நடப்பு
தொடர்கள்
பங்குச் சந்தை
Published:Updated:

பிளாக்செயின் டோக்கனைஷேசன்... ரியல் எஸ்டேட்டில் என்ன மாற்றங்களைக் கொண்டுவரும்?

லட்சுமி நாராயணன்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி நாராயணன்

அமெரிக்க ஹோட்டல்களின் பகுதி உரிமையை வாங்கி லாபம் பார்க்க நினைக்கும் எல்லா முதலீட்டாளர்களுக்கும் இது புதிய வாய்ப்பாகும்...

காக்குஷன்

பிளாக்செயின் தொழில் நுட்பம் உலக அளவில் பல்வேறு தொழில்களில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துகொண்டிருக் கிறது. உலக அளவில் தங்கும் விடுதி அறைகளை ‘பிளாக் செயின் டோக்கனைஷேசன்’ (Blockchain Tokenisation) தொழில்நுட்பத்தின் மூலம் ‘புக்’ செய்வது நடைமுறைக்கு வந்ததன் விளைவாக, ரியல் எஸ்டேட் துறை மாபெரும் மாற்றம் கண்டுவருகிறது.

ஹோட்டல் அறைகளை நேரடியாக வாங்காமல், ‘பிளாக்செயின் டோக்கன்’ வாயிலாக வாங்குவதால், அந்த அறைகளினால் கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதி மூலம், ‘டோக்கன்’ வைத்திருப்பவர்கள் பயன் பெறலாம். பிற்பாடு, அந்த ‘டோக்கன்’களை வேறு ஒருவருக்கு விற்க வேண்டும் எனில், எளிதாக விற்கவும் முடியும். இதனால், ரியல் எஸ்டேட் துறை சார்ந்த சொத்துகளை விற்பதில் உள்ள செலவுகள் கணிசமாகக் குறையும். அமெரிக்காவில் நடைமுறையில் இருக்கும் இந்தத் தொழில்நுட்பம், இன்னும் சில ஆண்டுகளில் இந்தியாவுக்கும் வரும்!

ரியல் எஸ்டேட் துறையில் ‘பிளாக்செயின் டோக்கனை சேஷன்’ தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி, பிரபல மாக்குவதில் முன்னணியில் இருக்கிறது கிரேட் எக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான லட்சுமி நாராயணன். அமெரிக்காவில் வசிக்கும் அவர், நமக்கு அளித்த பேட்டி இனி...

லட்சுமி நாராயணன்
லட்சுமி நாராயணன்

முதலீட்டு நோக்கில் ரியல் எஸ்டேட் துறைக்கு உள்ள சிறப்புகள் என்ன?

‘‘ரியல் எஸ்டேட் சொத்து உறுதியானது. அதை முதலீட் டாளர்களால் தொட்டு உணரவும், பார்க்கவும் முடி யும். பங்குகள், பத்திரங்கள் அல்லது இதர நிதி ஆவ ணங்கள் மாதிரி இல்லாமல், ரியல் எஸ்டேட் முதலீட் டாளர்கள் அவர்களது முதலீடுகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியும். தவிர, அதை மேம்படுத்தி மதிப்பை அதிகரிக்க முடியும். மேலும், வாடகை மூலம் நிலையான வருமானம் முதலீட்டாளர் களுக்குக் கிடைக்கும். எல்லா வற்றுக்கும் மேலாக, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும் முதலீட்டாளரின் மதிப்பு பல மடங்கு உயரும்.’’

ஹோட்டல் தொழிலில் ‘பிளாக் செயின் டோக்கனைசேஷன்’ தொழில்நுட்பத்தின் வருகையால் முதலீட்டாளர்களுக்கு என்ன நன்மை?

‘‘திடமான பொருளாதார வளர்ச்சி, நிலையான சட்ட நடைமுறைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்கள் ஆகிய வற்றுடன், தொழில் துறை வளர்ச்சியைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் முதலீட் டாளர்களுக்கு ‘பிளாக்செயின் டோக்கனை சேஷன்’ தொழில்நுட்பம் நல்லதொரு வாய்ப்பை அளிக்கிறது. அமெரிக்க ஹோட்டல்களின் பகுதி உரிமையை வாங்கி லாபம் பார்க்க நினைக்கும் எல்லா முதலீட் டாளர்களுக்கும் இது புதிய வாய்ப்பாகும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறைந்த முதலீட்டு வரம்புடன் ஹோட்டல்களில் முதலீடு செய்ய முடி வதுடன், அவர்களின் ரிஸ்க்கையும் குறைக்க உதவும்.’’

விருந்தோம்பல் துறையில் (Hospitality Sector) ‘பிளாக் செயின் டோக்கனைசேஷன்’ என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

‘‘இந்தத் தொழில்நுட்பத்தின்மூலம் அமெரிக்க விருந்தோம்பல் துறையை இந்திய முதலீட்டாளர்கள் எளிதில் அணுகும் நிலை உருவாகும். இந்தத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க இந்தத் தொழில்நுட்பம் வழிவகுக்கும். ஆண்டுதோறும் 15% முதல் 20% வரை நிலையான நிகர லாபம் அளிக்கிறது. இந்தப் பிரிவு ஹோட்டல்களில் நிலையான மற்றும் அதிகமான வருமானம் கிடைக்கிறது. மேலும், கடந்த 20 ஆண்டு களாக ஏற்ற இறக்கத்துடன் கூடிய சராசரி விலையுடன், நீண்ட கால நிலைத்தன்மையுடன் இந்த துறை உள்ளது.

ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹோட்டல் நடத்துபவர்கள் ‘டோக்கனைசேஷன்’ மூலம் நிதி திரட்டுவதை சிறப்பாகச் செய்ய முடியும். தவிர, இடைத்தரகர்களின் தேவையை எதிர்பார்த்து நிற்க வேண்டிய அவசியம் இல்லை. ‘பிளாக்செயின்’ தொழில்நுட்பம் மூலம் முதலீடு எப்படிச் செயல்படு கிறது என்பது வெளிப்படைத்தன்மையுடன் அமையும். இதன்மூலம் முதலீட்டாளர்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் / நடத்துவோர் இடையே உள்ள உறவு சிறப்பாக அமையும்.’’

அமெரிக்க வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகளால் இந்திய நிதிச் சூழல் எவ்வாறு பாதிப்படைந்து இருக்கிறது?

‘‘அமெரிக்காவில் வங்கிகள் அதிக வட்டி விகிதத்தில் கடன் வழங்குவதில் எச்சரிக்கையாக இருப்பதால், கவனத்துடன் பார்க்கும் நிலை உள்ளது. தொடக்க நிலை மற்றும் வென்ச்சர் கேப்பிடல் முதலீடுகள் அடுத்த ஆறு மாதங்களில் சில தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, நீண்டகால நோக்கில் மாற்றம் ஏதும் வரும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.’’