நடப்பு
Published:Updated:

ரியல் எஸ்டேட் - ஒழுங்குமுறை ஆணைய மசோதா..!

தடைகளைத் தாண்டுமா? சி.சரவணன்

 ##~##

வரும்... ஆனா, வராது..! என்கிற காமெடி வசனம் மாதிரி ஆகிவிட்டது இந்திய ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய (ரெகுலேட்டரி அத்தாரிட்டி) மசோதா. இந்த மசோதா வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என மத்திய வீட்டு வசதி மற்றும் வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் அஜய் மாகேன் சொன்னதைத் தொடர்ந்து ரியல் எஸ்டேட் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்றாலும், இந்த மசோதாவுக்கு நாடாளு மன்றத்தில் ஒப்புதல் கிடைக்குமா என்பது சந்தேகமே என்கிறார்கள் விஷயம் தெரிந்த ரியல் எஸ்டேட் நிபுணர்கள். காரணம், பெரும்பாலான ரியல் எஸ்டேட் அமைப்புகள், இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் பல ஷரத்துகளை எதிர்த்து வருகின்றன. இதற்கிடையில், மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் கமல்நாத், தன் அமைச்சகத்திடம் ஆலோசனை கேட்காமலே மசோதாவின் ஷரத்துகள் அனைவருக்கும் அனுப்பப்பட்டு இருப்பதாக வீட்டு வசதி அமைச்சகத்தின் மீது புகார் சொல்ல, இரு துறை அமைச்சர்களையும் அழைத்து சமாதானம் செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங்.

ரியல் எஸ்டேட் - ஒழுங்குமுறை ஆணைய மசோதா..!

இந்நிலையில், மாகேன், கமல்நாத் மற்றும் நான்கு முன்னணி ரியல் எஸ்டேட் கூட்டமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரைக்கொண்ட கூட்டம் சமீபத்தில் நடந்தது.    

பல விஷயங்கள் நடைமுறைக்குச் சாத்திய மில்லாததாக இருக்கிறது. மேலும், இந்த மசோதா, சொத்து வாங்குபவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது’ என கிரெடாய் உள்ளிட்ட இந்திய அளவிலான ரியல் எஸ்டேட் கூட்டமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

ரியல் எஸ்டேட் - ஒழுங்குமுறை ஆணைய மசோதா..!

மும்பையைச் சேர்ந்த முன்னணி சொத்து ஆலோசனை நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவருடன் பேசினோம். ''இந்திய ரியல் எஸ்டேட் துறையில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவர்களுக்குப் பாதகமான இந்த ஒழுங்குமுறை ஆணையத்தை பல ஆண்டுகளாகக் கொண்டுவரவிடாமல் தடுத்து வருகின்றனர்'' என்றார்.

வரும், ஆனா வராது என்பது இந்த முறையும் உண்மையாகிவிடுமோ என்னவோ?