என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

ஒரு கம்யூட்டர் டு பல லட்சம் வருமானம்! - பிரின்டிங் தொழிலில் அசத்தும் மீனாட்சி

மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மீனாட்சி

#Motivation

“சின்ன வயசுல ஸ்லோகங்கள், பக்திப் பாடல்களை ஆர்வமா கத்துகிட்டேன். அப்போ, பூஜைப் பொருள்களை விற்பனை செய்துட்டு இருந்தார் என் அப்பா. அவருடைய கடைக்கு வரும் வெளிநாட்டினர் தமிழ், சம்ஸ்கிருதத்துல இருக்கும் பக்திப் புத்தகங்களை ஆங்கிலத்துல எதிர்பார்த்தாங்க. இந்த விஷயம் என் மனசுல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவே, இதையே பிற்காலத்துல பிசினஸ் வாய்ப்பா மாத்தினேன். பக்திப் புத்தகங்களை ஆங்கிலத்துல மொழி பெயர்க்க ஆரம்பிச்சு, படிப்படியா வளர்ந்து எனக்குனு ஓர் அடையாளத்தையும் பெற்றேன்”

- தனது தொழில் பயணத்தின் தொடக்கக் கால நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்கிறார் மீனாட்சி. பிரபல ‘கிரி டிரேடிங்’ நிறுவனத்தின் நிறுவனர் கிரியின் மகள்.

“எங்களுடையது மும்பை வாழ் தமிழ்க் குடும்பம். 1950-கள்ல மும்பை மாட்டுங்கா பகுதியில பூஜைப் பொருள்கள் விற்பனைக்குனு சின்னதா ஒரு கடை ஆரம்பிச்சார் அப்பா. 25 வருஷங்களுக்குப் பிறகு, சென்னையில குடியேறிய பெற்றோர், அதே மாதிரியான கடையை மயிலாப்பூர்லயும் தொடங்கினாங்க. மும்பையில் இருந்த கடையை நானும் என்னோட சகோதரர்கள் சிலரும் கவனிச்சு கிட்டோம். சட்டப்படிப்பு முடிச்சேன். காதல் கல்யாணம் முடிஞ்சு, 1990-கள்ல சென்னையில் குடியேறினோம்.

ஒரு கம்யூட்டர் டு பல லட்சம் வருமானம்! - பிரின்டிங் தொழிலில் அசத்தும் மீனாட்சி

வாழ்க்கையில ஜெயிக்கணும்னு பெரிய இலக்கு வெச்சிருந்தோம். கணவர் சின்னதா டிரான்ஸ்போர்ட் பிசினஸ் தொடங்கினார். தனியார் நிறுவன வேலையை விட்டுட்டு, நானும் தொழில்முனைவோரா மாறினேன். பாரிஸ் கார்னர்ல பெண்களுக்கான பல வகையான துணிகளையும் வாங்கி, வீடுதோறும் விற்பனை செஞ்சேன். கூடவே, டப்பர்வேர் டப்பாக்கள் விற்பனை, எல்.ஐ.சி ஏஜென்ட்னு ஒரே நேரத்துல பல தொழில்கள் செஞ்சு வருமானம் ஈட்டினேன். நேரம் கிடைக்கிறப்போ அப்பாவின் கடையிலயும் வேலை செய்வேன். அப்பதான் வெளிநாட்டினரின் தேவைக்கு உதவலாம்னு மொழிபெயர்ப்பு வேலையில இறங்கினேன். பேங்க்ல லோன் வாங்கி ஒரு கம்ப்யூட்டரும் பிரின்டரும் வாங்கினேன். சரியான பப்ளிஷர்ஸ் கிடைக்கல. ஆனாலும், தமிழ் மற்றும் சம்ஸ்கிருதத்துல இருக்கிற பக்திப் பாடல்கள், ஸ்லோகங்களை இங்கிலீஷ்ல மொழிபெயர்க்கிற வேலையை வீட்டில் இருந்தபடியே ஒன்றரை வருஷம் செஞ்சேன்”

- நம்பிக்கையுடன் உழைத்தவருக்கு, அப்பாவின் நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

“அந்த 1990-கள்ல அப்பாவின் ‘கிரி டிரேடிங்’ கம்பெனி பிரபலமாச்சு. அந்த கம்பெனி மூலமா, நான் மொழிபெயர்ப்பு செஞ்சு வெச்சிருந்த ஸ்லோகங்களைப் புத்தகமாவும், சிடிக்களாகவும் வெளியிட்டோம். அப்பாவின் கம்பெனியில பப்ளிகேஷன் நிர்வாகியானேன். டிசைனிங் முதல் லே அவுட் வரை எல்லா வேலைகளையும் கவனிச்சுகிட்டேன். அடுத்த பத்து வருஷங்கள்ல 400-க்கும் அதிகமான புத்தகங்களை வெளியிட்டேன். நிறைவான வருமானமும் கிடைச்சது. இதுக்கிடையே, ‘எம்.பி பப்ளிஷர்ஸ்’னு தனியாவும் ஒரு கம்பெனியை நடத்தினேன்.

ஒரு கம்யூட்டர் டு பல லட்சம் வருமானம்! - பிரின்டிங் தொழிலில் அசத்தும் மீனாட்சி

கால மாற்றத்துனால பல்வேறு சிரமங் களுக்கு இடையே இப்பவும் அந்த நிறுவனத்தை நடத்திட்டிருக்கேன். வாசிப்புப் பழக்கம் இருக்கிற வரை கமர்ஷியல் மற்றும் பாடப் புத்தகங்களுக்கான வரவேற்பு குறையாது. அதனால, பிரின்டிங் பிரஸ் கம்பெனி ஆரம்பிச்சேன். பல நிறுவனங்களுக்கான ஆவணங்கள், புக்ஸ்,

டைரீஸ் உட்பட பலதரப் பட்ட பொருள்களையும் தயாரிக்கிறோம். மாசத்துக்கு சில லட்சம் ரூபாய் வர்த்தகம் நடக்கும் இந்த கம்பெனியை, அடுத்த வருஷத்துக்குள்ள பல மடங்கு வளர்ச்சிக்குக் கொண்டுபோகும் வேலை களைச் செய்துட்டு இருக் கேன்.

அப்பா தொடங்கிய கம்பெனியில நான் உட்பட என்னோட சகோதர, சகோதரிகள் ஆறு பேர் இப்போ இயக்குநர்களா இருக்கோம். அதில் சட்ட ஆலோசகராவும் இருக்கேன். அந்த கம்பெனி இப்பவும் வளர்ச்சிப் பாதையில் போற தோடு, அதுல வருஷத்துக்கு பல கோடி ரூபாய் வர்த்தகம் நடக்குது. நம்ம இலக்குல உறுதியும் தடைகளைக் கடந்து போகும் பக்குவமும் இருந்தா, நிச்சயம் ஒருநாள் ஜெயிப்போம்”

- நம்பிக்கையூட்டி முடிக் கும் மீனாட்சி, மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றம் மற்றும் பெண் தொழில் முனைவோர்களை உருவாக் கும் முயற்சிகளை சேவை நோக்கத்தில் செய்து வருகிறார்.