பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

ஓய்வுக்காலம்... சரியான முதலீடுகள் என்னென்ன?

ஓய்வுக்காலம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஓய்வுக்காலம்

ஒளிமயமான ஓய்வுக்காலம்! சூப்பர் பிளானிங் 8

ஓய்வுக்காலத்துக்கான முதலீட்டுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. ஒருவர் பணி ஓய்வுக்கான முதலீட்டை இன்னும் ஆரம்பிக்க வில்லை எனில், அவர் பணி ஓய்வு பெற இன்னும் எத்தனை ஆண்டுகள் இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவருக்கான ஓய்வுக் கால முதலீட்டுத் திட்டத்தை அவர் தேர்வு செய்துகொள்ளலாம்.

என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், 
https://www.vbuildwealth.com/
என்.விஜயகுமார், நிதி ஆலோசகர், https://www.vbuildwealth.com/

ஓய்வுக்கால முதலீடும் கால வரம்பும்...

பணி ஓய்வுக்காலத்துக்கு இன்னும் ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகள்தான் இருக்கின்றன. இனிமேல்தான் முதலீட்டை ஆரம்பிக்க வேண்டும் எனில், கடன் சந்தை திட்டங்களில் தான் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.அதாவது, வங்கி தொடர் வைப்புத் திட்டம் (RD), ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் கடன் மியூச்சுவல் ஃபண்டுகள் (அல்ட்ரா ஷார்ட் டேர்ம் மற்றும் லோ டூரேஷன் ஃபண்ட்) போன்ற ரிஸ்க் இல்லாத திட்டங்களில்தான் முதலீடு செய்து வர வேண்டும். முதலீட்டுக் காலம் சுமார் இரண்டு முதல் மூன்று ஆண்டாக இருக்கும்பட்சத்தில், கில்ட் இண்டெக்ஸ் பாண்ட் ஃபண்ட் மற்றும் ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

இந்த ஃபண்டுகள் மூலம் ஆண்டுக்கு 7 - 8% வருமானம் எதிர்பார்க்கலாம். ஈக்விட்டி சேவிங்ஸ் ஃபண்டில் முதலீடு ஓராண்டைத் தாண்டி இருக்கும்பட்சத்தில் அதற்கு ஈக்விட்டி ஃபண்டுக்குரிய வரி விதிப்புதான் இருக்கும் என்பதால், வரிக்குப் பிந்தைய நிலையில் ஃபிக்ஸட் டெபாசிட்டைவிட அதிக வருமானம் கிடைக்கக்கூடும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய எஸ்.ஐ.பி முறையைப் பயன்படுத்த வேண்டும். இந்த முதலீடுகள் மூலம் சுமார் 5% வருமானம் தான் எதிர்பார்க்க முடியும். அதனால், முதலீடு செய்ய வேண்டிய தொகை அதிகமாக இருக்கும்.

வேலையிலிருந்து ஓய்வுப்பெற இன்னும் 3 முதல் 8 ஆண்டுகள் இருக்கிறது எனில், சற்று ரிஸ்க்கான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். கலப்பின மியூச்சுவல் ஃபண்டுகள் என்கிற ஹைபிரிட் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். இதே போல, கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட்டுகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு சுமார் 7 - 8% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

முதலீட்டில் சற்றுக் கூடுதல் ரிஸ்க் எடுப்பவர் மற்றும் முதலீட்டுக் காலம் ஐந்தாண்டுகளுக்கு மேல் உள்ளது எனில் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களான லார்ஜ்கேப் ஃபண்ட், மல்ட்டிகேப் ஃபண்ட் மற்றும் ஃபிளெக்ஸி கேப் ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்துவரலாம். இந்த முதலீடுகள் மூலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 10% வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

ஓய்வுக்காலத்துக்கு இன்னும் சுமார் 8 ஆண்டுகள் முதல் 20, 25, 30 ஆண்டுகள் வரை இருக்கிறது எனில், முதலீட்டில் தாராளமாக ரிஸ்க் எடுத்து, நிறுவனப் பங்குகள் மற்றும் பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீட்டை மேற்கொண்டு வரலாம்.

முதலீட்டுக் காலம் 10, 15 ஆண்டுகளாக இருக்கிறது எனில், லார்ஜ்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனப் பங்குகள், லார்ஜ் & மிட்கேப் ஃபண்டுகள், மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம். முதலீட்டுக் காலம் 15, 20, 25, 30 ஆண்டுகள் என இருக்கும்போது, ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள், ஸ்மால்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். அதுவும் முதலீட்டில் அதிக ரிஸ்க் எடுப்பவர்கள்தான். மிட்கேப் பங்குகள், ஃபண்டுகளில் முதலீடு செய்து வர வேண்டும். எக்காரணம் கொண்டும் நிறுவனப் பங்குகள் மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் மொத்த முதலீட்டையும் மேற்கொள்ளக் கூடாது.

அப்படியே மொத்தமாக முதலீடு செய்யக்கூடிய அளவுக்கு அதிக தொகை கைவசம் இருந்தால், அதை லிக்விட் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்துவிட்டு, அதிலிருந்து சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்ஃபர் பிளான் (STP) மூலம் ஈக்விட்டி ஃபண்டுகளுக்கு முதலீட்டை மாற்றுவதன்மூலம் ரிஸ்க்கைக் குறைப்பதுடன் கூடுதல் லாபமும் பெற வாய்ப்பிருக்கிறது.

நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது எனில், லிக்விட் ஃபண்டில் மொத்த தொகையைப் போட்டுவிட்டு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து பங்குகளில் அவ்வப்போது முறையாக முதலீடு செய்துவரலாம்.

ஓய்வுக்காலம்... சரியான  முதலீடுகள் என்னென்ன?

வயதுக்கு ஏற்ற ஓய்வுக்கால முதலீடுகள்...

ஓய்வுக்கால தொகுப்பு நிதிக்கு முதலீடு செய்யும்போது முதலீட்டாளரின் வயதையும் கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். அதற்கேற்ப முதலீட்டுத் தொகையைக் கடன் சந்தை சார்ந்த திட்டங்கள் (ஆர்.டி, ஃபிக்ஸட் டெபாசிட், கடன் ஃபண்டுகள்), பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள் (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்), டிஜிட்டல் தங்கம், ரியல் எஸ்டேட் டிரஸ்ட் இன்வெஸ்ட் மென்ட்ஸ் (REITs) ஆகியவற்றில் பிரித்து முதலீடு செய்ய வேண்டும்.

25 வயது முதல் 35 வயது வரை...

இன்றைய இளைஞர்கள் படிப்பு முடிந்து பொதுவாக 22 - 23 வயதில் வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார்கள். அவர்கள் சுமார் 25 வயதில் பணி ஓய்வுக்கால முதலீட்டுக்கு திட்டமிடுவதாக வைத்துக் கொள்வோம்.

இந்த வயது இளைஞர்கள், ஓய்வுக்கால முதலீட்டுத் தொகையில் சுமார் 60 - 70% தொகையை அவர்களின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கேற்ப நிறுவனப் பங்குகள் மற்றும் டைவர்சிஃபைட் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம். இவர்களுக்கு ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 25 - 35 ஆண்டுகள் என மிக நீண்ட காலம் இருப்பதால், ஈக்விட்டி முதலீட்டுத் தொகை யில் 5 - 10% தொகையை மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் அல்லது மிட்கேப் ஃபண்டுகள் அல்லது ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

மாதச் சம்பளப் பணியில் இருப்பவர்கள் பணியாளர் சேமநல நிதி (EPF) மற்றும் புதிய பென்ஷன் திட்டம் (NPS) ஆகிய வற்றில் 15 - 20% தொகையை முதலீடு செய்து வரலாம். தலா 10% தொகையை டிஜிட்டல் தங்கம் மற்றும் ரெய்ட்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம்.

36 வயது முதல் 45 வயது வரை...

இந்த வயதிலுள்ளவர்கள் முதலீட்டில் ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைக்க வேண்டும். அதனால், அவர்கள் ஓய்வுக் கால முதலீட்டுத் தொகையில் சுமார் 30-35% தொகையை லார்ஜ்கேப் நிறுவனப் பங்கு கள் மற்றும் டைவர் சிஃபைட் ஈக்விட்டி ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்து வர லாம். கிட்டத்தட்ட 30-35% தொகையை கன்சர் வேட்டிவ் மற்றும் அக்ரவ்சிவ் ஹைபிரிட் மியூச்சுவல் ஃபண்டுகளில் சமமாகப் பிரித்து முதலீடு செய்து வரலாம்.

மாதச் சம்பளம் வாங்கும் நிரந்தரப் பணியில் இருப்ப வர்கள் இ.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ் ஆகியவற்றில் 15 - 20% தொகையை முதலீடு செய்துவரலாம். இவர்களும் தலா சுமார் 10% தொகையை டிஜிட்டல் தங்கம் மற்றும் ரெய்ட்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம்.

இவர்களுக்கு ஓய்வுக் காலத்துக்கு இன்னும் 25 - 15 ஆண்டுகள் இருப்பதால், ஈக்விட்டி முதலீட்டுத் தொகை யில் சுமார் 5% தொகையை மிட் மற்றும் ஸ்மால்கேப் நிறுவனப் பங்குகள் அல்லது மிட்கேப் ஃபண்டுகள் அல்லது ஸ்மால் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

46 வயது முதல் 58/60 வயது வரை...

இந்த வயதிலுள்ளவர்கள் முதலீட்டில் ரிஸ்க்கை கணிச மாகக் குறைக்க வேண்டும். அதனால், அவர்கள் தங்கள் ஓய்வுக்கால முதலீட்டுக்கு செய்யும் தொகையில் சுமார் 20-25% தொகையை லார்ஜ் கேப் நிறுவனப் பங்குகள் மற்றும் டைவர்சி ஃபைடு ஈக்விட்டி ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்தால் போதும். சுமார் 40% தொகையை கன்சர் வேட்டிவ் ஹைபிரிட் ஃபண்ட், பேலன்ஸ்டு அட்வான் டேஜ் ஃபண்டுகளில் பிரித்து முதலீடு செய்து வரலாம்.

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் இ.பி.எஃப் மற்றும் என்.பி.எஸ் ஆகியவற்றில் 15 - 20% தொகையை முதலீடு செய்துவரலாம். என்.பி.எஸ்ஸில் ஈக்விட்டி அளவைக் குறைத்து கடன் திட்டங்களில் அளவை அதிகரிக்க வேண்டும். அல்லது ஆட்டோ சாய்ஸைத் தேர்வு செய்ய வேண்டும். இவர்களும் 10% தொகையை டிஜிட்டல் தங்கம் மற்றும் ரெய்ட்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வரலாம்.

இவர்களுக்கு ஓய்வுக்காலத்துக்கு இன்னும் சுமார் 15 ஆண்டுகள் இருப்பதால், ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் தாங்கும் திறன் இருக்கும்பட்சத்தில் முதலீட்டுத் தொகையில் சுமார் 5% தொகையை மிட்கேப் நிறுவனப் பங்குகள் அல்லது மிட் கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்து வரலாம்.

சுயதொழில் செய்பவர்கள், வியாபாரம் செய்ப வர்கள் இ.பி.எஃப் முதலீட்டுக்கு பதில் பொது மக்களுக்கான பி.பி.எஃப் திட்டத்தில் முதலீடு செய்து வரலாம். அல்லது என்.பி.எஸ் திட்டத்தில் முதலீடு செய்து வரலாம்.

நிதி ஆலோசகரின் உதவி...

ஓய்வுக்காலத்துக்கான முதலீடு செய்வதில் ஏதா வது சந்தேகம் இருந்தால் அல்லது சிக்கல் ஏற்பட் டால் நிதி ஆலோசகரின் உதவியை நாட தயங்கக் கூடாது. காரணம், வருமானம் வராத காலத் துக்காக வருமானம் ஈட்டும் காலத்தில் சரியாக சேமிப்பது மற்றும் முதலீடு செய்வது மிக முக்கியம்.

நிதி ஆலோசகரின் உதவி இல்லாமல் நீங்களே ஓய்வுக்கால முதலீட்டை மேற்கொண்டு வந்தாலும் இடையிடையே நல்ல நிதி ஆலோசகரின் ஆலோசனை யைப் பெறுவது நல்லது. காரணம், உங்களின் ஓய்வுக் கால முதலீட்டை சரியாகதான் மேற்கொண்டு வருகிறீர்களா, தற்போதைய வயதில் சேர்க்க வேண்டிய தொகையை சரியாக சேர்த்திருக்கிறீர்களா என்பதை அவர்களால்தான் சரியாகக் கணக்கிட்டு சொல்ல முடியும்.

(திட்டமிடல் தொடரும்)