சன்பார்மா கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் நிகரலாபம் 6.96 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,308.96 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் ரூ.1,223.71 கோடியாக இருந்தது. இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 6,977.10 கோடியாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.7, 136.96 கோடியாக உயர்ந்து காணப்பட்டது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2017-18ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 68.96 சதவிகிதம் குறைந்து ரூ.6,964.37 கோடியிலிருந்து ரூ. 2,161.55 கோடியாக சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் ரூ.26,489.37 கோடியாக சரிவடைந்துள்ளது. இது இதற்கு முந்தைய 2016-17 ம் நிதியாண்டில் ரூ.31,578.44 கோடியாக மிகவும் அதிகரித்து இருந்தது.
மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டிற்கு ரூ.1 முகமதிப்பு கொண்ட பங்கிற்கு ரூ.2 டிவிடெண்ட் அறிவித்துள்ளது. இந்த டிவிடெண்ட் வரும் செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் வழங்க தி்ட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.