையின் அடிப்படை. அதாவது, தாங்கள் ஓய்வு பெற்ற பிறகு, ஓய்வு பெறுகிற அல்லது பெறப்போகிற ராணுவப் பணியினர் எவ்வளவு பென்ஷன் பெறுவாரோ, அதே பென்ஷன் தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் முன்பே ஓய்வு பெற்ற ராணுவப் பணியினரின் கோரிக்கை.

ஒரே பதவி - ஒரே பென்ஷன்! ராணுவ பென்ஷனர்களுக்கு மட்டும்தானா, மற்ற ஊழியர்களுக்குக் கிடையாதா?

கோரிக்கை ஏற்பு...

ராணுவ பென்ஷனர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது மத்திய அரசு. 2013-ம் ஆண்டை அடிப்படை (Base) ஆண்டாக வைத்துக்கொண்டு, 30.06.2014 வரை ஓய்வு பெற்ற ராணுவப் பணியினருக்கு 01.07.2014 முதல் ஒரே பதவி - ஒரே பென்ஷன் திட்டத்தை அமலாக்கம் செய்தது. பதவிக்கு ஏற்பவும், பதவிக் காலத்துக்கு (Length of Service) ஏற்பவும், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச சராசரியின்படி பென்ஷனை உயர்த்தியது.

5 ஆண்டுக்கு ஒருமுறை...

10 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள கமிஷன் பரிந்துரைக்கும் பென்ஷன் உயர்வுடன் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஒரே பதவி-ஒரே பென்ஷன் நடைமுறையை அமலாக்கம் செய்ய ஆணையிட்டது.

வழக்கு தொடரப்பட்டது ஏன்?

மேற்கண்ட ஒரே பதவி – ஒரே பென்ஷன் திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. அதாவது, 5 ஆண்டுக்கு ஒருமுறை பென்ஷனை உயர்த்தாமல் தாமாகவே (Automatic Revision) பென்ஷன் சீரமைக்கப்பட வேண்டும்; அடிப்படை ஆண்டு 2013 என எடுத்துக்கொண்டு பென்ஷன் உயர்த்தப்படுவதால், 1.5 ஊதிய உயர்வு (One and half annual Increment) குறைகிறது என்ற அடிப்படையில் இந்தியன் எக்ஸ் சர்வீஸ்மேன் மூவ்மென்ட் 2016-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் மத்திய அரசின் நடைமுறை எந்த வகையிலும் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இல்லை எனக் கடந்த 16.03.2022 அன்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து 30.06.2019 வரை ஓய்வு பெற்ற ராணுவத்தினர் மற்றும் இறந்து பட்ட ராணுவத்தினரின் குடும்பத் துக்கு உயர்த்தப்பட்ட பென்ஷனை அறிவித்துள்ளது, மத்திய அரசு. (அட்டவணையில் விரிவாகத் தரப்பட்டுள்ளது).

ஒரே பதவி - ஒரே பென்ஷன்! ராணுவ பென்ஷனர்களுக்கு மட்டும்தானா, மற்ற ஊழியர்களுக்குக் கிடையாதா?

நிலுவை...

ஜூலை 2019-ம் ஆண்டு முதல் ஜூன் 2022 ஆண்டு வரையான நிலுவைத் தொகை ரூ.23,638 கோடி என மதிப்பிடப் பட்டுள்ளது. அதாவது, பென்ஷன் மற்றும் குடும்ப பென்ஷனுக்கு 31% அகவிலைப்படி கணக்கீட்டின் படியான மதிப்பீடு இது. 34% அகவிலைப்படியைக் கணக்கிடப் பட்டால் நிலுவைக்கான செலவு மதிப்பீடு அதிகரிக்கக்கூடும்.

யார் யாருக்கு நிலுவை?

சிப்பாய் (sepoy) முதல் நாயக், ஹவில்தார், நயிப் சுபேதார், சப் மேஜர், மேஜர், லெவ்டினன்ட் காலனல், காலனல், பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெவ்டினன்ட் ஜெனரல் ஆகிய அனைத்துப் பதவிகளுக்கும் பென்ஷன் உயர்த் தப்பட்டுள்ளது. போர் விதவைகள் உள்ளிட்ட குடும்ப பென்ஷனர் களின் பென்ஷனும் உயர்த்தப் படுகிறது. நிலுவையும் வழங்கப்பட உள்ளது.

ஆறு மாதத்துக்கு ஒரு முறை என்ற இடைவெளியில் நான்கு தவணைகளில் நிலுவை வழங்கப் படுகிறது. குடும்ப பென்ஷனர்கள், ஸ்பெஷல் மற்றும் தாராளமாக்கப் பட்ட பென்ஷன் பெறுவோர்களுக்கு ஒரே தவணையில் நிலுவை வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

யாருக்குப் பொருந்தாது?

வயது முதிர்வில் ஓய்வு பெறாமல் முன்கூட்டியே ஓய்வு பெற்ற (Premature Retired) பென்ஷனர்களுக்கு இப்போதைய உயர்வு பொருந்தாது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு..?

ஒரே பதவி - ஒரே பென்ஷன் எனும் ‘மேம்பட்ட’ பென்ஷன் நடைமுறை ராணுவப் பணியினருக்கு மட்டுமே அமலில் உள்ளது. இதே போன்ற சலுகையை முந்தைய பத்திகளில் நாம் உதாரணமாகக் காட்டப்பட்ட வட்டாட்சியரும் பெறலாம்.

எப்படியெனில், ஒவ்வொரு சம்பள கமிஷனிலும் நிர்ணயிக்கப்படும் தனது பதவிக்கான குறைந்தபட்ச சம்பளத்தில் 50 சதவிகிதத்துக்கும் குறைவாக சம்பள கமிஷன் மூலம் நிர்ணயிக்கப்படும் தனது பென்ஷன் இருந்தால், சம்பள கமிஷன் நிர்ணயித்த சம்பளத்தில் 50% தொகையை பென்ஷனாகப் பெறலாம். ஒவ்வொரு சம்பள கமிஷனிலும் இச்சலுகை கிடைக்கும். ஆனால், ஒரு நிபந்தனை என்னவெனில், பணிக்காலம் 30 வருடத் துக்குக் குறையக் கூடாது.

இதைவிடவும் மேம்பட்டது ராணுவத்தினருக்கான ஒரே பதவி - ஒரே பென்ஷன் சீரமைப்பு ஆகும்.