
ஓய்வூதியம்
தமிழக அரசு, 58 என்றிருந்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை, 59 என உயர்த்தி கடந்த மே 2020-ல் ஆணையிட்ட அரசு, மீண்டும் கடந்த பிப்ரவரி 2021-ல் 60 வயதில்தான் ஓய்வு என நிர்ணயித்துவிட்டது. இதன் விளை வாக, 31.05.2020-ல் ஓய்வுபெற இருந்த ஊழியர்கள் 31.05.2022 முதல் ஓய்வு பெறத் தொடங்குவார்கள்.

இப்படி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு மாதாந்தர ஓய்வூதியம், ஓய்வூதிய கம்யூடேசன், பொது வருங்கால வைப்பு நிதி (ஜி.பி.எஃப்), பணிக்கொடை (கிராஜிவிட்டி), விடுப்புக்கான சம்பளம் (Terminal Leave Salary), சிறப்பு வருங் கால வைப்பு நிதி (எஸ்.பி.எஃப்) சொந்த ஊர் செல்ல பயணப்படி முதலானவை ஓய்வுக்காலப் பணப்பலன்களாகக் கிடைக்கும். ஆனால், இவை அனைத்தும் பழைய பென்ஷன் திட்டம் சார்ந்தவர்களுக்கானவை.
இவற்றில் மாத ஓய்வூதியம், ஓய்வூதிய கம்யூடேசன், ஜி.பி.எஃப், பணிக்கொடை ஆகிய நான்கும் மாநிலக் கணக்காயர் (Account general) ஏற்பளிப்பு செய்த பிறகுதான் தரப்படும். இவற்றைத் தாமதமின்றி பெற முன்னதாகவே விண்ணப்பிப்பது அவசியம். அதாவது, ஓய்வு பெற நான்கு மாதம் முன்பாகவே ஓய்வுபெறும் ஒருவர் தனது ஓய்வுக்கால பணப்பலன் விண்ணப்பத்தை, தான் பணிபுரியும் அலுவல கத் தலைவரிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். அடுத்த ஆண்டு மே மாதத்துக்கு நான்கு மாதங் களே இருப்பதால், ஓய்வுக்காலப் பணப்பலன் பெறும் விண்ணப்பத்தை உடனே அலுவலகத் தலைவரிடம் சமர்ப்பிப்பது நல்லது.

தற்போது ஓய்வுக்காலப் பணப்பலன் கோரும் விண்ணப்ப முறை, ஓய்வு பெற்றதும் பணம் பெறும் முறை ஆகிய இரண்டு முக்கிய அம்சங்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதாவது, ஓய்வூதியம், ஓய்வூதிய கம்யூடேசன், பணிக்கொடை (கிராஜிவிட்டி) ஆகிய மூன்றுக் கும் ஒரு விண்ணப்பத்திலும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு (ஜி.பி.எஃப்) மற்றொரு விண்ணப்பத்திலும் தனித்தனியே விண்ணப் பிக்க வேண்டும்.
இதேபோல், பணம் வழங்கும் நடைமுறையும் மாற்றப்பட்டுள்ளது. முந்தைய நடைமுறைப் படி ஓய்வூதியம், ஓய்வூதிய கம்யூடேசன் ஆகிய இரண்டையும், ஓய்வு பெற்றவர், நேரடியாகக் கருவூலம் சென்று பெற்றுக்கொள்ளலாம். ஜி.பி.எஃப், பணிக்கொடை ஆகிய இரண்டை யும், ஊழியர் கடைசியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலகத்தின் அதிகாரி கருவூலத் திலிருந்து வரைவு செய்து வழங்குவார். புதிய நடைமுறைப்படி ஓய்வூதியம், கம்யூடேசன், ஜி.பி.எஃப், பணிக்கொடை ஆகிய அனைத் தையும் நேரடியாகக் கருவூலம் சென்று, ஓய்வு பெற்றவர் வாங்கிக்கொள்ளலாம்.
இந்த வேலைகளைச் செய்யும்முன், பணிப் பதிவேட்டில் படிவம்-3 என்று குறிப்பிடப் பட்டுள்ள பக்கத்தில் உள்ள குடும்ப உறுப்பினர் விவரங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதாவது, மணமாகாதவர் மணமானபின்னும், குழந்தை பிறந்த பின்னும் ஒவ்வொரு முறையும் பிறப்பு-இறப்புகளை அப்டேட் செய்வது கட்டாயம். ஏனெனில், பணிப் பதிவேட்டில் உள்ளபடி தான் படிவம்-3-ஐ நகல் எடுத்து ஓய்வுக்காலப் பலனுக்கான விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும். பணிப் பதிவேட்டு விவரமும், இணைக்கப்பட்ட படிவத்தில் உள்ள குடும்ப விவரமும் வேறுபட்டிருந்தால், விண்ணப்பம் திருப்பி அனுப்பப்படலாம். இதனால் பணப் பலன் பெறுவது தாமதமாகலாம். அதிலும் குறிப்பாக, மறுமணம், விவாகரத்து, மனைவி இறந்துபோதல் முதலான நிகழ்வுகளை அப்டேட் செய்வது மிகவும் அவசியம். முதல் மனைவி இறந்ததற்கான இறப்புச்சான்று, விவாகரத்துக்கான நீதிமன்ற ஆணை முதலான வற்றின் நகல்களும் (புதிய முறைப்படி) விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
மூளை வளர்ச்சி இல்லாத மற்றும் உடல் இயக்கம் அற்றுப்போன பிள்ளைகள் இருப்பின் அதன் விவரம் மேற்கண்ட படிவம் 3-ல் குறிப்பிடப்படுவதுடன், குடியியல் மருத்துவர் (Civil surgeon) ஒருவரிடமிருந்து பெற்ற சான்றிதழ் ஒன்றையும் இணைத்துவிடலாம். மணமாகாத/ விதவையான/ விவாகரத்து பெற்ற பெண்கள் ஊழியரைச் சார்ந்து இருக்குமாயின் அவர் களையும் குடும்ப உறுப்பினர்களாகக் குறிப் பிடலாம். திருநங்கையும் இந்த வகையில் அடங்குவர். தத்தெடுத்த குழந்தைகளுக்குத் தத்துப்பத்திரம் (Adoption deed) அவசியம். மனைவி / கணவர் உட்பட அனைவருக்கும் வயதுக்கான ஆவணமும் முக்கியம். எல்லா வற்றுக்கும் மேலாக, நாமினேஷன் தொடர் பான விவரங்களைத் தெளிவாக வைத்திருப்பது அவசியம்.
ஓய்வு பெறுபவர் அதற்கான விண்ணப் பத்தை அவரே பூர்த்தி செய்து உரிய தலைமை அதிகாரியிடம் தருவது நல்லது. அதாவது, ஓய்வூதியம் மற்றும் சம்பள அரியர்ஸ், கம்யூடேசன், பணிக்கொடை ஆகியவற்றுடன் ஜி.பி.எஃப்-புக்கும் நாமினேஷன் படிவங்களை விண்ணப்பத்துடன் இணைத்தால், ஓய்வுக்கால பணப் பலன்களைப் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்காது! 2022-ல் ஓய்வுபெறும் தமிழக அரசு ஊழியர்கள்..
உடனடியாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள்! ஓய்வு பெறுபவர் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தலைமை அதிகாரியிடம் தருவது நல்லது. ஓய்வூதியம் மற்றும் சம்பள அரியர்ஸ், கம்யூடேசன், பணிக்கொடை ஆகியவற்றுடன் ஜி.பி.எஃப்-புக்கும் நாமினேஷன் படிவங்களை விண்ணப்பத்துடன் இணைத்தால், ஓய்வுக்கால பணப் பலன்களைப் பெறுவதில் சிக்கல் இருக்காது!